தமிழ் சினிமாவில் இவர்களும் ஒன் டேக் ஆர்டிஸ்டுகள்தான்… இவர்களைப் பற்றி நாம் தெரிந்திருக்கலாம்… ஆனால், இவர்கள் சொல்லும் கதைகள் நாம் அறியாதவை. தமிழ் சினிமா கலைஞர்கள் பற்றிய ‘இவர்களும்’ சீரிஸில் நாம் பேசப்போவது நடிகர் ராஜா ராணி’ பாண்டியனிடம்தான். நமது
Tamilnadu Now’ யூடியூப் சேனலுக்கு பிரத்யேகமாகப் பேட்டி கொடுத்திருக்கிறார் பாண்டியன்.
`இவர்களும்’ சீரிஸில் அவர் நம்மிடம் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். ஸ்டில் போட்டோகிராஃபராக கரியரைத் தொடங்கிய பாண்டியன் எப்படி நடிகரானார்… விஜய் முதலான தான் சந்தித்த கலைஞர்கள் பற்றியும் அவர் நம்முடன் பகிர்ந்துகொண்டார். குறிப்பாக, நடிகர் ராமராஜனின் பெர்சனல் போட்டோகிராபரானது எப்படி என்பது பற்றியும், நடிகை சில்க் ஸ்மிதா தன்னைக் கலாய்த்து வம்பிழுத்தது பற்றியும் சுவாரஸ்ய பின்னணிகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். மேலும், கலைஞர் கருணாநிதி மாதிரி மிமிக்ரி பண்ணுவது, அவரை சந்தித்த தருணம்னு பல விஷயங்களைப் பேசிருக்கார். அவர் சொன்ன தகவல்களை மிஸ் பண்ணாம இருக்க கீழ இருக்க லிங்க கிளிக் பண்ணி இவர்களும் சீரிஸின் இந்த எபிசோடத் தவறவிடாம முழுசா பாருங்க…
Also Read – இளைஞர்களின் கனவுக் கன்னியா இருந்து…தலைமறைவான ஹீரோயின்ஸ்!