‘பாபா’ படத்தோட ரீ-ரிலீஸ் பணிகள் வேகமா நடந்ததுகிட்டிருக்கு. படத்துக்கு எக்ஸ்டிராவா காட்சிகள் சேர்க்கப்பட்டு அதுக்கு ரஜினி டப்பிங் பேசுற மாதிரி புகைப்படங்களும் வைரலாகி வருது. ‘பாபா’ ரஜினி ஸ்டில் இவ்ளோ வைரலாகுற இந்த நேரத்துல, அந்தக் காலக்கட்டத்துல பாபானு எழுதி பக்கத்துல ஒரு புள்ளி வச்சாலே அதுக்கு அர்த்தம் தேடி புறப்பட்ட பத்திரிக்கைகள் ஏராளம். அந்த அளவுக்கு அன்னைக்கு ஹைப் இருந்தது. இன்னும் சொல்லப்போனா, வில்லன் கூட்டத்துல இருக்கிற கடைசி ஜூனியர் ஆர்டிஸ்ட்கூட ஏதாவது பேட்டி தந்துட மாட்டாரானு ஏங்கிய பத்திரிக்கைகளோட கதைகளும் உண்டு. ஒருவேளை இந்த ஹைப்கூட படத்தோட ப்ளாப்புக்கு முக்கியமான காரணமா இருக்கலாம்னும் சொல்றாங்க சினிமா வட்டாரத்துல. அன்னைக்கு பத்திரிக்கைகளை விற்பனை செய்ய நிறுவனங்கள் பயன்படுத்தின யுக்திகளையும், அதோட சுவாரஸ்யமான கதைகளையும்தான் இந்த வீடியோவுல பார்க்கப்போறோம்.
* கடந்த 2002-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்புல வெளியான படம் ‘பாபா’. இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி தயாரிச்சும் இருந்தார். ‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாட்ஷா’னு மூணு ப்ளாக்பஸ்டர்களைக் கொடுத்த சுரேஷ்கிருஷ்ணா இயக்க அறிவிப்பு வெளியானதும் தமிழகமே பரபரத்தது. இதனால் செய்திகளை கொடுக்கிற முனைப்புல பத்திரிக்கைகளும் பரபரப்பாக தொடங்கின.
இதுக்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது அன்னைக்கு முன்னணியில இருந்த நாளிதழ் ஒண்ணுதான். படப்பூஜையை தலைப்புச் செய்தியாபோட, விற்பனைக்கும் அது உதவியதால ஒட்டுமொத்த மீடியா உலகமும் பாபா செய்திகளை நோக்கி திரும்ப ஆரம்பிக்கிது. எல்லா பத்திரிக்கைகளும் செய்திகளைக் கொடுத்தாலும், குமுதமும், ஆனந்த விகடனும் போட்டிபோட்டுக் கொண்டு களத்தில் இறங்கி செஞ்சாங்கன்னே சொல்லலாம்.
சரவணா ஸ்டோர்ஸ் பத்திரிக்கை!
* பாபா படத்தின் கதை இது. இதுவா இருக்கலாம். அதுவா இருக்கலாம்னு என கதை குறித்த விவாதங்களை கிளப்புற மாதிரி செய்திகள் வெளிவந்தன. ஒருபடி மேலேபோய் செய்தி பஞ்சம் வரவே சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் நடத்திவந்த பத்திரிக்கையில் இயக்குநர்கள்கிட்ட பாபா படம் பத்தி ஒரு கதை சொல்லுங்கனு கருத்துக்களைக் கேட்டு தொகுத்து வெளியிட்டது. என்ன சரவணா ஸ்டோர்ஸ் பத்திரிகை நடத்துனாங்களானு அதிர்ச்சி அடையுறீங்களா?.. அவங்க நடத்துனது சரவணா ஸ்டோர்ஸ்ங்குற வாரப் பத்திரிக்கை.
* இதுபோக குமுதம் பத்திரிக்கையோட பத்திரிக்கையாளர் ஒருத்தர் வில்லன் கேங்க்ல இருக்கிற கடைசிகட்ட அடியாள்கிட்ட பேட்டி எடுக்க போறார். அவர் வந்தவருக்கு தண்ணி கொடுத்து ‘சார் எனக்கு சத்தியமா எதுவும் தெரியாது. கூப்பிட்டு அட்மாஸ்பியர்ல நிற்க வைப்பாங்க. அவ்ளோதான் எனக்கு வேலை. இதைப்பத்தி எதுவும் சொல்லக்கூடாதுனு சொல்லியிருக்காங்க. ஆனா நானே கடைசியா நிற்கிறதால எனக்கு காட்சி சரியா கூட தெரியாது’னு சொல்லி அனுப்பி வச்சிருக்கார் அந்த வில்லன் கேங் மெம்பர். அந்த அளவுக்கு செய்திக்காக மெனெக்கெட்டது.
* அன்னைக்கு மொத்தமா படக்குழு சார்புல் 4 ஸ்டில்கள்தான் ரிலீஸ் பண்ணியிருந்தாங்க. குமுதம் எக்ஸ்குளூசிவா 5வது ஸ்டில்லை விரைவில் கொடுக்கப்போகிறோம்னு அறிவிச்ச சில நாட்கள்லயே ஆனந்த விகடன் தன்னோட சோர்ஸ் மூலமா 8 பக்கத்துக்கு 16 எக்ஸ்குளூசிவ் ஸ்டில்களை வெளியிட்டது.
* சினிக்கூத்து புத்தகம் ஒருபக்கம் பாபாவில் நடிகர் கருணாஸ் ரெண்டு மணிநேரம் பெர்மிசன் கேட்டத்தையும், 1000 ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் நடித்ததையும் ஒரு பக்க செய்தியாக வெளியிட்டிருந்தது. இத்தனைக்கும் அன்னைக்கு கருணாஸ் வளர்ந்து வர்ற நடிகராத்தான் இருந்தார்.
* அடுத்ததாக குமுதம் வெளியிட்ட சில செய்திகள் வைரலும் ஆச்சு. பெப்சி உமா நடிக்க மறுத்தது, படத்தோட வாலிபால் சண்டைக்காட்சி, அயன்பாக்ஸ் சண்டைக்காட்சி, சிக்னலில் குழந்தையைக் காப்பாற்றும் காட்சி, பாபா பைக் தயாரித்த ரஃபீக்ங்குற இளைஞரோட பேட்டி, கவிஞர் வாலியோட பேட்டினு கிட்டத்தட்ட விரிவாகவே லீக் செய்திருந்ததுனு கூட சொல்லலாம்.
* அடுத்ததாக ஆனந்தவிகடன் ஒருபடி மேலே போய் ‘படத்தின் ஹைலைட் ரஜினி முதலமைச்சராக வருகிறார்’ என்று செய்தி வெளியிட தமிழகமே பரபரப்பானது. இதுபோக ஆனந்தவிகடன் ஒரு செய்தியாளர் குழுவை நியமித்து பெங்களூர் மைசூர் என எல்லா ஏரியாக்களிலும் ஆள்போட்டு ஷூட்டிங் அப்டேட்ஸைக் கவர் ஸ்டோரியாக கொடுத்தது. அப்போ வெளியான ஸ்டில்களும் வைரல் ஆச்சு. குமுதம் ஒருபக்கம் தகவல்களை வெளியிட, இரண்டு மந்திரங்களின் காட்சிகளை தன்பங்கிற்கு வெளியிட்டது ஆனந்த விகடன்.
இப்படி எது நடந்தாலும் அது அன்னைக்கு வைரல்தான்.
ஷூட்டிங் சுவாரஸ்யங்கள்!
* படத்தோட கதையை இயக்குநர் ஷங்கர் பட்டி டிங்கரிங் பார்த்திருக்கிறார். சண்டைக்காட்சியில் ரஜினி பில்டப்புக்காக நடந்து வரும்போது, ஷூவில் இருந்து தீப்பொறி பறப்பது உள்ளிட்ட ஸ்பெஷல் காட்சிகளை சேர்க்கச் சொல்லியும் இருக்கிறார்.
* கிராபிக்ஸ் வேலையை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் பார்த்திருக்கிறது.
* கடவுள் பாபாவை ரஜினி சந்திக்கும் காட்சிகளுக்காக ஸ்விட்சர்லாந்தில் இமயமலை செட் ஒன்று அமைக்கப்பட்டது. அந்த ஆலமர செட் செய்ய அப்போதே மூன்றரை லட்சம் செலவிடப்பட்டு செய்யப்பட்டது. அதை பிரித்து சுவிட்சர்லாந்தில் செட் அமைக்க 10 லட்சம் வரை செலவு செய்து கொண்டு சென்றிருக்கிறார்கள்.
* படையப்பா படத்துக்காக சுமார் 1000 ஜூனியர் ஆர்டிஸ்டுகளை 55 நாட்கள் மொத்தமாக கால்ஷீட் வாங்கி களமிறக்கியிருந்தார் ரஜினிகாந்த்.
* பாபா கேசட்டுகளுக்காக லட்சக்கணக்கில் முன்பதிவு செய்யப்பட்டது, அதுவே தமிழ் சினிமாவில் முதல்முறை.
* ஷூட்டிங் ஸ்பாட்டில் பெப்சி அமைப்பில் உறுப்பினராக இல்லாத கலந்து கொள்வதாக புகார் வரவே, பெப்சி சங்கம் நேரடியாக பாபா பட ஸ்பாட்டுக்கு வந்து எல்லா கலைஞர்களின் அடையாள அட்டையை செக் பண்ணி, அடையாள அட்டை இல்லாதவர்களை வெளியே போகச் சொன்னது. இதுவும் அன்னைக்கு பரபரப்பா பேசப்பட்டது.
* ஷூட்டிங்கில் கலந்து கொண்ட தொழிலாளர்கள், நடிகர்களுக்கு இரண்டுவிதமான பேட்ச்கள் கொடுக்கப்பட்டன. அதை காட்டினால்தான் உள்ளே அனுமதி. ஆனால் அதிலும் 4 பேர் போலி பேட்ச் மூலம் உள்ளே நுழைய முயன்றனர். கண்டுபிடித்த செக்யூரிட்டி கார்ட்ஸ் நையப்புடைத்து அனுப்பினார்களாம்.
* பாபா ரஜினி தயாரிப்புங்குறதுக்காக அவரோட மனைவி லதா அதை வச்சு லாபம் ஆசைப்பட்டதாவும் சொல்லப்பட்டது. பாபா படம் பொறிச்ச டிசர்ட்டுகள் அடிச்சு விற்பனை செஞ்சதாவும் சொல்லப்பட்டது.
* பாபா படத்துக்காக பெப்சி உள்ளிட்ட பெரிய பெரிய நிறுவனங்கள் ஸ்பான்சர்களாவும் களமிறங்கின.
* ஸ்பான்சர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ரசிகர்களை கைவிடாதவர் ரஜினி. அப்போது சுவாரஸ்யமான ஒரு சம்பவமும் நடந்தது. பாபா பைக்கிற்காக ஸ்பான்சர்களுக்குள் ஒரு போட்டியே நடந்தது. அப்போது வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கம்பெனி பைக்குகளை பார்த்துவிட்டு தனியாக நின்ற ஒரு பைக்கை தேர்ந்தெடுத்தார், அது புதுப்பேட்டை மெக்கானிக் ரஜினி ரசிகர் ரஃபீக்கின் பைக். தனி ஒரு ஆளாக இருந்ததால் அன்றைக்கு முன்னணியில் இருந்த ஸ்பான்சர் நிறுவனம் இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட ரஜினி பிடிவாதமாக என் ரசிகனின் பைக்தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து படத்தில் பயன்படுத்தினார். ஸ்பான்சர் நிறுவனம் பெரிய தொகை கொடுக்க முன்வந்த்போதும் ரசிகனின் பைக்கையே பயன்படுத்தினார்.
* பாபா படத்துல கிரேன் மனோகரை ஆரம்பம் முதலே இறுதி வரைக்கும் தன்கூடவே பயணப்படும் கேரெக்டராக நடிக்க வைத்திருந்தார், ரஜினி. சிங்கிள் ஷாட்டில் ரஜினி பீடியை குடித்துவிட்டு, சிசர் மனோகருக்கு கொடுக்க, அவரும் பீடியை குடித்துவிட்டு ரஜினியிடம் கொடுப்பார். ரஜினி அதை வாங்கி அசால்ட்டாக குடிப்பார். இதுபோல எந்தவிதமான பந்தாவும் காட்டாமல் ஷூட்டிங்கில் பழகினார் ரஜினி.
* படம் நல்லா இல்லனு சொன்னது ரெண்டுபேர். பாதி ஷூட்டிங்லயே கவுண்டமணி கண்டுபிடிச்சுட்டார். இது வேண்டாத வேலைனு தன் சகாக்கள்கிட்ட சொல்லி ரஜினியை நிறுத்த சொல்லிடுங்கனும் சொல்லியிருக்கார். ரெண்டாவதா நடன இயக்குநர் லாரன்ஸ். படத்தில் நடனம் அமைப்பதற்காக கூப்பிட்டார் ரஜினி. அப்போ, படம் முழுவதும் பார்த்துட்டு அதுக்கு ஏத்த மாதிரி நடனம் வச்சுக்கலாம்னு சொல்ல, படம் முடிச்சிட்டு ரஜினிகிட்டயே படம் நல்லா இல்லங்க ஓடாதுனு சொல்லிட்டு போனாராம் லாரன்ஸ். ஆனா ரஜினி இதை எதையுமே கேட்கிறதா இல்ல.
* அன்னைக்கு முண்ணனியில இருந்த டான்ஸ் மாஸ்டர்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பாட்டை கொரியோகிராஃப் பண்ணாங்க. அதுல பிரபுதேவா, லாரன்ஸ்னு பட்டியல் கொஞ்சம் பெரிசு.
* மத்திய அரசு முதல்முதலாக வெளியிட்ட மலிவு விலை (25 பைசா) ‘மேகதூத்’ போஸ்ட் கார்டுகள் விற்பனைக்கு வந்தன. “பாபா” படவிளம்பரம் அதில் வெளியிடப்பட்டிருந்தன.
* மொத்தமாக 5 கோடி தயாரிப்பில் உருவாக்கிய ரஜினி சுமார் 35 கோடிக்கு மேல் விற்பனை செய்ததாகவும், 25 கோடிக்கும் மேல் அன்றைக்கு வசூல் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. விற்பனை செய்த விலைக்கு வசூல் ஆகாத நிலையில் படம் வசூல் ரீதியாக தோல்வி கண்டது. ஆனால் தயாரிப்பு செலவை எப்போதோ எடுத்துவிட்டார் ரஜினி என்கிறது கோலிவுட் வட்டாரம்.
* அன்றைய தேதியில் மற்ற நடிகர்களின் படங்கள் 10, 15 கோடிக்கு தான் விலை போனது. அதிகபட்சம் ப்ளாக்பஸ்டரானால் படம் 20 கோடியை அள்ளியிருக்கும். ஆனால் தோல்விப்படமாக அறிவிக்கப்பட்ட பாபா அன்றைக்கு ப்ளாக்பஸ்டர் கொடுத்த நடிகர்களின் வசூலை பாபா மூலம் ரஜினி அசால்ட்டாக முறியடித்திருந்தார்.
* குறிப்பாக சொல்லப்போனால், பாபாவுக்கு முன்னர் வெளியான படையப்பா சென்னையில் வசூலில் ஒரு மைல்கல்லை எட்டியிருந்தது. ஆனால், படையப்பா படத்தின் 50 நாள் சென்னை வசூல் தொகை 2 கோடியே 4 லட்சம் ரூபாய். பாபா படத்தின் 18 நாள் வசூல் 2 கோடியே 10 லட்சம் ரூபாய்.
Also Read – காந்தாரா, பிரின்ஸ்லாம் ஏன் ஓ.டி.டில பிடிக்கலை?
* படத்துக்கு பின்னால் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் அதிகமா நடந்தது. ஆனால் ரிலீசுக்கு பின்னர் எல்லாமே தலைகீழா நடந்தது. பாபா படப்பெட்டியை ராமதாஸ் ஆட்கள் எடுத்துக் கொண்டு ஓடியது, தியேட்டர் மேனேஜர் கடத்தப்பட்டதுனு ஏகப்பட்ட களேபரங்கள் நடந்தன. இதுபோதாதென விநியோகஸ்தர்கள் நஷ்டம் என சொல்ல, அப்போது நஷ்ட ஈடாக பணத்தை திருப்பிக் கொடுத்தார்.
அன்னைக்கு பாபாவுக்கு கொடுத்த அதீத ஹைப்பும், மூணு வருஷம் கழிச்சு ஒரு திருப்தியான படமா இல்லைங்குறதுதான் படம் தோல்விக்கு முக்கியமான காரணங்கள். இப்போ பாபா ரீ ரிலீஸ்க்கு தயாரா இருக்கு. டிசம்பர் 12 அன்னைக்கு வெளியாகும்னு எதிர்பார்க்கலாம். அதை வரவேற்கவும், எதிர்க்கவும் ஆட்கள் தயாரா இருக்காங்கங்குறதுதான் நிதர்சனமான உண்மை.
பாபா படம் குறித்த உங்களோட தகவல்களை கமெண்ட்ல சொல்லுங்க.
Most welcom