உபேந்திரா

சிவராஜ்குமாரின் கன்னட டிஸ்யூ… உபேந்திரா!

‘உபேந்திரா டிஃப்ரண்ட் ஆக்டர் அண்ட் டைரக்டர். சூப்பர் படம் பார்த்தேன். ரொம்ப சிறப்பா இருக்கு. இவர் என்கிட்ட கதையை கொண்டு வந்தா கண்டிப்பா நான் நடிப்பேன். இயக்கத்தை எக்காரணம் கொண்டும் நிறுத்திடாதீங்க’. இதை நான் சொல்லலை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்ன வார்த்தைகள் இது.

சூப்பர் ஸ்டார் வாழ்த்தின அந்த படத்தை சுமார் 10 வருஷ இடைவெளிக்குப் பின்னால உபேந்திரா இயக்கியிருந்தார். அந்த படம் எல்லா சென்டர்கள்லேயும் பாக்ஸ் ஆபீஸ் வசூலை அள்ளிக் குவிச்சது. இன்னைக்கும் நடிகர் உபேந்திராவை சினிமா உலகம் மிகப்பெரிய இயக்குநராகவே கொண்டாடுது. கே.ஜி.எஃப் ராக்கியின் ரீல் கதைதான் இவரின் ரியல் கதை. சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாத நிலையில் இருந்தவர், இன்னைக்கு இந்தியாவே கொண்டாடுற முக்கியமான இயக்குநர் கம் நடிகர்.

உபேந்திரா

உபேந்திராவின் ஆரம்பக் காலக்கட்ட வாழ்க்கை ரொம்பவே கொடுமையானது. குடும்ப வறுமையின் காரணமா, கோயில்க பிரசாதங்களை மட்டுமே உணவா வச்சுக்கிட்டு வளர்ந்தார். சின்ன வயசுல இருந்தே இவருக்கு கண் பிரச்னை இருந்தது. அதை இன்னைக்கும் இவர் படங்கள்ல நடிக்கிறப்போ கண் க்ளோஸ்அப் ஷாட்ல பார்க்க முடியும். நண்பர்களை ஒன்னா சேர்த்து குழு அமைச்சு கல்லூரி காலங்கள்லேயே நாடகங்கள் போட்டார். தன் தூரத்து உறவினரான நடிகர், இயக்குநர் காசிநாத்துடன் இணைஞ்சு வேலை செய்ய ஆரம்பிச்சார். காசிநாத் இயக்குற படங்கள்ல பாடல்கள், வசனம், திரைக்கதைனு எல்லா துறைகள்லேயும் உதவி செய்றார்.

நடிகர் ஜக்கேஷை வைச்சு முதன்முதலா ‘தார்லே நான் மகா’ படத்தை இயக்கி என்ட்ரி கொடுத்தார். முழுக்க முழுக்க காமெடி டிராமா. சின்ன பட்ஜெட் படம், நல்ல வசூல் கிடைச்சது. அடுத்ததா தன் குரு காசிநாத்தை நடிக்க வைச்சு ஷ்ஷ்ஷ் படத்தை இயக்கினார். முழுக்க முழுக்க ஹாரர். இதுவும் சின்ன பட்ஜெட், பாக்ஸ் ஆபீசிலும் நல்ல வசூல். நல்ல இயக்குநரா இருந்தாலும், ஒருபெரிய ஹீரோ கிடைச்சாத்தானே பிரம்மாண்டமான வெற்றி கிடைக்கும்னு காத்துக் கிடக்கிறார், உபேந்திரா. அப்போதான் இவர் லைஃப்ல என்ட்ரி கொடுக்கிறார், சிவராஜ்குமார். வா உன்கிட்ட கதை இருக்கா, இருந்தா சொல்லுனு கேட்கிறார். முதல் படம் காமெடி, ரெண்டாவது ஹாரர்னு எடுத்துட்இருக்கடேன். இந்த முறை கேங்ஸ்டர் கதை இருக்கு, பண்ணலாமானு கேட்க, கதையை சொல்லுங்க பிடிச்சா பண்ணலாம்னு சிவராஜ்குமார் சொல்றார். கதையை சொல்லி முடிச்சார், உபேந்திரா. சிவராஜ்குமார் மலைச்சு போயிட்டார். யோவ் சூப்பர் கதைய்யா.. ஆனா வன்முறை இதுக்கு முன்னாடி கன்னட சினிமாவுலயே இல்லாத அளவுக்கு இருக்கே, சரியா வருமானு யோசிச்சு, சரி உனக்காக பண்றேன், வா ஒருகை பார்க்கலாம்னு முடிவு பண்ணி, இறங்கினாங்க. ஒவ்வொரு ஃப்ரேமா செதுக்குனாங்க, ரெண்டு பேரும். அந்த படத்தோட பெயர் ஓம். கன்னட சினிமா மட்டும் இல்லாம ஒட்டுமொத்திய இந்திய சினிமாவே திகைக்கவைச்ச படம். திரைக்கதை நேர்த்தி ஒருபக்கம் கைகொடுத்தது. ஆனால் மறுபக்கம் படத்தை தூணாக நின்று காப்பாற்றியது, சிவராஜ்குமார்தான். நெல்சன் ஜெயிலர் ஸ்டேஜ்ல சொல்லியிருப்பாரே, ‘ஏங்க, அவர் ஃபேஸ் ரொம்ப டெட்லியா இருக்கு, ரியல் கேங்ஸ்டர் மாதிரி இருக்கார்’னு சொல்லியிருப்பார். அப்படித்தான் அந்த படத்துல இருந்தார். நிஜமான ரவுடிகளே மிரளும் அளவுக்கு பெர்ஃபார்மென்ஸ்ல பின்னியிருந்தார், சிவராஜ்குமார். அதை ஒவ்வொரு ஃப்ரேமா செதுக்கினார், உபேந்திரா. இந்த ஓம் படத்தோட தாக்கத்தால பல மொழிகள்ல ரீமேக்கும் ஆச்சு. ஓம் ஒரு ட்ரெண்ட் செட்டர் படமா மாறிச்சு. ஒரு டானோட கேரெக்டர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை புதுசா உருவாக்கினதுனே சொல்லலாம். இந்த ஓம் பட மேனரிசத்தை அமர்க்களம் படத்துல அஜித் கேரெக்டர்ல பார்க்க முடியும். இந்தப்படத்தோட வெற்றி மூலமா ஹாட்ரிக் வெற்றியை பதிவு பண்ணார், உபேந்திரா.

உபேந்திரா

அடுத்ததா இயக்கின ஆபரேஷன் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரலை. அடுத்ததா தானே இயக்கி, நடிச்சுடலாம்னு முடிவுக்கு வந்தவர், ஏ படத்தை இயக்கினார். இந்த படம் பல பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை அடிச்சு நொறுக்கிச்சுன்னே சொல்லலாம்.

இந்தப்படத்தை பார்த்துவிட்டு அமிதாப் பச்சன் பாராட்டினார். அப்படின்னா படம் எந்த அளவுக்கு படம் நல்லா இருக்கும்னு நீங்களே தெரிஞ்சுக்கோங்க. இந்த படம் டப்பிங்கில் ஆந்திராவில் வெளியாகி அங்கேயும் தன்னோட வருகையை பதிவு செஞ்சார், உபேந்திரா. அடுத்ததா தன் பெயரான உபேந்திரானு டைட்டில் வைச்சு படத்தை இயக்கினார். இதுவும் தன் முந்தைய படங்களை விட மிகப்பெரிய வெற்றி. அடுத்ததா இயக்கத்துக்கு 10 வருஷ இடைவெளிவிட்டு சூப்பர்னு அடுத்த படத்தை இயக்கினார். அதுவும் மிகப்பெரிய வெற்றி. இந்த படத்தை ரஜினி தியேட்டர்ல பார்த்துட்டு உபேந்திராவை பாராட்டினார். அப்படியே நடிப்புலயும் குடும்பா, ரத்தக்கண்ணீரு, ஆட்டோ சங்கர்னு ஆரம்பிச்சு பல படங்கள்ல நடிகரா ஜொலிச்சவர். இப்போவும் யு1 படத்தை இயக்கியிருக்கார். இடையில கப்சா பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வியை சந்திச்சது. ஆனா பெரிசா எதுக்குமே அலட்டிக்க மாட்டார், உபேந்திரா.

Also Read – ஷாருக்கான் பாலிவுட்டுக்கு மட்டுமல்ல… பாக்ஸ் ஆபிஸுக்கும் `பாட்ஷா’தான் ஏன் தெரியுமா?

இயக்குநரா வேலை பார்க்கிறப்போ தன் வாழ்க்கையில பார்த்த, தெரிஞ்ச அனுபவங்களை வைச்சு மட்டும்தான் கதைகள் பிடிப்பார். ஒரு கதை மட்டும் கிடைச்சுட்டா அதை வைச்சு திரைக்கதை அமைக்கிறதுல உபேந்திரா கில்லாடி. இவரை வித்தியாசமான இயக்குநர்னு சொல்றதுல இவருக்கு விருப்பமே இல்லை. நான் மக்கள் மனசுல இருக்கிறதைத்தான் படமாக்குறேன்னு சொல்வார். காஞ்சனா ரீமேக்கை கன்னடத்துல பண்ணினதும் இவர்தான். அண்ணாமலை, வரலாறு படங்களை ரீமேக் பண்ணினதும் இவர்தான். ஆந்திரா போய் அல்லு அர்ஜூன் கூட சேர்ந்தும் நடிப்பார், சத்யம் படத்துல விஷால் கூடவும் சேர்ந்து நடிப்பார். இயக்கம் எப்படியோ நடிப்பும் அப்படித்தான் எப்போவுமே வித்தியாசமான கதைகளை செலக்ட் பண்ணித்தான் நடிப்பார். போல்டான கேரக்டர்களையே அதிகமாக விரும்புவார். இவரைப் பத்தி இன்னொரு விஷயம் நல்ல டான்சரும் கூட. புதுசு புதுசா கதைகளை சூஸ் பண்ணி நடிப்பார். இவர் நடிகை மற்றும் பிரபல மாடலான பிரியங்கா திரிவேதியை கல்யாணம் பண்ணிக்கிட்டார். 2018-ல் உத்தம பிரஜாகீய கட்சியை ஆரம்பிச்ச்சு, இப்போ வரைக்கும் அதை நடத்திட்டும் வர்றார்.

கடைசியா வந்த கப்சா படம் கூட கன்னடத்தோட மல்டி ஸ்டாரர் படம்தான். ஆனா ப்ளாட் சரியில்லாததாலயும், கே.ஜி.எஃப்ஐ நியாகப்படுத்துனதாலையும் செல்ஃப் எடுக்காம போயிடுச்சு. இன்னைக்கும் இவர் கூப்பிட்டா சிவராஜ்குமாரும், சுதீப்பும் வந்து நடிச்சுக் கொடுக்கிறாங்க. அந்த அளவுக்கு இவர்மேல எல்லா ஹீரோக்களும் மரியாதை வச்சிருக்காங்க. மேல ஒரு இமேஜ் பத்தி சொல்றேன்னு சொல்லியிருந்தேன். அது என்னன்னா, கப்சா படம் செகண்ட் பார்ட் தயாராகிட்டிருக்காம்.. சில வருஷங்கள்ல அந்த படம் தியேட்டருக்கு வருமாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top