ஐபிஎல் தொடர் சூடுபிடித்திருக்கிறது. பிளே ஆஃபில் இருக்கும் கடைசி ஒரு இடத்துக்கு மும்பை – கொல்கத்தா இடையே கடுமையான போட்டி நடக்கிறது. நெட் ரன்ரேட், பாயிண்ட்ஸ் அடிப்படையில் எந்த அணிக்கு அட்வாண்டேஜ்? ஐந்து விதமான முடிவுகள் என்ன?
IPL 2021
ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கின்றன. தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ், ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ், விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பிளே ஆஃபுக்குத் தகுதிபெற்றுவிட்டன. பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறும் கடைசி அணி எது என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு விரைவில் விடை கிடைத்துவிடும். அந்த ஒரு இடத்துக்கு ரோஹித் ஷர்மாவின் மும்பை இந்தியன்ஸ், இயான் மோர்கனின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
KKR Vs MI
பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு மங்கியிருந்த நிலையில் மும்பை அணி, ராஜஸ்தான் ராயல்ஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. ராஜஸ்தானை 90-9 என்று சுருட்டிய மும்பை, 70 பந்துகள் மீதமிருக்கும் நிலையில், பெருவெற்றி பெற்றது. இதனால், அந்த அணியின் நெட் ரன்ரேட் அதிகரித்து புள்ளிப்பட்டியலில் கொல்கத்தாவுக்கு அடுத்தபடியாக ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் 10 புள்ளிகள் பெற்றிருக்கின்றன. ஆளுக்கு ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில், அந்த அணிகளால் அதிகபட்சம் 12 புள்ளிகளை மட்டுமே பெறமுடியும். அதேநேரம், 12 புள்ளிகளோடு இருக்கும் கொல்கத்தா, மும்பை அணிகளால் 14 புள்ளிகளை எட்ட முடியும் என்பதால், பஞ்சாப், ராஜஸ்தான் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றன. கொல்கத்தா தனது கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தானையும் மும்பை, ஹைதராபாத் அணியையும் எதிர்க்கொள்கின்றன.
ஐந்துவிதமான வாய்ப்புகள்
- நெட் ரன் ரேட் அதிகம் வைத்திருக்கும் கொல்கத்தா, கடைசிப் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தினாலோ அல்லது மும்பையை ஹைதராபாத் வென்றாலோ பிளே ஆஃபுக்கு எளிதாகத் தகுதிபெற்றுவிடும். அதேபோல், ராஜஸ்தானுடன் வெற்றிபெறாவிட்டாலும், ஹைதராபாத் மும்பைக்கெதிரான போட்டியில் வென்றால் புள்ளி கணக்கில் மும்பை அணியோடு சமமாக நிற்கும் கொல்கத்தா. அதேபோல், பஞ்சாப் கடைசிப் போட்டியில் வென்றாலும் 12 புள்ளிகளை 3 அணிகள் பெற்றிருக்கும். இதில், நெட் ரன்ரேட் அதிகம் வைத்திருக்கும் கொல்கத்தாவுக்கே அட்வான்டேஜ். அதேநேரம், மும்பை ஹைதராபாத்தை வீழ்த்தினால், புள்ளிப் பட்டியலில் 14 புள்ளிகளைப் பெற கடைசி போட்டியில் கொல்கத்தா வெற்றிபெற வேண்டும்.
- மும்பையைப் பொறுத்தவரை புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. நான்காவது இடத்தில் இருக்கும் கொல்கத்தாவை விட நெட் ரன்ரேட் ரொம்பவே குறைவு. அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு கடைசி போட்டியில் எஸ்.ஆர்.ஹெச்சை வீழ்த்த வேண்டும். அதேநேரம், ராஜஸ்தானிடம் கொல்கத்தா தோற்க வேண்டும்.
- பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை, கடைசி போட்டியில் அந்த அணி வென்றாக வேண்டும். அதேபோல், கொல்கத்தா, மும்பை அணிகள், தங்களது கடைசிப் போட்டிகளில் தோற்க வேண்டும். அப்போது, 12 புள்ளிகள் என்ற அடிப்படையில் 4 அணிகள் சமமாக நிற்கும். ஆனால், நெட் ரன்ரேட் விகிதத்தில் கொல்கத்தாவை முந்த வேண்டும்.
- ராஜஸ்தானுக்கான வாய்ப்பு என்று பார்த்தால், பஞ்சாபைப் போலவேதான். கொல்கத்தாவை அந்த அணி வெல்ல வேண்டும்; எஸ்.ஆர்.எச் மும்பையைத் தோற்கடிக்க வேண்டும். அந்த அணியின் நெட் ரன்ரேட் மும்பை, பஞ்சாபை விடக் குறைவு என்பதால், புள்ளிகள் டை ஆனாலும் ராஜஸ்தான் பிளே ஆஃபுக்குத் தகுதிபெறுவது கடினம்தான்.
- ரியல் போட்டி என்று பார்த்தால் கொல்கத்தா – மும்பை இடையேதான். நெட் ரன்ரேட் அடிப்படையில் மும்பையை விட கொல்கத்தா அதிகம் பெற்றிருப்பது, அந்த அணிக்கு சாதகமாக இருக்கிறது.
Also Read – MS Dhoni: `சென்னையில்தான் கடைசி போட்டி’ – ஐபிஎல்-லில் இருந்து ஓய்வு குறித்து தோனி சூசகம்