ஓவர் டைம் உடம்புக்கு ஆகாது பாஸ்..ஸ்கிரீன் டைமைக் குறைக்க 5 எளிய வழிகள்!

ஸ்மார்ட்போன் தொடங்கி டிஜிட்டல் கேட்ஜெட்டுகளோடு நாம் எவ்வளவு அதிக நேரம் செலவிடுகிறோமோ.. அந்த அளவுக்கு நமது உடல்நலனையும் மனநலனையும் அது அதிகம் பாதிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஸ்கிரீன் டைமைக் குறைப்பதற்கான எளிய வழிகள் என்னென்ன?

ஸ்கிரீன் டைம்

தொழில்நுட்ப வசதி நமக்கு எத்தனையோ புதிய புதிய சாத்தியங்களையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்பது நிதர்சனம்தான். அதேநேரம், நம்மைச் சுற்றியிருக்கும் நிஜ உலகைவிட ஸ்மார்ட்போன், கேட்ஜெட்களோடு அதிக நேரத்தைச் செலவிடத் தொடங்கிவிட்டோம். இது, உடல் நலன் மட்டுமல்ல மனநலனுக்குமே ஆபத்தானது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை மணியடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஸ்கிரீன் டைம் அதிகமாக அதிகமாக, அது என்ன மாதிரியான உடல்நலப் பிரச்னைகள் மற்றும் மனநலப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது என்பது பற்றிய ஆய்வுகள் சமீபகாலமாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன… அதேபோல், சோசியல் மீடியா பயன்பாட்டுக்கும் தனிமையாக உணர்தல், மன உளைச்சல் போன்ற பிரச்னைகளுக்கு இருக்கும் தொடர்பு குறித்தும் ஆய்வுகள் தொடர்ந்து வருகின்றன.

ஸ்கிரீன் டைம்
ஸ்கிரீன் டைம்

இந்தநேரத்தில், ஸ்கிரீன் டைமைக் குறைப்பது எப்படி.. சில எளிய வழிகளைத் தெரிஞ்சுக்கலாம் வாங்க..

கணக்கு முக்கியம் பாஸ்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் வொர்க் ஃப்ரம் ஹோமுக்குப் பெரும்பாலானோர் மாறிவிட்டதால், ஸ்கிரீன் டைமும் எக்கச்சக்கமாக எகிறிவிட்டது என்றே சொல்லலாம். ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் ஸ்மார்ட்போன் போன்ற கேட்ஜெட்களின் ஸ்கிரீனில் நீங்கள் செலவிடுகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இதற்கான ஆப்ஷன்கள் இருக்கின்றன. அந்த செட்டிங்க்ஸைப் பயன்படுத்தி, சோசியல் மீடியா உள்ளிட்டவைகளில் இவ்வளவு நேரத்தைத்தான் பயன்படுத்தலாம் என்ற லிமிட்டையும் நீங்கள் செட் செய்ய முடியும். அப்படியான செட்டிங் உங்களின் ஸ்கிரீன் டைமைக் குறைக்க உதவும்.

ஸ்கிரீன் டைம்
ஸ்கிரீன் டைம்

Video Fatigue

கேமரா முன்னால் அதிக நேரம் செலவிடுவது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதோடு, சோர்வையும் ஏற்படுத்திவிடும். விர்ச்சுவல் மீட்டிங்குகள் அல்லது வீடியோ காலில் அதிக நேரம் செலவிட்டால், அது மீட்டிங் பேட்டிக் அல்லது ஜூம் பேட்டிக் எனப்படும் ஒருவகையான சோர்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். இதனால், வீடியோ காலுக்கான டைமிங்கை சரியாக நிர்வகித்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை அவசியமற்ற வீடியோ காலைத் தவிர்த்துவிடுங்கள். வீடியோ கால்களுக்கு இடைப்பட்ட நேரத்தில் ஒரு குட்டி வாக்கிங் அல்லது வீட்டுக்குள்ளேயே ஒரு சின்ன வார்ம் அப் பண்ணிக்கோங்க.

பிரேக் அவசியம் பாஸ்

ஸ்கிரீன் முன்னாலதான் உங்க வேலையே அப்டின்ற சூழ்நிலைல இருந்தா, கண்டிப்பா அரை மணி நேரத்துக்கு ஒரு குட்டி பிரேக் எடுத்துட்டு, வேற பக்கம் உங்க கவனத்தை செலுத்துறதை வழக்கமாவே வைச்சுக்கோங்க. இந்த மாதிரியான குட்டி பிரேக் சமயங்கள்ல உட்கார்ந்திருக்க சீட்டை விட்டு எழுந்து, சின்னதா கை, கால்களை ஸ்ட்ரெச் பண்ணுறது நல்லது. முதுகு, கழுத்து போன்ற பகுதிகளுக்கும் சின்னதா வார்ம்-அப் கொடுங்க. சேர்ல உட்கார்ந்துகொண்டே செய்யுற சில யோகாசனங்கள் இருக்கு. அதைக் கத்துக்கிட்டு சீரான இடைவெளிகள்ல 5 நிமிஷம் பண்ணிப்பாருங்க.. அது வேற லெவல் எனர்ஜி கொடுக்கும்.

டெக்னாலஜி

உங்களால ஸ்கிரீன் டைமைக் கட்டுப்படுத்த முடியல அல்லது ஸ்கிரீனை விட்டு வெளில அதிகம் போக முடியலைனு நினைக்கிறீங்களா… இதுக்கும் ஒரு வழி இருக்கு. அப்படியான டைம்கள்ல டெக்னாலஜியவே துணைக்குக் கூப்டுங்க.. உங்க ஸ்மார்ட்போன், இல்லாட்டி கம்ப்யூட்டர்ல ரெகுலர் இன்டர்வெல்ல பிரேக் எடுக்க ஒரு அலாரத்தை செட் பண்ணுங்க. அலாரம் அடிக்குறப்ப ஸ்நூஸ் பண்ணாம ஒரு குட்டி பிரேக் எடுத்துக்கோங்க. அதேமாதிரி, சோசியல் மீடியா மெசேஜ்களுக்கான நோட்டிபிகேஷன்களை ஆஃப் பண்ணி வைச்சுடுங்க. பிரேக் டைம்ல போனை யூஸ் பண்றதை அறவே தவிர்த்திடுங்க. போன் இல்லாம கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ண டிரை பண்ணுங்க. உங்க உடல்நலனைக் கவனிச்சுக்க ஃபிட் பிட் மாதிரியான கேட்ஜெட்ஸும் யூஸ் பண்ணலாம்.

ஸ்கிரீன் டைம்
ஸ்கிரீன் டைம்

நோ ஃபுட் – நோ கேட்ஜெட்

ஸ்கிரீன் முன்னால அமர்ந்து சாப்பிடுவதை முற்றிலுமா தவிர்த்திடுங்க. அதேமாதிரி ஸ்மார்ட்போனைப் பயன்படுத்திக் கொண்டே உணவு எடுத்துக் கொள்வதையும் அவாய்ட் பண்ணிடுங்க. ஸ்கிரீன் டைமைக் குறைப்பதில் இன்னொரு முக்கியமான விஷயம், உங்கள் படுக்கையறைக்குள் ஸ்மார்ட் போன் போன்ற கேட்ஜெட்டுகளை எடுத்துச் செல்வதைத் தவிர்த்து விடுங்கள். கேட்ஜெட்களோடு இருக்கும் நேரத்தைக் குறைத்துவிட்டு, குடும்பத்தினரோடு அதிக நேரம் செலவிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

Also Read – பிரேக்-அப்ல இருந்து மீண்டு வருவது எப்படி… உளவியலாளர்கள் சொல்லும் எளிய வழிகள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top