சிவாஜி, தர்பார் படங்கள் உருவாக காரணம் லிங்குசாமி?

தமிழ் சினிமாவில் குடும்பப்படங்களுக்கு பஞ்சமில்லை. அதற்காகவே அக்மார்க் இயக்குனர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். விசு, விக்ரமன் என ஒரு பெரிய பட்டியலே போடலாம். ஆனால் அவர்கள் எல்லாம் அந்த ஜானருக்கு உள்ளேயே நின்றுவிட்டனர். ஆனால் லிங்குசாமி மட்டும் இதற்கு விதிவிலக்கு… தன்னுடைய முதல் படத்தை குடும்பப் படமாக எடுத்துவிட்டு, அதிலிருந்து வெளியே வந்த வெவ்வேறு ஜானர்களுக்கு பயணித்தவர் இயக்குநர் லிங்குசாமி. அவருடைய திரை வாழ்க்கையில் அவரைப் பத்தின 5 சுவாரஸ்யமான விஷயங்களைத்தான் பார்க்கப்போறோம். 

அப்-டவுன் சினிமாக்கள்!

ரன் படப்பிடிப்பில் லிங்குசாமி
ரன் படப்பிடிப்பில் லிங்குசாமி

லிங்குசாமியோட திரை வாழ்க்கையில ஒரு பெரிய ஹிட்.. அடுத்ததா ஒரு ப்ளாப்… அடிச்சா சிக்சர், இல்லைனா சிங்கிள்ங்குறதுதான் லிங்குசாமியோட ஸ்டைல். ஆனந்தம், ரன்னு ரெண்டு வேற வேற ஜானர்ல ஒரு ஹிட் கொடுத்த நேரம் அடுத்ததா 3 வருஷ இடைவெளிக்கு அப்புறமா ஜி ரிலீஸ் ஆச்சு. சுமார் ரெண்டரை வருஷத்துக்கு மேல ஷூட்டிங் மட்டும் போச்சு. இந்த கால இடைவெளியும், அஜித்துக்கு செட்டாகாத திரைக்கதையும் படத்தை தோல்விப் படமா ஆக்கிடுச்சு. ஜி படத்தோட ஷூட்டிங் டைம்ல கிடைச்ச கேப்ல லிங்குசாமி வீட்ல மொட்டைமாடியில உட்கார்ந்து மொத்த டீமும் ஒரு கதை தயார் செய்திருந்தது. ஜீ தோல்விக்கு நான் காரணம் இல்லனு புதுமுகமாக இருந்த விஷாலை ரஜினி, அஜீத் ரேன்ஞ்சுக்கு ஆக்ஷன் ஹீரோவா மாத்திக் காட்டினார். அடுத்து விக்ரமின் பீமாவில் கொஞ்சம் சறுக்கினாலும் பையாவில் மீண்டும் எழுந்து நின்றார். ரன், சண்டைக்கோழிக்கு அப்புறமா கமர்சியலா முழு கம்பேக் கொடுத்திருந்தார், லிங்குசாமி. அடுத்ததா வேட்டை, அஞ்சான்னு ரெண்டு படங்கள். வேட்டை சுமாராக போக, சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது அஞ்சான். கலவையான விமர்சனங்களை பெற்று அதுவரையில் நடிகர் சூர்யாவின் கெரியரில் வசூலான படங்களின் அத்தனை சாதனைகளையும் முறியடித்தது, அஞ்சான். அடுத்ததாக சண்டைக்கோழி 2 சுமார் ரகம். இப்போது தெலுங்கு, தமிழ் பைலிங்குவல்ல ராம் பொத்தினேனியோட வாரியர் படம் தயாராகிட்டு இருக்கு. புல்லட் பாட்டு இப்போ ரீல்ஸ்ல டிரண்டிங்கா போய்ட்டு இருக்கு. 

ஒன் சினிமா ப்ரம் ஒன் சீன்!

பையா

 பீமா படம் ஷூட்டிங் போய்கிட்டிருந்த நேரம், கதை டிஸ்கஷன் நடத்துறது லிங்குசாமியோட வழக்கம். அதுல கிடைக்கிற சீன்களை ஒரு டேப்ல ரெகார்ட் பண்ணி வச்சுக்குவார். பீமா படம் ரிலீஸான பின்னால ஒரு கதை யோசிக்கிறப்போ, பீமா டைம்ல பேசுன ஒரு சீன் லிங்குசாமியோட நியாபகத்துக்கு வருது. அந்த சீன் என்னன்னா.. ‘நாம திருப்பதி போய்கிட்டிருக்கும்போது, ஒரு மணப்பெண் கார் பிரேக்டவுன் ஆகி நிற்குது. அப்போ அவங்க குடும்பம் நம்மகிட்ட “சார், திருப்பதி வரைக்கும் கொண்டுபோய் விட்டுடுறீங்களா?”னு கேட்குறப்போ, நாமும் கார்ல ஏத்திட்டு திருப்பதிக்கு லெப்ட்ல திரும்புறப்போ, அந்த கல்யாணப் பொண்ணு ரைட்ல திருப்புங்க, எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்ல’னு உதவி கேட்டா எப்படி இருக்கும். இதுதான் அந்த டேப்ல இருந்த சீன். அந்த சீனை வெச்சு டெவலப் பண்ண படம்தான் பையா. அந்த நாட் மட்டும் எடுத்துக்கிட்டு, பெங்களூர் டூ மும்பை கார் டிராவலை மையமா வச்சு லவ் ஆக்ஷன் ஜானர்ல பண்ணியிருந்தார், லிங்குசாமி. ஒரு சீனிலிருந்து ஒரு சினிமாவுக்கான கதையை வடிவமைக்கிறதுல லிங்குசாமி கில்லாடி.

பெர்பெக்ட் ஸ்டண்ட் கொரியோகிராபி!

ரன் சண்டைக்காட்சி
ரன் சண்டைக்காட்சி

லிங்குசாமி இயக்கிய எல்லா படங்களின் சண்டைக்காட்சிகளிலும் ஒரு மெனக்கெடல் இருக்கும். இதற்குக் காரணம் சண்டைக்காட்சிகள் வடிவமைப்பு பத்தி ஸ்கிரிப்ட்லயே எழுதிடுவார். குறிப்பா ரன் படத்துல மாதவன் ஓடிப்போய் ஷட்டரை சாத்திட்டு முதல் பேண்ட்ல கைய தேச்சுகிட்டு, முதல் ஆளை அடிக்குறப்போ செத்த எலி மாதிரி விழுவார். இதை ஷூட்டிங்குக்கு முன்னாடி ஸ்கிரிப்டிலேயே எழுதியிருந்தார், லிங்குசாமி.   ஸ்டண்ட்க்கு மாஸ்டர் மட்டும் முக்கியம் இல்ல.. ஸ்கிரிப்ட்லயும் அது இருக்கணும்ங்குறதுதான் லிங்குசாமியோட ஸ்டண்ட் கொரியோகிராபி டெக்னிக். அந்த சீன் இன்னைக்கும் ஸ்கிரிப்ட்ல எழுதுன மாதிரியே வந்திருக்கும். அதனாலதான் ரன் ஷட்டர் பைட் இன்னைக்கு வரைக்கும் பேசப்படுது. 

ஃபுல் பாசிட்டிவிட்டி!

அஞ்சான் படப்பிடிப்பில் லிங்குசாமி
அஞ்சான் படப்பிடிப்பில் லிங்குசாமி

     லிங்குசாமியோட காலக்கட்டத்துல வந்த இயக்குநர்கள்ல இவரளவுக்கு யாரும் கஷ்டப்பட்டிருக்க மாட்டாங்க. ஜி படம் ஆரம்பிச்சு 3 வருஷம், பீமா ரெண்டு வருஷம், அஞ்சான் மீம் ட்ரோல்ஸ் இந்தக் காலக்கட்டங்கள்ல லிங்குசாமி எதிர்கொள்ளாத மனஉளைச்சலே இல்லை. அஞ்சான் ட்ரோல்ஸ்லாம் இவர் குழந்தைகள் வரைக்கும் பாதிச்சப்பவும் அதெல்லாம் சும்மாய்யானு குழந்தைகளைச சமாளிக்கிறது எவ்ளோ பெரிய பக்குவம். அதுவரை லிங்குசாமின்னாலே உச்சத்துல இருந்தவரை ஒரே நைட்டில் கீழே இறக்கியிருந்தது மீம்ஸ் கலாச்சாரம். ஆனால், அதுவரைக்கும் நடிகர் சூர்யாவின் கெரியரிலேயே அதிக வசூலான படமாக அஞ்சான் அமைந்திருந்தது. இவரோட சினிமா லைப்ல இவர் தோல்விக்கு யாரையும் குறை சொன்னது இல்ல. தன்மேல தப்பு சொல்லி ஒத்துக்குற ஒரு பாசிட்டீவ் கேரெக்டர்தான் லிங்குசாமி. நேத்து செஞ்சது நேத்தோட இன்னைகக்கு என்ன பண்றோம், நாளைக்கு என்ன பண்ணப் போறோம்ங்குறதுதான் முக்கியம்னு நினைக்கிறதுதான் லிங்குசாமியோட கொள்கை. 

ரஜினியுடன் கைகூடாத லிங்குசாமி காம்போ!

ரன் முடிஞ்ச நேரத்துல லிங்குசாமியை கூப்பிட்டு கதை கேட்குறாரு ரஜினி. இப்போ கதை என்கிட்ட இல்லனு லிங்குசாமி சொல்ல, ரஜினியே ரெண்டு மூணு கதையை லிங்குசாமிகிட்ட சொல்லி பண்ண முடியுமானு கேட்குறார். அதைப் பத்தி சிலமணிநேரங்கள் விவாதமும் நடக்குது. ஆனா முடிவுல ‘நான் எதைப் பத்தி யோசிச்சாலும் ரஜினி ரசிகனா என்முன்னாடி வந்து நிற்குறீங்க, எல்லாத்தையும் பண்ணிட்டீங்க. எதுவுமே எனக்கு பிடிபட மாட்டேங்குது’னு சொல்லி விலகிட்டார், லிங்குசாமி. தயாரிப்பாளரா ரஜினியை டிரை பண்ணலாம்னு முடிவு செஞ்சார், லிங்குசாமி.

ஷங்கரும் ரஜினியும் சேர்ந்து சிவாஜினு ஒரு படம் பண்றதுக்கும், முருகதாஸ்-ரஜினி காம்போல தர்பார் வர்றதுக்கு மூலக்காரணம் லிங்குசாமினு சொன்னா நம்ப முடியுதா? ஆமாங்க. ஷங்கரும் ரஜினியும் சேர்ந்து படம் பண்ணினா நல்லா இருக்கும்னு ஷங்கர்கிட்டயும், ரஜினிகிட்டயும் பேசி தன்னோட திருப்பதி பிரதர்ஸ்ல தயாரிக்கலாம்னு முடிவு பண்ணி அதுக்கு முன்னேற்பாடு செஞ்சது, லிங்குசாமி. ஆனா, முடிவுல ஏ.வி.எம் நிறுவனம் வந்து அந்த காம்போவை டேக்ஓவர் பண்ணிடுச்சு. அதே மாதிரி ரஜினியும் ரஜினி ரசிகனும் சேர்ந்து ஒரு படம் பண்ணா நல்லா இருக்கும்னு யோசிச்சு, முருகதாசை ரஜினிகிட்ட கதை சொல்ல கூப்பிட்டு போறார், லிங்குசாமி. கதை ரஜினிக்கு பிடிக்கலை, வேற கதை யோசிச்சிட்டு வாங்கனு சொல்லி அனுப்பிடுறார். லிங்குசாமியும், முருகதாஸும் கார்ல வந்துகிட்டிருக்கும்போது முருகதாஸ் போலீஸ் கதை ஒண்ண சொல்றார், இதுல ரஜினி பண்ணா நல்லா இருக்கும்னு யோசிச்சு. ரஜினிகிட்ட அந்த கதைய சொல்ல, அது ரஜினிக்கு பிடிச்சுப்போச்சு. ஆனா இப்ப திருப்பதி பிரதர்ஸ ஓரம் கட்டி, லைகா உள்ள வந்துடுச்சு. இப்படி இரண்டு வாய்ப்புகளும் லிங்குசாமிக்கு கைகூடவே இல்ல. 

உங்களுக்கு லிங்குசாமி பத்தி தெரிஞ்ச சுவாரஸ்யமான தகவல்களை கமெண்ட் பண்ணுங்க!

Also Read : என்னங்க சொல்றீங்க… இந்த கமல்ஹாசன் படங்களெல்லாம் இன்ஸ்பிரேஷனா?!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top