உங்கள் ஆதார் எண்ணோடு மொபைல் நம்பரை இணைத்துவிட்டீர்களா.. பலன்கள் தெரியுமா?

உங்கள் ஆதார் எண்ணோடு மொபைல் நம்பரை இணைப்பது ஏன் முக்கியம்… அதனால் ஏற்படும் பலன்கள் என்னென்ன?

ஆதார் எண்

தேசிய அடையாள ஆணையத்தால் வழங்கப்படும் ஆதார் எண், இன்று அத்தியாவசிய ஆவணங்களுள் ஒன்றாக மாறியிருக்கிறது. ஆதார் எண் என்பது அரசின் சேவைகள் பலவற்றைப் பெறுவதற்கு அத்தியாவசியம் என்ற நிலை இருக்கிறது. இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரின் முக்கியமான அடையாள எண்ணாகவும் இந்த 12 இலக்க எண் இருக்கிறது. முக்கிய அடையாள ஆவணமான ஆதாரோடு மொபைல் எண்ணை இணைத்திருந்தால், அரசின் சேவைகளை ஆன்லைனில் அளிக்கும் இணையதளங்கள் சிலவற்றில் லாக்-இன் செய்து இணையம் மூலமாகவே அந்தந்த சேவைகளைப் பெற முடியும். இதனால், உங்கள் ஆதார் எண்ணோடு மொபைல் நம்பரை இணைக்க வேண்டியது அவசியமாகிறது.

ஆதார் அட்டை
ஆதார் அட்டை

எப்படி இணைப்பது?

ஒருவேளை உங்கள் ஆதார் கார்டில் மொபைல் நம்பரை இணைக்காமல் இருந்தாலோ அல்லது தற்போதைய எண்ணை மாற்றிவிட்டு புதிய நம்பரை அப்டேட் செய்ய விரும்பினாலோ, அருகிலிருக்கும் ஆதார் கேந்த்ராவுக்கு நேரடியாகச் சென்று அப்டேட் செய்ய முடியும். இதற்கு ஆதார் கார்டைத் தவிர வேறெந்த ஆவணமும் தேவையில்லை. இதற்காக அளிக்கப்படும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, உங்கள் பயோமெட்ரிக் ஆத்தென்டிகேஷன் மூலம் புதிய நம்பரை அப்டேட் செய்துகொள்ள முடியும்.

உங்களுக்கு அருகிலிருக்கும் ஆதார் கேந்திரா மையத்தை uidai.gov.in என்ற இணையதளத்தின் மூலமோ, ஆதார் செயலி மூலமோ அறிந்துகொள்ள முடியும். அதேபோல், ஆதார் உதவி எண்ணான 1947 என்ற எண்ணுக்கு கால் செய்தும் அருகிலிருக்கும் மையங்கள் பற்றிய தகவலை அறிந்துகொள்ள முடியும்.

ஆதாரில் இருக்கும் மொபைல் நம்பரை அப்டேட் செய்வது எப்படி?

பல்வேறு பாதுகாப்புக் காரணங்களுக்காக ஆதாரோடு இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் நம்பரை அப்டேட் செய்யும் வசதியை ஆன்லைனில் செய்யத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த வசதியை மேற்கொள்ள நீங்கள் ஆதார் கேந்திர மையத்துக்கு நேரில்தான் போக வேண்டும். அங்கு கொடுக்கப்படும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். அதன்பிறகு பயோமெட்ரிக் மூலம் உங்களின் அடையாளத்தை உறுதி செய்யுங்கள். விண்ணப்பம் ஏற்கப்பட்ட பின்னர், அதற்கான அடையாள எண்ணும் கொடுக்கப்படும். அந்த எண்ணின் உதவியோடு நீங்கள் அதற்கான ஸ்டேட்டஸை அறிந்துகொள்ள முடியும். ஒருவேளை உங்கள் மொபைல் நம்பர், வேறொரு ஆதார் எண்ணோடு இணைக்கப்பட்டிருந்தால், அது பற்றிய தகவல்களும் ஒரு பாப்-அப் மூலம் தெரிவிக்கப்படும். இதனால், அதையும் புகார் செய்து சரிசெய்துகொள்ள முடியும்.

ஆதார் அட்டை
ஆதார் அட்டை

ஆதார் – மொபைல் எண் இணைப்பு – பலன்கள் என்னென்ன?

ஆதார் எண்ணோடு மொபைல் நம்பரை இணைப்பதன் மூலம் பல்வேறு அரசு மற்றும் தனியார் சேவைகளுக்கு அது உதவிகரமாக இருக்கும். அரசின் மானிய உதவிகள், ஓய்வூதியம், ஸ்காலர்ஷிப்கள், வங்கி சேவைகள், காப்பீட்டு நிறுவனங்களின் சேவைகள், வருமான வரித்துறை சேவைகள், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரத் துறையின் சேவைகளைப் பெற இது அடிப்படையான விஷயமாகக் கருதப்படுகிறது.

Also Read – உங்கள் ஆதார் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது… ஈஸியா கண்டுபிடிக்கலாம் வாங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top