- கிராமப் பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறதென்றால் விஜய் சேதுபதி அங்கிருக்கும் ரோட்டோர திண்பண்ட கடைகளுக்கு செல்வது வழக்கம். அவர்களிடம் சிரித்து பேசிக்கொண்டே உரிமையாக பதார்த்தங்களை எடுத்துச் சாப்பிடும் விஜய் சேதுபதி, போகும்போது சில ஆயிரங்களை உரிமையாளரின் கைகளில் திணித்துவிட்டு வருவார்.
- முதன்முதலாக தன்னை சந்திக்கும் நபர்களை அவர்கள் தன்னைவிட வயதில் சிறியவர்களாக இருக்கும்பட்சத்தில் உரிமையாக ‘டா’ போட்டு பேச ஆரம்பித்துவிடுவார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவர் ‘டா’ போட்டு பேசுவது யாருக்குமே கோபத்தைத் தராது. ஏனெனில் அவரது பேச்சில் அப்படியொரு வாஞ்சை இருக்கும்.
- சென்னை சேத்துப்பட்டு பகுதியில் தனது புதிய வீட்டை பிரம்மாண்டமாக கட்டி வருகிறார் விஜய் சேதுபதி. ‘சினிமாவைப் பொறுத்தவரை போயஸ் கார்டன் என்றால் ரஜினி , ஆழ்வார்பேட்டை என்றால் கமல் என்பது எப்படி லேண்ட்மார்க்காக இருக்கிறதோ அதுபோல இனி சேத்துப்பட்டு என்றால் விஜய் சேதுபதி என்று இருக்கவேண்டும்’ என நண்பர்களிடம் அடிக்கடி சொல்வாராம்.
- பொதுவாக வி.ஐ.பிக்களை எங்கேயாவது ஷாப்பிங் மாலிலோ லிஃப்டிலோ பார்க்க நேரிட்டால் தலையைக் கீழே போட்டுக்கொண்டு போய்விடுவதுண்டு. ஆனால் விஜய் சேதுபதி அப்படியில்லை. உங்களிடம் குறைந்தது ரெண்டு வரியாவது பேசிவிட்டுதான் போவார்.
- சென்னை வளசரவாக்கத்தில்தான் விஜய் சேதுபதியின் ஆஃபிஸ் இருந்துவருகிறது. 2015-ஆம் ஆண்டு வரை, அவரது ஆபீஸ் இருக்கும் பகுதியில் இரவு ஒன்பது மணி வாக்கில் விஜய் சேதுபதி வாக்கிங் போவதை சர்வ சாதாரணமாக பார்க்கமுடியும். அதன்பிறகு ஏற்பட்ட புகழ் வெளிச்சத்தால் இப்போதெல்லாம் அவ்வாறு சகஜமாக வெளியில் வரமுடிவதில்லை என வருத்தப்படுகிறாராம்.
- ஒருமுறை பத்திரிகையாளர் சந்திப்பில், நிருபர் ஒருவர் விஜய் சேதுபதியிடம், ‘எப்படி இவ்ளோ சிம்பிளா இருக்கீங்க..?’ எனக் கேட்க, `நான் போட்டிருக்க ஸ்லிப்பர் செப்பலோட விலை 3 ஆயிரம் ரூவா.. என்னைப் போய் சிம்பிளா இருக்கேன்னு சொல்றீங்களே?’ எனக் கேட்டு ஆச்சர்யப்படுத்தினார்.
- ஹீரோவாக வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்த காலத்தில் ஒருமுறை பாலு மகேந்திரா தனது படமொன்றில் விஜய் சேதுபதியை நடிக்கவைக்கலாமா என யோசித்திருக்கிறார். அந்த சமயத்தில் அவர் விஜய் சேதுபதியை சில ஃபோட்டோக்கள் எடுத்ததுடன், ‘உனக்கு நல்ல ஃபோட்டோ ஜெனிக் ஃபேஸ் இருக்குய்யா’ எனப் பாராட்டியிருக்கிறார். அப்போது பாலு மகேந்திரா எடுத்த ஃபோட்டோக்களை இப்போதும் பத்திரமாக பாதுகாத்துவருகிறார் விஜய் சேதுபதி.
- நீண்ட போராட்டத்திற்குப் பிறகுதான் இயக்குநர் சீனு ராமசாமிக்கே ‘தென்மேற்கு பருவக்காற்று’ பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், அந்த சூழ்நிலையிலும் விஜய் சேதுபதியை சந்திக்கும்போதெல்லாம் அவரது பாக்கெட்டில் நூறு ரூபாயை திணித்து அனுப்புவாராம் சீனு ராமசாமி. இதுகுறித்து ஒரு பேட்டியில் சொன்ன விஜய் சேதுபதி, ‘அந்த நன்றிக் கடனை எப்படி அடைக்கிறதுன்னே தெரியலை.. அதனாலதான் அவர் எப்போக் கூப்பிட்டாலும் நான் நடிக்கப் போய்டுறேன்’ என்றார்.
- தனது 16 வயதிலேயே கமலின் ‘நம்மவர்’ படத்தின் ஆடிஷனின் கலந்துகொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. ஆனால் அப்போது அவர் மிகவும் குள்ளமாக இருப்பதாக சொல்லி நிராகரித்திருக்கிறார்கள் படக்குழுவினர். அந்த விஜய் சேதுபதிதான் தற்போது கமலின் ‘விக்ரம்’ படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடித்துவருகிறார்.
- கடந்த சில வருடங்களாக மிகவும் பரபரப்பாக இருந்துவந்த விஜய் சேதுபதியால், கொரோனா முதல் அலையினால் ஏற்பட்ட லாக் டவுன் காலத்தில் வீட்டில் முடங்கி இருக்க ரொம்பவே அவஸ்தைப்பட்டு போனார். அப்போதெல்லாம் தினம் ஒரு நண்பரை ஆபிஸுக்கு வரவைத்து அவர்களுடன் மணிக்கணக்கில் சினிமா குறித்த ஆக்கப்பூர்வமான உரையாடல்களை நிகழ்த்தி பொழுதைக் கழித்தார்.
- விஜய் சேதுபதிக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.
- அவருக்கு மிகப்பிடித்த பத்து படங்களில் ஒன்று `கரகாட்டக்காரன்’. அந்தப் படத்தில் இயல்பான ஒரு அழகு இருப்பதாக சிலாகிப்பாராம்.
- விஜய் சேதுபதி பிரபலமைடையும் முன்னரே தொடங்கப்பட படம்தான் ‘ரம்மி’. நீண்ட காலம் படப்பிடிப்பில் இருந்த அந்தப் படத்தின் பாதி ஷூட்டிங் முடிவதற்குள்ளேயே அவரது மார்க்கெட் எங்கோ சென்றுவிட, அதன்பிறகு அவருக்காக சில காட்சிகளையும் ஒரு டூயட் பாடலையும் இணைத்தார்கள். அந்த டூயட் பாடல்தான் ‘கூடமேல கூட வெச்சு கூடலூரு போறவளே’
Also Read : ஆப்கானிஸ்தான்: அமெரிக்காவின் 20 ஆண்டு போர் தொடங்கிய தருணம் எது.. 1999-2021 டைம்லைன்!
This paragraph is truly a good one it assists new web people, who are wishing
for blogging.!
Hello there! Do you know if they make any plugins to assist with SEO?
I’m trying to get my site to rank for some targeted
keywords but I’m not seeing very good success. If you know of any please share.
Appreciate it! I saw similar art here: Blankets