ஃப்ளைட் டிக்கெட்டை Cheap-ஆ புக் பண்ண 5 டிப்ஸ்களைப் பத்திதான் நாம இந்தக் கட்டுரைல தெரிஞ்சுக்கப் போறோம்.
ஃப்ளைட் டிக்கெட்
விமானப் பயணம், நீங்கள் விரும்பும் இடத்துக்கு குறைவான நேரத்தில் சென்றடைய வழிவகுக்கும் என்றாலும், அதற்கு நீங்கள் கொஞ்சம் கூடுதலாகவே செலவழிக்க வேண்டி வரும். அதேநேரம், ஃப்ளைட் டிக்கெட் புக் செய்வதில் கொஞ்சம் புத்திசாலித்தனமாக செயல்பட்டால், உங்களால் விலை குறைவாகவே டிக்கெட் புக் செய்ய முடியும். அப்படியான 5 எளிய வழிகளைத் தெரிஞ்சுக்கலாமா?
Early Bird
Departure Date எனப்படும் நீங்கள் பயணம் செய்ய வேண்டிய நாள் நெருங்க நெருங்க விமான டிக்கெட்டின் விலை அதிகமாகும். இதனால், நீங்கள் பயணம் செய்ய வேண்டிய தேதியை முடிவு செய்துவிட்டால், முன்கூட்டியே டிக்கெட்டை புக் செய்தால் விலை கம்மியாகவே புக் செய்ய முடியும். பயணம் செய்வதற்கு 2 அல்லது 3 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் புக் செய்வதன் மூலம் விலை குறைவாகச் செய்யலாம்.
தேதிகள்
நீங்கள் பயணம் செய்யக் கூடிய தேதி விஷயத்தில் கொஞ்சம் நெகிழ்வுத் தன்மையோடு இருப்பது நல்லது. ஒவ்வொரு ஆண்டிலும் நீங்கள் பயணம் செய்ய நினைக்கும் சீசனைப் பொறுத்தும், வாரத்தில் நீங்கள் பயணம் செய்ய நினைக்கும் நாளைப் பொறுத்தும் டிக்கெட் விலை வித்தியாசப்படும். பொதுவாக வார இறுதி நாட்களை விட மத்தியில் இருக்கும் நாட்களில் விலை குறைவாக இருக்கும்.
ஒப்பீடு
விமான டிக்கெட்டுகளைப் பொறுத்தவரை பல சர்ச் என்ஜின்களிலும், அதைப் பற்றி தேடி, ஒப்பீடு செய்தபிறகு டிக்கெட் புக் செய்யுங்கள். சில சர்ச் என்ஜின்களில் டிக்கெட் விலை அதிகமாக இருக்கும். இதனால், Google Flights, Skyscanner போன்ற பிரபலமான சர்ச் என்ஜின்களில் விலை ஒப்பீடு செய்து, தேர்வு செய்யுங்கள்.
GO INCOGNITO
பல வெப்சைட்களைப் போல புக்கிங் சைட்களும் உங்களின் பிரவுசரில் இருந்து தகவல்களை சேமித்து வைத்து, அதற்கேற்ப உங்களுக்கு சர்ச் ரிசல்ட்களைக் காட்டும். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் நீங்கள் அதிகம் பயணிக்கிறீர்கள் என்பதை உங்களின் சர்ச் ரிசல்ட்ஸ் காட்டிவிடும். இதனால், INCOGNITO விண்டோவிலும் தேடி ரிசல்டுகளை ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.
வழித்தடம்
பொதுவாக விமானப் பயணத்தின்போது நீங்கள் தேர்வு செய்யும் வழித்தடம், டிக்கெட் விலையில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தவகையில், அதிகம் பேர் பயணிக்கும் வழித்தடத்தை விட, குறைவான பேர் பயன்படுத்தும் வழித்தடத்தைத் தேர்வு செய்தால், டிக்கெட் விலை குறைவாக இருக்கும். அதேபோல், கனெக்டிங் ஃப்ளைட்களை நீங்கள் தேர்வு செய்தாலும் டிக்கெட் விலை ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு.
Also Read –