நமக்கு கடத்துறவன் தேவை. ஏதோஒரு வகைல நல்லவனா இருக்கான். அவனை எப்படி பாஸிட்டிவான ஆளா மாத்துறதுனு யோசிக்கும்போது.. அவன் ரொம்ப கம்மியான காசு வாங்கிட்டு கடத்துறான். மனித நேயம் மிக்க ஒருத்தனா இருக்கான். அரசியல்வாதிகள் இந்த படத்துல ரொம்ப நேர்மையானவரா இருப்பாங்க. ஆனா, ஈவு.. இரக்கம்லா அவங்களுக்கு இருக்காது. கெட்டவன்.. ஆனா, ஈவு.. இரக்கம் அதிகமா இருக்கும் அப்டினுலாம் யோசிக்கும்போது அந்த ஸ்கிரிப்ட்ல எல்லாமே வந்து சேர்ந்துக்கும். இப்படி நலன்குமாரசாமி இண்ட்ரஸ்டிங்கா சொன்ன பின்னணி கொண்ட படத்தோட பெயர், சூது கவ்வும்.
புதுப்பேட்டைல தொடங்கி நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணும் வரைக்கும்.. ஹீரோக்கு பின்னாடி ஒரு ஆளா அடையாளம் இல்லாமல் இருக்குறவராகவும்.. அதுக்கப்புறம் மாஸ் இல்லாமல், கதைக்கு என்ன விதமான நடிப்பு தேவையோ அதை கொடுத்துட்டுப் போற ஆளாகவும் விஜய் சேதுபதி இருந்தாரு. அவரை மாஸ் இமேஜுக்கு ஒரே ஒரு சீன்ல மாத்திவிட்ட ஆள்தான் நலன் குமாரசாமி. பேங்க் மேனேஜர் பொண்ணை கடத்திட்டு கதவை திறந்து கண்ணாடி போட்டுட்டு வர்றதை மாஸா பண்ண முடியும்னா அதை நலன் குமாரசாமி படத்துல, சந்தோஷ் மியூசிக்ல, விஜய் சேதுபதியாலதான் பண்ண முடியும்.
சிவகார்த்திகேயன் கரியர்லயும் சாதாரண ஹீரோவாதான் ஆரம்பத்துல இருந்தாரு. அவருக்காக படத்தைலாம் பார்க்க வர்றவங்க கம்மிதான். அதை அப்படியே மாத்துன படம், வருத்தப்படாத வாலிபர் சங்கம். அவரோட கரியர்ல மிகப்பெரிய திருப்புமுனையா இருந்துச்சு. அதுக்கப்புறம் ரஜினிமுருகன் சிவா மாஸை இன்னும் கூட்டிச்சு. காமெடி மட்டும்தான் பண்ணுவாரு. ஃபைட் பண்ணா ஏத்துக்கலாம் மாட்டோம்னு நினைச்சுட்டு இருந்தவரோட ஃபைட்டை ஏத்துக்க வைச்சதுல அந்தப் படம் முக்கியமானது. இந்த ரெண்டு படத்துக்கும் பொன்ராம்தான் ஹீரோ. ஆனால், மூணாவது அவங்க கூட்டணி சொதப்புனது வருத்தம்.
சூர்யாவோட கரியர்லயும் சரி, ஜீவாவோட கரியர்லயும் சரி, விஜய் சேதுபதியோட கரியர்லயும் சரி ஐகானிக்கா சீன்கள் உள்ள படத்தைக் கொடுத்தவர் கே.வி.ஆனந்த். நாலு படம் எடுத்தாலும் நச்சுனு எடுக்கணும். இவரோட ஒரு சில படங்களைத் தவிர மற்ற படங்கள் அதுல பேசுற விஷயங்கள் எல்லாமே யுனிக்கா இருக்கும். சில்லுனு ஒரு காதல், வாரணம் ஆயிரம், வேல்னு தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து செம ஃபார்ம இருந்தாரு. அவர் கரியர்ல மாஸான இமேஜுக்கு அவரை இந்த லிஸ்ட்ல தூக்கி நிப்பாட்டுனது அயன்தான். டயலாக்ஸ், ஃபைட் சீன்ஸ், போலீஸுக்கு ஹெல்ப் பண்றது, ஹாரிஸ் மியூசிக் எல்லாமே தரம்.
Also Read – லோகேஷின் ஃபேவரைட் உறியடி…. அப்படி என்ன ஸ்பெஷல்?
ஜீவா கரியர்லயும் கே.வி.ஆனந்த் முக்கியமான சம்பவம் பண்னியிருக்காரு. அந்தப் படத்தை முதல்ல சிம்பு பண்ண இருந்ததா சொல்லுவாங்க. ஆனால், சில பல காரணங்களால கோ படத்துல அவர் நடிக்கலை. கோ ரொம்பவே இயல்பான அரசியலை அழகா பேசுன கமர்ஷியல் படம். சென்ஸிட்டிவான விஷயங்களை எப்படி கமர்ஷியலா கொண்டு போய் சேர்க்குறதுன்றது கே.வி.ஆனந்துக்கு ரொம்பவே கை வந்த கலையா இருந்துச்சு. பெர்ஃபாமென்ஸ் ரீதியா பல சம்பவங்களை ஜீவா பண்ணியிருந்தாலும் கமர்ஷியல் ரீதியில் அவர அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டுப் போனது கோதான்.
நயன்தாரா ஹீரோக்களோட சேர்ந்து நல்ல படங்களை பண்ணிட்டு இருந்தாங்க. அப்போலாம் அவங்களை லேடி சூப்பர் ஸ்டார்ஸ்னு சொன்னாலும், பெரிய ஹீரோக்கள் கூட சேர்ந்து நடிக்கிறதால மட்டும் லேடி சூப்பர் ஸ்டார்னு அக்சப்ட் பண்ணிக்க முடியுமானு கேள்வி இருந்துச்சு. அதுமட்டுமில்லாமல் சோலோவா அவங்க நடிக்க ஆரம்பிச்ச பல படங்கள் செம மொக்கையா இருந்துச்சு. அப்போதா கோபி நயினார் அறம்ன்ற தமிழ் சினிமாவுக்கும் சமூகத்துக்கும் முக்கியமான படைப்பைக் கொடுத்து, அவங்க உண்மையிலேயே லேடி சூப்பர் ஸ்டார்தான்னு மக்கள் மத்தில பேச வைச்சாரு.
திரிஷா இல்லைனா நயன்தாரானு சொன்னாரும். திரிஷா இல்லைனா யாரும் இல்லை.. 20 வருஷாமா இண்டஸ்ட்ரீல தளபதி சொன்ன மாதிரி ஸ்ட்ராங்க நிக்கிறாங்கள்ல.. அப்போ அவங்கதான் சூப்பர் ஸ்டார்னு திரிஷா ஃபேன்ஸ் சண்டை போட்டாங்க. நயன்தாராக்கு சொன்ன மாதிரிதான், இவங்களும் பெரிய ஸ்டார்ஸ்கூட படம் பண்றதால அப்படி சொல்ல முடியாது. சோலோவா வந்த படங்களும் சோகமாவே முடிஞ்சுது. அந்த நேரத்துலதான் 96 படம் வந்துச்சு. ஏன்டா இதுவும் சோலோ படம் இல்லையேனு நீங்கலாம் கேக்கலாம். ஆனால், அந்தப் படத்துல ஜானுவா விஜய் சேதுபதிக்கு ஈக்குவலா ஸ்கோர் பண்ணாங்க. அப்படி ஒரு படம் இனி அவங்களுக்கு கிடைக்குமானு தெரியல. பிரேம்குமாரோட அந்தக் கதை, காஸ்டிங்தான் மாஸ்!
கவின் கரியர்ல முக்கியமான படம் டாடா. என்னங்க அந்தப் படத்துல கவினை பார்க்கும்போது என்னோட கேரக்டரை பார்க்குற மாதிரி இருக்குற ஸ்ட்ரெயிட்டா மனசுல நுழைஞ்சு இடம் பிடிச்சாரு. அந்தப் படத்தோட டைரக்டர்தான் கணேஷ் பாபு. இப்போதான் என்ன ஃப்ரெஷா செஞ்சு அனுப்பிருக்காங்கனு சொல்ற சீன்தான் அது. எல்லாரோட வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்லயும் பல்நாள்கள் இருந்துச்சு.