தமிழ் சினிமால நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்!’னு சொல்ற மாதிரி நிறைய விஷயங்கள் நடந்திருக்கு. அதை சொன்னா
அப்படியா?!’னு நீங்களே ஆச்சரியப்பட்டுப் போவீங்க. அப்படி உங்களால நம்ப முடியாத ஆனால், உண்மையிலேயே தமிழ் சினிமாவில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களைத்தான் இந்தக் கட்டுரைல தெரிஞ்சுக்கப் போறோம்.
தேனி குஞ்சரம்மாள்…
`இன்னொரு பாயாசத்தை போட்ற வேண்டியதான்’ – இந்த டயலாக்கை எப்படி மறக்க முடியும். பாயசம்னு சொன்னாலே இந்த காமெடிதான் ஞாபகம் வரும். இந்த காமெடில வர்ற தேனி குஞ்சரம்மாள் நிறைய படத்துல நடிச்சிருக்காங்க. அதுமட்டுமில்ல ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, ஹாரிஸ் ஜெயராஜ்னு முன்னணி இசையமைப்பாளர்கள் பலரோட இசையமைப்புல பாடல்களையும் பாடி இருக்காங்க. குறிப்பா சொல்லணும்னா.. காதலன் படத்துல வர்ற பேட்டை ராப், கருத்தம்மா படத்துல வர்ற ஆராரோ ஆரிராரோ, முத்து படத்துல வர்ற கொக்கு சைவ கொக்கு, தாஜ்மகால் படத்துல வர்ற அடி மஞ்சகிழங்கே, விருமாண்டி படத்துல வர்ற மாட விளக்கே, சில்லுனு ஒரு காதல் படத்துல வர்ற கும்மி அடி போன்ற பாடல்கள் இவங்க பாடுனதுல செம ஹிட்.
வள்ளி படம்…
தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய மாஸ் கமர்ஷியல் ஹீரோக்களில் ஒருவர் ரஜினிகாந்த். இவர் தயாரிப்பில் 1993-ம் ஆண்டு வெளியான திரைப்படம் வள்ளி. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் பிச்சைக்காரன் மாதிரியான கேமியோவும் பண்ணியிருப்பாரு. மிகப்பெரிய மாஸ் ஹீரோவா, தயாரிப்பாளரா இருந்துட்டு பிச்சைக்காரன் மாதிரியான கேரக்டர்ல நடிக்கிறதுலாம் வேற லெவல்தான மக்களே!
பூவே செம் பூவே…
சொல்லத் துடிக்கிது மனசு’ படத்துல வர்ற பாட்டுதான் பூவே செம் பூவே’. இளையாராஜாவின் இசையமைப்பில் உருவான இந்தப் பாட்டுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் இருக்காங்க. ரொம்ப மெலடியா போகும் இந்த பாட்டுக்கு படத்துல லிப் சிங் குடுத்தது யார் தெரியுமா? ராதா ரவிதான். ராதா ரவியோட குரல் எப்படி இருக்கும்னு எல்லாருக்குமே தெரியும். 1988-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துல ஒரிஜினலா இந்தப் பாடலை யேசுதாஸ் பாடி இருப்பாரு. பாடலை கேட்டுட்டு மட்டும் இருந்துட்டு திடீரென வீடியோவைப் பார்த்தா `இவரா நடிச்சிருக்காருனு’ எல்லாருக்கும் கொஞ்சம் ஷாக்காவே இருக்கும்.
நாகராஜ் அண்ணே..
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துல வர்ற நாகராஜ் அண்ணன அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. அண்ணே... நாகராஜ் அண்ணே... எப்பணே வந்த? என்னணே? எப்படினே இருக்க’னு விஜய் சேதுபதி பேசுற டயலாக் வேற லெவல்ல இருக்கும். அதுல நாகராஜ் அண்ணனா வந்தவரோட உண்மையான பெயர் அசோக். அவர்தான் கே.ஜி.எஃப் படத்துக்கு தமிழ் டயலாக் ரைட்டர்.
காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு கர்ஜனையவிட பயங்கரமா இருக்கும்; யாரோ பத்து பேர அடிச்சு டான் ஆனவன் இல்லடா நான், நான் அடிச்ச பத்து பேரும் டானுங்கதான்’ – இப்படி அனல் பறக்கும் வசனங்களுக்கு சொந்தக்காரர் நம்ம நாகராஜ் அண்ணன்தான்!
ஒத்துக்கிட மனசில்லைனாலும் அதான் நெசம்!
தமிழ் சினிமாவின் வெற்றிக்கூட்டணி என்றால் அது தனுஷ் – வெற்றிமாறன்’ கூட்டணிதான். பொல்லாதவன் முதல் அசுரன் வரை இவர்கள் கூட்டணியில் உருவான அனைத்து படங்களும் தாறுமாறு ஹிட் என்றுதான் சொல்ல வேண்டும். கடைசியாக வெளியான அசுரன் படமும் ரசிகர்கள், விமர்சகர்கள் என பலரின் மத்தியிலும் அதிக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள டயலாக்தான், “ஒத்துக்கிட மனசில்லைனாலும் அதான் நெசம்!” என்ற டயலாக். ஆனால், இதுக்கு பதிலா
நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்!” என்ற டயலாக்கை தான் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் உட்பட பலரும் பயன்படுத்திட்டு இருக்காங்க. யாரு இந்த டயலாக்கை மாத்தி கிளப்பி விட்டதுனு தெரியல!
Also Read : 16 வயதினிலே தந்த திருப்பம்… உன்னதக் குரலோன் மலேசியா வாசுதேவன் நினைவலைகள்!