பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்தது உங்களுக்கு நினைவில்லையா… சில ஈஸி ஸ்டெப்களில் அதை செக் செய்வது எப்படி?
பான் கார்டு – ஆதார் இணைப்பு
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில், அது மார்ச் 31,2022 உடன் முடிவுக்கு வருகிறது. இந்த காலக்கெடுவுக்குள் இணைக்காதவர்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். அத்தோடு பணப் பரிவர்த்தனைகளிலும் சிக்கல் ஏற்படலாம் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் பான் – ஆதார் எண் இணைப்பை மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு மேற்கொள்ளலாம் என்றாலும், குறிப்பிட்ட தொகையை நீங்கள் அபராதமாகச் செலுத்த வேண்டி வரும்.
நம்முடைய பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்கிறதா… இணைத்தோமா என்பது நினைவில் இல்லையா… ஈஸியா எப்படி செக் பண்றது?
ஸ்டெப்-பை-ஸ்டெப் வழிமுறை இதோ…
செக் செய்வது எப்படி?
- https://www.pan.utiitsl.com/panaadhaarlink/forms/pan.html/panaadhaar – என்கிற இணைப்பைச் சொடுக்குங்கள்.
- அங்கே இருக்கும் டயலாக் பாக்ஸ்களில் உங்கள் பான் கார்டு எண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்யுங்கள்.
- ஸ்கிரீனில் தெரியும் ‘Captcha’-வைப் பதிவு செய்து ‘Submit’ பட்டனைத் தட்டுங்கள்.
- உங்கள் பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதன் ஸ்டேட்டஸ் இன்னொரு பேஜில் காட்டப்படும்.
சரி, புதிதாக இணைப்பது எப்படி?
- www.incometaxindiaefiling.gov.in என்கிற இணையதள முகவரிக்குச் சென்று, இடதுபுறம் இருக்கும் ஆப்ஷன்களில் ‘link Aadhaar’ என்பதை கிளிக் செய்யவும்.
- புதிதாகத் திறக்கும் பேஜில் உங்கள் ஆதார், பான் கார்டு எண்,உங்களின் முழுப் பெயர், மொபைல் நம்பர் உள்ளிட்ட மற்ற விவரங்களை உள்ளிடுங்கள்.
- ஸ்கிரீனில் தெரியும் captcha கோடை என்டர் செய்து, ‘link Aadhaar’ பட்டனைத் தட்டவும்.
மெசேஜ்
உங்கள் செல்போனில் இருந்து 56677 என்கிற நம்பருக்கு UIDPAN <உங்கள் 12 இலக்க ஆதார் எண்> <உங்களின் 10 இலக்க பான் எண்> என்கிற ஃபார்மெட்டில் மெசேஜைத் தட்டியும் பான் கார்டுடன் ஆதாரை எண்ணை இணைக்க முடியும். இந்த வசதியை எந்தவொரு நம்பரில் இருந்தும் செய்யலாம்.
2022 மார்ச் 31-க்குள் உங்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துவிடுங்கள். மறந்துவிடதீர்கள்…மறந்தும் இருந்துவிடாதீர்கள் மக்களே!
Also Read – உங்கள் முதலீட்டு பிளானில் தங்கம் ஏன் இருக்க வேண்டும் – 5 காரணங்கள்!