தமிழ்நாடு நவ் யூடியூப் சேனலில் வாரந்தோறும் செவ்வாய் கிழமையில் வெளிவரும் தொடர்தான் ‘இவர்களும்’. இந்த தொடரின் இந்த வார எபிசோடில் பேசியிருப்பவர்தான் ஈஸ்வர் சந்திரபாபு. மறைந்த நடிகர் சந்திரபாபுவின் தோற்றத்தில் இருக்கும் ஈஸ்வர், பல கோவில் திருவிழாக்களின் மேடையில் ஆடி மக்கள் மனதில் இடம்பிடித்தவர். அதன்பிறகு சினிமாவிலும் குரூப் டான்ஸராக ஆடி, ‘குக்கூ’, ‘பிச்சைக்காரன்’ போன்ற படங்களிலும் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். இவர் தனது கரியரில் சந்தித்த பல பிரச்னைகளைப் பற்றியும், மனிதர்களைப் பற்றியும்தான் இந்தப் பேட்டியில் பேசியிருக்கிறார்.

50 ரூபாய் சம்பளத்துக்கு கீழ விழுந்து ஆடிய அனுபவம், ‘சந்திரபாபு மாதிரியே இருக்கியே’ என மனோரமா இவரை செல்லம் கொஞ்சிய தருணம், மேடை நிகழ்ச்சி ஒன்றில் 12 முறை ஒன்ஸ்மோர் கேட்கப்பட்டு ஆடிய சந்திரபாபு பாடல், இவரை சந்திரபாபு மாதிரி ஆடச்சொல்லி ரசித்த பிரபுதேவா, விஜய், அஜித் என பல தகவல்களைச் சொன்ன ஈஸ்வர், இந்த வீடியோவில் இறுதியில் சந்திரபாபு போல் வேடமிட்டு ஒரு பாடலுக்கும் நடனமாடினார். இவை அனைத்தையும் கீழே இருக்கும் வீடியோவில் பார்க்கலாம்.