தமிழ் சினிமால இன்னைக்கு இருக்குற ரொம்பவே யூனிக்கான வாய்ஸ் உள்ள சிங்கர்ல, முக்கியமானவங்க தீ. அதாவது, பாட்டைக் கேட்டவுடனேயே, நமக்கு அடையாளம் தெரியுற வாய்ஸ். அவங்க பாடுன முதல் பாட்டுல இருந்து கடைசியா பாடுன பாட்டு வரைக்கும் எல்லாமே வேற லெவல் ப்ளாக்பஸ்டர் ஹிட்டு. பேரு தெரிஞ்சு வைச்சாங்களா… இல்லையானு தெரியலை… ஆனால், உண்மையாவே தீயாதான் பாடுறாங்க. என்னமோ ஒரு மேஜிக் அவங்க வாய்ஸ்ல. கேட்டதும் நம்மள மயக்கிறுது. மெலடி, குத்து, டூயட், மாஸ் அப்டினு என்ன ஜானர் கொடுத்தாலும் அவங்க வாய்ஸ்க்கு அப்படியே செட் ஆகுது. இதுவும் ஒரு வரம்தான் போல. எவ்வளவோ பாட்டு தீ பாடியிருக்காங்க. அதுல அவங்க பண்ண தரமான 5 சம்பவங்களைப் பத்தியும் அவங்களைப் பத்தியும் தான் இந்த வீடியோல நாம தெரிஞ்சுக்கப்போறோம்.
யார் இந்த சிங்கர் தீ?
ஆஸ்திரேலியால வளர்ந்த இலங்கைத் தமிழர்தான் தீ. இவங்க உண்மையான பெயர், தீட்சிதா. அவங்க அம்மா மீனாட்சி, சந்தோஷ் நாராயணனை மறுமணம் பண்ணிக்கிட்டாங்க. இப்போ இவங்க செம ஹேப்பியான ஃபேமிலியா வாழ்ந்துட்டு இருக்காங்க. தீ-க்கு சின்ன வயசுல இருந்தே மியூசிக்னா ரொம்ப புடிக்கும். அவங்க பாட்டி, அம்மா எல்லாருமே கர்னாடிக் மியூசிக் கத்துக்கிட்டாங்களாம். அதுனால, ரத்தத்துலயே இவங்களுக்கு மியூசிக் ஞானம் ஊறிடுச்சுனு சொல்லலாம். ஃப்ரெண்ட்ஸ்கூட சேர்ந்து பாடுறது, வீட்டுல பாடுறதுனு ட்ரெயின் ஆகிட்டே இருந்துருக்காங்க. எல்லா விஷயங்களையும் மியூசிக் மூலமா உணர விரும்புவாங்களாம். இப்படியே போகும்போதுதான் சந்தோஷ் நாராயணன் தீயைக் கூப்பிட்டு ‘பீட்சா-2’ படத்துல பாட வைச்சிருக்காரு. ஆனால், அது பெருசா பேசப்படலை. அப்புறம். குக்கூ படத்துல ‘ஏன்டா மாப்ள’னு ஒரு பாட்டு வரும் அதுவும் பெருசா வரவேற்பு பெறலை. ஆனால், அதுக்கப்புறம் ‘மெட்ராஸ்’ படத்துல ஷக்திஸ்ரீ கோபாலன்கூட சேர்ந்து ‘நான் நீ நாம்’ பாட்டு பாடுனாங்க வேறலெவல் ஹிட்டு. நிறைய விருதுக்கு நாமினேட் ஆனாங்க. ஆனால், தனியா இவங்க சம்பவங்கள் பண்ண ஆரம்பிச்சது. இந்தப் பாட்டுக்கு அப்புறம்தான்.
ஏய் சண்டக்காரா
பாலா போன்ற யூனிக்கான இயக்குநர்கள் எல்லாம் வியந்துபோய் பாராட்டுன படம், இறுதிச்சுற்று. இந்தப் படத்துல ஏய் சண்டைக்காரா, உசுர நரம்புல அப்டினு ரெண்டு பாட்டு தீ பாடியிருக்காங்க. ரெண்டுமே தரமான சம்பவமா இருக்கும். சுகா கொங்கரா ஒருநாளைக்கு சந்தோஷ் ஸ்டுடியோக்கு கம்போசிங்காக போய்ருக்காங்க. இறுதிச்சுற்று படத்துல மதி கேரக்டருக்கு 17 வயசுதான். ஆனால், ரொம்பவே போல்டான பொண்ணு. ஒரு இன்னசெண்டும் இருக்கும் அந்த கேரக்டருக்கு செட் ஆகுற மாதிரி வாய்ஸ சுதா தேடிட்டு இருந்துருக்காங்க. அப்போ, சந்தோஷ் அவரோட பொண்ணு தீ-யைப் பத்தி சொல்லியிருக்காரு. தீ பாடுன பாட்டையும் போட்டு காமிச்சுருக்காரு. உடனே, சுதாவுக்கு ரொம்ப சந்தோஷம். ஒரு நிகழ்ச்சில இதுபத்தி பேசும்போது, “அந்த வாய்ஸ்ல ஒரு போல்ட்னஸ் இருந்துச்சு. மதியோட வாய்ஸாவே மாறிட்டாங்க”னு பெருமையா சொல்லுவாங்க. ஏய் சண்டைக்காரா பாட்டுல “தேடி கட்டிக்கப்போறேன். தாவி ஓட்டிக்கப்போறேன்” லைன்லாம் வரும்போது அப்படியே உடம்பு சிலிர்க்கும். மழை டைம்ல இந்தப் பாட்டை கேட்டோம்னு வைங்க. கண்டிப்பா ஃப்ரீஸ் ஆயிடுவோம். இந்தப் பாட்டுக்கு ‘உசுர நரம்புல நீ’ கொஞ்சமும் சளைச்சது இல்லை. அந்த பாட்டு வரிலயும், காட்சிலயும், மதியோட கேரக்டர்லயும் ஒரு சோகம் இருக்கும். அதை அப்படியே நமக்குள்ள கடத்தியிருப்பாங்க. “என் சிரிப்பு உடைஞ்சு சிதறி கிடக்கு எப்ப வருவ எடுத்துக்க’ லைன்லாம் கண்ணீரை வர வைச்சிரும். தீ பண்ண முதல் சம்பவம் வலியும் நாட்டினஸும் நிரம்பியது.
கண்ணம்மா
இறுதிச்சுற்று படத்துக்கு அப்புறம் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் மியூசிக்ல நிறைய பாட்டு பாடுனாங்க. ஆனால், அடுத்து பெரிய பெயர் வாங்கிக்கொடுத்ததுனா ‘காலா’ படத்துல வந்த ‘கண்ணம்மா’ பாட்டுதான். அவ்வளவு சின்ன வயசுல அவ்வளவு பெரிய காதலை தன்னோட குரல் வழியா சுமந்து நமக்குள்ள கொண்டு வந்து சேர்ந்துருப்பாங்க. “நீரின்றி மீனும் சேருண்டு வாழும், வாழ்விங்கு வாழ்வாகுமோ”னு தீ பாடும்போது நம்மளோட முதல் காதல் கண்டிப்பா ஒரு நிமிஷம் ஞாபகம் வந்துட்டுப் போகும். இந்தப் பாட்டை பிரதீப்பும் தீயும் போட்டிப்போட்டு பாடியிருப்பாங்க. தீ பண்ண ரெண்டாவது சம்பவம் முழுக்க முழுக்க பிரிவின் வலி நிரம்பியது.
ரௌடி பேபி
முதல் தடவை தீ வேறொரு மியூசிக் டைரக்டர் மியூசிக்ல பாடுன பாட்டு மாரி 2 படத்துல வந்த ரௌடி பேபி தான். இந்தப் பாட்டு வந்த புதுசுல என்ன பாட்டு இது. வாய்ஸ்க்கும் மியூசிக்குக்கும் செட்டே ஆகலைனுலாம் நிறைய பேர் சொன்னாங்க. ஆனால், கொஞ்சம் நாள் போகபோக ரீல்ஸ்லாம் நிறைய போட ஆரம்பிச்சாங்க. பாட்டு உலக லெவல்ல ரீச் ஆச்சு. இன்னைக்கும் இந்தப் பாட்டோட ரீல்ஸ் டிரெண்டிங்தான். ரௌடி பேபி பாட்டு போட்டாதான் சாப்பிடுவேன், தூங்குவேன்னு சொன்ன குழந்தைகள்லாம் உண்டு. இன்ஸ்டால பயோல ரௌடி பேபினு இன்னும் நிறைய பேர் வைச்சிட்டு சுத்துறாங்க. அவ்வளவு ஏன், வயசான பாட்டில இருந்து வார்னர் வரைக்கும் இந்தப் பாட்டு ஹிட்டு. யுவன் தனியா வந்தாலே தீயா இருக்கும், இதுல தீ கூட சேர்ந்தா சொல்லவா வேணும். இதுவரைக்கும் 1.3 பில்லியன் பேர் இந்தப் பாட்டை யூடியூப்ல பார்த்துருக்காங்க. இந்தப் பாட்டுக்காக சைமா விருதும் தீ வாங்குனாங்க. தீ பண்ண மூணாவது சம்பவம், காதலும் ரௌடித்தனமும் நிரம்பியது.
காட்டுப்பயலே
யுவன் மியூசிக்ல பாடிட்டாங்க. அடுத்து எல்லாருக்கும் கனவா இருக்குறது ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்ல பாடனும் அப்டின்றதுதான். தீக்கு அந்த விஷயமும் சீக்கிரமே நிறைவேறிடுச்சுனு சொல்லலாம். பிகில் படத்துல ‘இதற்குத்தான்’ அப்டினு ஒரு பாட்டு பாடுனாங்க. ஆனால், பெருசா வரவேற்பு கிடைக்கல. பாட்டு செமயா இருக்கும். அடுத்து வேறலெவல்ல பேசப்பட்டது ‘சூரரைப் போற்று’ படத்துல வந்த காட்டுப்பயலே பாட்டுதான். ஆனால், இந்தப் பாட்டை தீ பாட வேணாம்னு சுதா கொங்கரா முதல்ல நினைச்சாங்களாம். ஏன்னா, இந்தப் பாட்டு அவங்களை பாட வைக்கணுமானு ஒரு சின்ன ஹெசிடேஷன் சுதாவுக்கு இருந்துருக்கு. ஆனால், அதை செமயா பாடிக்கொடுத்து நல்ல பெயர் வாங்கிட்டாங்க, தீ. தீயைப் பத்தி சுதா, “தீ பாடுன பாட்டை மற்ற மொழிகள்ல வேற எதாவது சிங்கர் பாடுவாங்க. அதைக் கேட்டா என் காது வலிக்கும். அதனால, என் பாட்டு எந்த மொழில வந்தாலும் அதை தீயை தான் பாட வைப்பேன்”னு சொல்லுவாங்க. காட்டுப்பயலே செம செக்ஸியான ஒரு மெலடி பாட்டு. அதை அவ்வளவு அழகா குரல் வழியா தீ கொண்டு வந்துருப்பாங்க. லலாகி லாகிலேனு ஒரு போர்ஷன் பாடுவாங்க. செம ஃபீல் கொடுக்கும். தீ பண்ண 4 வது சம்பவம் கொஞ்சம் செக்ஸியானது.
எஞ்சாய் எஞ்சாமி
ஆல்பம் பாட்டுதான் இது. எல்லாருமே இதை கேட்ருப்போம். அரசியல் நிறைஞ்ச ஒரு பாட்டு இது. பா.ரஞ்சித் சொல்லுவாரு, தீக்கிட்ட புடிச்சதே இவ்வளவு சின்ன வயசுல நாம சொல்ல வர்ற அரசியலை புரிஞ்சிக்கிட்டு பாடுறதுதான் அப்டினு. அந்த வகையில், இந்தப் பாட்டு தீ – அறிவு ரெண்டு பேரோட கரியர்லயும் ரொம்பவே முக்கியமான பாட்டு. உள்ளூர் நண்டு சிண்டுல இருந்து வெளிநாட்டுல இருக்குற பிரபலங்கள் வரைக்கும் இந்தப் பாட்டு பரவலா பேசப்பட்டுச்சு. இன்னைக்கும் குக்கூ குக்கூனு பாடிட்டு இருக்குறதை நாம பார்க்க முடியும். இந்தப் பாட்டு ஒரு எமோஷன். இதைப் பத்தி மணிக்கணக்கா பேசலாம். பக்கம் பக்கமா கட்டுரை எழுதலாம். இதுல தீயோட மேக்கப், குரல் எல்லாமே ரொம்பவே மைனியூட்டா நோட் பண்ணி பேசப்பட்டுச்சு. தீ பண்ண சம்பவங்கள்ல என்னோட ஃபேவரைட் இதுதான். இந்த ஐந்தாவது சம்பவம், எமோஷனல் நிரம்பியது.
தீ பண்ண சம்பவங்கள்ள இதை மிஸ் பண்ணிட்டீங்கனு நீங்க நினைக்கிறதை கமெண்ட்ல சொல்லுங்க.