குடும்பம்

உங்க ஃபேமிலியோட டைம் ஸ்பெண்ட் பண்ண சில ஐடியாக்கள்!

இன்றைய பரபரப்பான சூழலில் தங்களது குடும்பத்தினருடன் நேரங்களை செலவழிப்பது என்பது பெரும்பான்மையானவர்களுக்கு கடினமான விஷயமாக உள்ளது. தங்களுக்கு கிடைக்கும் குறைந்த நேரங்களிலும் டெக்னாலஜியுடன் தங்களது பொழுதுகளை கழிக்கின்றனர். ஆனால், வேலை தொடர்பான அழுத்தம், நிதி நெருக்கடி ஆகியவை ஒருபக்கம் இருந்தாலும் கொரோனா தொடர்பான ஊரடங்கால் பலரும் தங்களது நேரங்களை குடும்பத்தினருடன் செலவிட்டு வந்தனர். இந்த நிலையில், தற்போது மீண்டும் ஊரடங்குகளில் தளர்வுகள் ஏற்பட்டு தங்களது இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர். பிஸியான இந்த நேரங்களில் குடும்பத்தினருடன் குவாலிட்டி மற்றும் குவான்டிட்டியான நேரங்களை எப்படி செலவிடலாம் என்பதற்கான சில ஐடியாக்களை இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

குடும்பம்

* பெரும்பான்மையான மக்களுக்கு டின்னர்டைம் என்பதற்கான சரியான அர்த்தம் தெரியவில்லை என்றே கூறலாம். ஆரோக்கியமான குடும்ப உறவு நீடிப்பதற்கு குடும்ப உறுப்பினர்கள் இடையே நடக்கும் கம்யூனிகேஷன் என்பது மிகவும் முக்கியமானது. இந்த கம்யூனிகேஷன் நடப்பதற்கு டின்னர்டைம் மிகவும் உதவிகரமாக இருக்கும். தங்களது வாழ்க்கையில் நடந்த அன்றாட விஷயங்களை குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்துகொள்ளவதும், அதனை மற்றவர்கள் காது கொடுத்து கவனமாக கேட்பதும் முக்கியம். நீங்கள் மற்றவர்கள் மீது வைத்திருக்கும் மதிப்பையும் நம்பிக்கையையும் வளர்க்க இந்த டின்னர்டைம் உதவும். அதனால், டின்னர்டைமில் மொபைல், டிவி போன்றவற்றை பார்ப்பதைத் தவிர்த்து உங்களது குடும்பத்தினருடன் டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க.

* வீட்டில் இருப்பவர்கள் குழந்தைகளுடன் சேர்ந்து வாசிப்பு பழக்கத்தை மேற்கொள்ளலாம். இதனால், உங்களது குழந்தைகளுக்கு வாசிப்பின்மீது ஆர்வம் ஏற்படும். அதுமட்டுமல்ல, உங்களது குழந்தைகளுக்கு மொழி வளர்ச்சியும் ஏற்படும். புத்தகத்தை சேர்ந்து வாசித்து முடித்ததும் படித்தவற்றைக் குறித்து விவாதிக்கலாம். இதனால், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சிந்தனைத்திறனும் சமூகத்தைப் பார்க்கும் பார்வையும் மாறுபடும்.

* உங்களது குழந்தைகளுக்கு வீட்டுப்பாடங்களில் உதவி செய்வதன் மூலம் அவர்களுடன் நேரத்தை நீங்கள் செலவிடலாம். நீங்கள் வீட்டுப்பாடங்களை செய்ய உதவி செய்வது குழந்தைகளுக்கு படிப்பின் மீதான ஆர்வத்தைக் கூட்டலாம். பள்ளிகளில் தரங்களையும் உயர்த்தலாம். வீட்டுப் பாடங்களின் தேவைகளுக்காக கடைகளுக்குச் செல்வது, கூடுதல் தகவல்களுக்காக குழந்தைகளை நூலகங்களுக்கு அழைத்துச் செல்வது போன்றவையும் அவர்களுடன் நேரம் செலவிடுவதற்கான வாய்ப்பாக அமையும்.

* வீட்டில் நீங்கள் நேரம் செலவழிக்க விரும்புபவர்களுடன் இணைந்து ஏதாவது ஒரு ஹாபியை புதிதாக ஆரம்பிக்கலாம். எடுத்துக்காட்டாக கிராஃப்ட்ஸ், சமைப்பது, விளையாடுவது மற்றும் பைக்கிங் போன்றவை செய்யலாம். பெரும்பாலும், அந்த ஆக்டிவிட்டிகள் ஃபன்னாக இருப்பது இன்னும் கொஞ்சம் நெருக்கத்தை உங்களுக்கு மத்தியில் ஏற்படுத்தும். நீங்கள் டைம்ஸ்பெண்ட் பண்ண நினைக்கும் நபருக்கு அவ்வப்போது மெசேஜ்களை அனுப்பி டச்சிலேயே இருங்கள். நீங்கள் பிஸியான நேரங்களிலும் அவரைப் பற்றி நினைக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். இதனால், நீங்கள் உங்களது நபருடன் நேரத்தை செலவழிக்கும்போது பாஸிட்டிவான சூழலாக இருக்கும். முடிந்தவரை நீங்கள் அவர்களுடன் இருக்கும்போது உங்களது மொபைலை பயன்படுத்துவதை தவிருங்கள்.

* வாரத்துக்கு ஒருமுறை வெளியே சென்று உணவருந்துங்கள். மாதத்துக்கு ஒருமுறையாவது புதிய இடங்களுக்கு செல்வதைப் பற்றி சிந்தியுங்கள். முடிந்தவரை அதனை செயல்படுத்தவும் முயற்சி செய்யுங்கள். அந்த இடம் உங்களது நகரைவிட்டு வெகு தொலைவில் இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. உங்களது ஊருக்குள்ளேயே இருக்கும் இயற்கையான இடங்களுக்குச் சென்று அங்கு உங்களது நேரத்தை செலவிடலாம்.

Also Read : கொஞ்சம் கவிதை… கொஞ்சம் பாடல் வரிகள்.. சில சம்பவங்கள் – நா.முத்துக்குமார் மேஷ்அப்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top