குரங்குகள் உலகைப் பற்றிய திரைப்படங்கள் நிறையவே வந்துருக்கு. குறிப்பா சொல்லணும்னா டார்சன், ஜங்கிள் புக், சிம்பான்சீ, கிங்காங்னு இந்த பட்டியல் ரொம்பவே பெருசு. சமீபத்துல கூட கிங்காங் VS காட்சில்லா திரைப்படம் வெளியாகி அனைத்து தரப்பு மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த வகையில இந்த மாதிரியான படங்களுக்கு உலகம் முழுவதும் எப்பவுமே வரவேற்பு இருந்துட்டுதான் இருக்குது. ஆனால், இந்தியாவுல இருந்து விலங்குகள் பற்றிய அனிமேட்டட் படங்கள் வந்தது இல்லைனே சொல்லலாம். அந்த குறையைப் போக்க இப்போ `கபி’ என்ற திரைப்படம் விரைவில் வர இருக்குது.
கபி படத்துக்கான டீசர் இன்றைக்கு வெளியாகி சோஷியல் மீடியாக்கள்ல பலரது பாராட்டையும் பெற்று வருது. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், லிப்ரா புரொடக்ஷன் நிறுவனத்தோட சேர்ந்து இந்த படத்தை வெளியிடுறாங்க. `India’s First Giant Super Hero’, Journey Of An Ape’, To The Land Of Raavana’, To Unite What Is Broken’ போன்ற அட்டகாசமான டேக்லைனோட டீசர் வெளியாகி அசத்தி இருக்கு. ஆரம்பத்துல வர்ற பனிமலை, குரங்கின் விரல் நுனியில வந்து பட்டர்ஃப்ளை உட்கார்றது, முதுகுல தீயோட குரங்கு ஓடுறது அப்டினு ஷார்ட்ஸ் எல்லாம் பிரமாதமா எடுத்துருக்காங்க.
கௌஷிக் கர்ரா மற்றும் என்.ராமசாமி இணைந்து இந்த படத்துக்கான கதையை எழுதியிருக்காங்க. கோகுல்ராஜ் பாஸ்கர் என்பவர் இந்தப் படத்தை இயக்கி இருக்காரு. அரவிந்த் சிங் ஒளிப்பதிவாளரா பணியாற்றி இருக்காரு. டீசர் மக்கள் மத்தில அதிகமா கவனம் பெற்றிருப்பதால படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கு. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம்னு பல மொழிகள்ல இந்தப் படம் வெளியாக இருக்கு. `ரோரிங் சூன்’னு சொல்லியிருக்காங்க. வெயிட் பண்ணுவோம்.
ஜடேஜா ஆல்ரவுண்ட் பெர்ஃபார்மன்ஸ்ல இந்த 5 விஷயங்களைக் கவனிச்சீங்களா?