Hesham Abdul Wahab

கதறி அழுத மியூசிக் டைரக்டர்… ‘ஹிருதயம்’ ஹேஷம் அப்துல் வஹாப் சம்பவம்!

ஏ.ஆர்.ரஹ்மான் – மணி ரத்னம், ஹாரிஸ் ஜெயராஜ் – கௌதம் மேனன், யுவன் ஷங்கர் ராஜா – வெங்கட் பிரபு கூட்டணி எப்படி உடையுறது கஷ்டமோ அப்படி மலையாளத்துல 2’கே கிட்ஸ் யுகத்துல ஸ்ட்ராங்கான கூட்டணி வினீத் ஸ்ரீனிவாசன் – ஷான் ரஹ்மான் கூட்டணி. இந்தக் கூட்டணியை பிரேக் பண்ண மியூசிக் டைரக்டர்தான் ஹேஷன் அப்துல் வஹாப். அதாங்க, மலையாளத்துல ஹிருதயம்… தெலுங்குல குஷினுலாம் செமயான ஹிட் கொடுத்துட்டு தமிழ்ல இப்போ ஒன்ஸ்மோர் மூலமா அறிமுகமாகுறாரு. இவரோட மொத்த பயணத்தையும் ஒரேயொரு சம்பவத்துல சொல்லிடலாம். கண்டிப்பா உங்களுக்கும் கூஸ்பம்ப்ஸ் ஆகும்.

டிரஸ்ட் மீ…

வினீத் ஸ்ரீனிவாசனோட ஜேக்கப்பிண்ட ஸ்வர்க ராஜ்ஜியம் படம் பண்னும்போது அந்த சீன்ஸ் எல்லாம் ஹேஷம் பாட்டு கேட்டு எழுதிட்டு இருந்துருக்காரு. ஜாப் குரியன்றவரோட பத யாத்ரா, ஹேஷமோட ஆமில்யாருன்ற பாட்டையும் லூப்ல கேட்டுட்டே இருந்துருக்காரு. ஜாப் குரியன்கிட்ட சேர்ந்து எப்பவாவது வொர்க் பண்ணலானு கேட்கும்போது சினிமாக்கு மியூசிக் பண்ண விருப்பம் இல்லைனு சொல்லியிருக்காரு. கட் பண்ணா, வினீத் பார்க்கும்போதுலாம் ஹேஷம் ரொம்ப ஸ்ரக்கிள் பண்ணிட்டு இருந்துருக்காரு. அவருக்குள்ள ஒரு எண்ணம், நம்ம அவர் பாட்டைக் கேட்டு வொர்க் பண்றோம், அவரு ஸ்ட்ரக்கிள் பண்ணிட்டு இருக்காருனு கில்ட்டா ஃபீல் பண்ணியிருக்காரு. இவரோட மியூசிக்ல பாட்டுப் பாடியிருக்காரு

ஒருநாள் அப்படி சந்திக்கும்போது… வினீத்தேட்டா, நீங்க என்னோட வொர்க் பண்றது கொஞ்சம் கஷ்டம். அந்த படம்லாம் கிடைக்காதுனு தெரியும். ஏன்னா, ஷான் ரஹ்மான்கூடதான் வொர்க் பண்ணுவீங்க. ஆனால், உங்க ஃப்ரண்ட்ஸ் யாராவது நல்லப் படங்கள் பண்ணப்போறாங்கனா சொல்லுங்கனு சொல்லியிருக்காரு. அப்போ, இவரால தாங்க முடியல. நைட்டுலாம் 4 மணி வரை இதை நினைச்சு தூங்காமல் அங்க இங்கயும் நடந்து, நாம யெஸ் சொன்னா ஒரு ஆளோட வாழ்க்கையே மாறும்னு யோசிச்சிட்டு இருந்துருக்காரு. மனைவிட்ட இந்த விஷயத்தை சொல்லியிருக்காரு. அவங்க ஷான்கிட்ட பேசுங்க. அவருக்கு புரியும்னு சொல்லியிருக்காங்க. அவரோட நண்பர் ஒருத்தரும் இதையே சொல்லியிருக்காங்க.

ஷான் ரஹ்மான்கிட்ட அடுத்த நாள் போய் சொன்னதும் அவருக்கு முதல்ல ஷாக். அப்புறம் யோசிச்சுட்டு… நீ ஏன் அப்படி சொல்றனு புரியுது. நீ பண்ணுனு சொல்லியிருக்காரு. இவருக்கு மொத்தமா குழப்பம். நேரா ஒரு பள்ளிக்குப் போய் உட்கார்ந்து நாம நண்பனை கைவிடரோமா, இல்லை இன்னொருத்தர்கூட நிக்கிறோமா? எது சரினு ரொம்ப குழப்பம். அதுக்கு முன்னாடி ஹேஷமுக்கு ஃபோன் பண்ணி, நான் உனக்காக ஒரு விஷயம் யோசிக்கிறேன். நீயும் பிரார்த்தனை பண்ணுனு சொல்லியிருக்காரு. அவரும் பள்ளிவாசல்லாம் போயிட்டு வந்துருக்காரு. இவரை ஒரு ஃபளாட்டுக்கு வர சொல்லி ஹால்ல உட்கார வைச்சுட்டு. இவரை ஒரு ரூம்குள்ள கூட்டிட்டுப் போய்ருக்காங்க. என்னைக் கொல்லக் கொண்டு போறாங்கனு அவருக்கு ஒண்ணும் புரியலை.

ஹேஷம்கிட்ட ரூமுக்குள்ளப் போனதும் என்னோட அடுத்தப் படத்துக்கு மியூசிக் பண்ண முடியுமானு இவர் கேட்ருக்காரு. அவ்ளோதான், கத்தி அழுதுருக்காரு. அந்த சிச்சுவேஷனை எப்படி ஹேண்டில் பண்றதுனே தெரியாம வினீத் முழிச்சிட்டு எமோஷனலா நின்றுக்காரு. அப்படியே எழுந்து போய் பாத்ரூம்ல நின்னு அப்டி அழுதுருக்காரு. அழுதுட்டு முகத்தைக் கழுவிட்டு வெளிய வந்து, பத்து வருஷமா இப்படியொரு வாய்ப்புக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருந்துருக்கேன்னு சொல்லியிருக்காரு. மலையாள இண்டர்வியூல வினீத் இதை சொல்லியிருப்பாரு. ரெண்டு பேரும் கண்ணு கலங்கி எமோஷனலாகியிருப்பாங்க. பார்க்குற நாமளும். இதை சொல்லிட்டு இப்போ அவனைப் பாருங்க, எங்க இருக்கான்னு சொல்லுவாரு. அவ்வளவுதான் நண்பர்களே!

நான் சமீபத்துல கேட்ட பெஸ்ட் சம்பவம் இதுதான். ஹிருதயம்ல வர்ற தர்ஷனா பாட்டு இப்பவும் டிரெண்ட். எவ்வளவோ பேர் ரிப்பீட்ல கேக்குறாங்க. அந்தப் படத்துல மொத்தம் 15 பாட்டு எல்லாமே ஹிட்டு. அடுத்தது கொடுத்தது எல்லாமே ப்ளாக்பஸ்டர்தான். சூப்பர் சிங்கர் மாதிரி சாதாரண சிங்கிங் ஷோல போட்டியாளரா வந்து மலையாளத்துல மோஸ்ட் வான்டடா மாறி, தெலுங்குல குஷி, ஹாய் நன்னானு படங்கள் பண்ணி அங்கயும் மோஸ்ட வான்டடா மாறி, இப்போ தமிழுக்கு வந்து சவுத் இந்தியால மோஸ்ட் வான்ட்டட் மியூசிக் டைரக்டரா ஹேஷம் மாறியிருக்காரு. இப்போ நான் சொன்ன படங்களோட பாடல்களைக் கேட்ருப்பீங்க.

சூஃபி பாடல்ல மனுஷன் வேறலெவல் பண்ணுவாரு. தூ குஜா, மன் குஜானு பாட்டு ஒண்ணு இருக்கு. கேளுங்க அப்புறமா..!

Also Read – பாத்ரூம் கிளீனர் டு ஹாலிவுட் ஆக்டர்… யார் இந்த டான் லீ?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top