இயக்குநர் ஹரியோட ரெண்டு ஐகானிக்கான போலீஸ் கேரக்டர்ஸ்னா ஒண்ணு துரைசிங்கம்.. இன்னொன்னு ஆறுச்சாமி. திண்டுக்கல்லில் பிறந்து ஐ.பி.எஸ் படிச்சு திருநெல்வேலி டெபுட்டி கமிஷனர் ஆகி, `நான் போலீஸ் இல்ல பொறுக்கி’னு அரசியல் தாதா பெருமாள் பிச்சையை அலறவிட்ட சாமி. தூத்துக்குடில எஸ்.ஐ-யாக இருந்து சென்னைல கடத்தல் வழக்கு சிறப்பு பிரிவு அதிகாரியாகி நிழல் உலக தாதா மயில்வாகனத்தோட கொலகொலயா முந்திரிக்கா விளையாண்ட சிங்கம்.
இந்த ரெண்டு பேருல யார் சூப்பர் போலீஸ்ங்குறதை ஹரி படம் மாதிரியே விறுவிறுனு 5 வித்தியாசத்துல அலசிப் பார்க்கலாம் வாங்க.
- ‘கெட்டவன்ட்ட லஞ்சம் வாங்குனா தப்பில்ல’ என்ற வித்தியாசமான பிரின்சிபலுடன் இருப்பவர் சாமி. அதான் லஞ்சம் வாங்குறான்ல என்று அலட்சியமாக டீல் செய்தால் சிங்கமாக மாறி கர்ஜிப்பார். ஆனால், இந்த விஷயத்தில் சிங்கம் ரொம்ப ஸ்ட்ரிக்ட். லஞ்சம்னா டாபிக் எடுத்தாலே ஏழூருக்கு கேக்குறமாதிரி கர்ஜிப்பாரு. வர்றவன் ‘யப்பா சாமி.. ஆளைவிடுறா’னு ஓடிடுவான். சுருக்கமா சொல்லணும்னா கை ஓங்குனாதான் நடக்கும்னா கை ஓங்கணும்னு நினைக்குற போலீஸ் சிங்கம். கை நீட்டுனாதான் நடக்கும்னா கை நீட்டணும்னு நினைக்குற போலீஸ் சாமி.
- தனக்கு கீழ் இருக்கும் அதிகாரிகள் தப்பு செய்தால் வார்னிங் சஸ்பெண்ட் டிஸ்மிஸ்லாம் கிடையாது. நைட்டோட நைட்டா அடிச்சு தாமிரபரணி ஆத்துல புதைக்கிறது சாமி ஸ்டைல். தனக்கு மேல் இருக்கும் அதிகாரியே தப்பு செய்தாலும் ‘இது உன் கண்ட்ரோல்ல இருக்குற ஒன் ஆஃப் த போலீஸ் ஸ்டேஷன். என் கண்ட்ரோல்ல இருக்கிற ஒன் அண்ட் ஒன்லி போலீஸ் ஸ்டேஷன்’ என்று எகிறி அடிப்பது சிங்கம் ஸ்டைல்.
- ஒரு பிரச்னைனு வந்தா பாதிக்கப்பட்டவன் கைல துப்பாக்கியைக் கொடுத்து குற்றவாளியை சுடச் சொல்வாரு சாமி. அதுவே பிரச்னைனு வர்றவங்ககிட்ட கட்டிபிடிச்சு சமாதானமா போங்க என்று அட்வைஸ் பண்ணுவாரு சிங்கம். சுருக்கமா சொல்லணும்னா சாமியின் தீர்வு துப்பாக்கி வைத்தியம். சிங்கத்தின் தீர்வு கட்டிபிடி வைத்தியம்.
- வில்லன் தன் வீட்டிற்கே வந்து தன் காதலிக்கு முன்னாடியே அசிங்கப்படுத்தினாலும், அந்த நேரத்தில் நிதானத்தைக் கடைபிடிப்பார் சாமி. பெருமாள் பிச்சைக்கு சவால்விடும்போதுகூட காந்தி மஹான் உபதேசம் செய்வதுபோல நிதானமாக இருக்கும். இதற்கு அப்படியே நேர் எதிர் துரைசிங்கம். காதலி கொடுத்த பூச்செண்டை பிச்சுப்போட்டதற்காக வில்லனையே பொளந்துகட்டுவார். பக்கத்து டேபிளில் இருக்கும் ரவியை கூப்பிட்டாலும் சரி.. ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா என்று வில்லனை மிரட்டினாலும் சரி… பிபி எகிறி ஹைடெசிபல்லில் கத்துவதுதான் சிங்கம் ஸ்டைல்.
- காதல்னு வந்துட்டா வேலைவெட்டியையெல்லாம் விட்டுட்டு கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமானு ரொமான்ஸ் மோடுக்கு போயிடுவாரு சாமி. ஆனா சிங்கம் கடமைதான் ஃபர்ஸ்ட் காதலெல்லாம் நெக்ஸ்ட் என்று தன் வேலைக்காக கல்யாணத்தைக்கூட தள்ளிப்போடுகிற சின்சியர் ஆபிஸர். ஆக கடமையா காதலா என்று வரும்போது சாமி காதலின் பக்கம் நிற்பார். சிங்கம் கடமையின் பக்கம் நிற்பார்.
இந்த 5 பாயிண்டுகளை வச்சு சிங்கமா? சாமியா? சூப்பர் போலீஸ் யாருனு நீங்களே சொல்லுங்க!
Also Read – வலிமை படத்தின் வில்லன் கேங் – ரியல் Satan’s Slaves பத்தி தெரியுமா?