இன்னைக்கும் பலரோட ஃபேவரைட் லிஸ்ட்ல ஈரம் படம் இருக்கும். ஈரம் படத்தோட கதையைக்கூட முதல்ல ஷங்கர் கேக்க மாட்டேன்னு சொல்லியிருக்காரு. அப்புறம் அந்தப் படம் பண்றதுக்கு முன்னாடி அந்தப் படத்தோட டைரக்டர் அறிவழகன் ஸ்க்ராட்ச் ஃபிலிம் ஒண்ணு எடுத்து அவர்கிட்ட காமிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்காரு. ஃபஸ்ட் டே ஷுட் பண்ண வேண்டியது கொஞ்சம் பிரச்னை ஆகியிருக்கு. அதுனால அறிவழகன் ரூம்ல வந்து கொஞ்சம் சோகமா உட்கார்ந்துருக்காரு. அதைப் பார்த்துட்டு அவரோட ரூம் மேட் என்னடா பிரச்னைனு கேட்ருக்காரு. உடனே அவரு இந்த மாதிரி ஒண்ணு பண்ண நினைச்சேன், அட்துக்கு 35,40 ஷாட்ஸ் தேவை. ஆனால், 5,6 ஷாட் தான் கையில இருக்குனு சொல்லியிருக்காரு. ரூம்மேட் யோசிச்சிட்டு உனக்கு இப்போ என்ன வேணும்னு அவர் கிட்ட கேட்ருக்காரு. அறிவழகன் கதையை சொல்லாமல் என்ன வேணும்னு ஷார்ட்ஸா சொல்லியிருக்காரு.
சரி, ஓகேனு சொல்லிட்டு பெஸ்ட் கேமரா ஒண்ணு எடுத்து, சிலரை ஹெல்ப்க்கு வைச்சு ஷுட் பண்ணி, அவரே அந்த சீனை எடிட் பண்ணி, தமனோட ஃப்ரெண்டைக் கூப்பிட்டு மியூசிக்லாம் போட வைச்சு 8 நிமிஷம் படமா ஷங்கர்கிட்ட பிரசண்ட் பண்ணியிருக்காங்க. படம் புடிச்சுப் போனதும் ஷங்கர் அந்த படத்தோட முழு ஸ்கிரிப்ட்டையும் வாங்கி படிச்சு, படத்தை புரொடியூஸ் பண்ண அக்சப்ட் பண்ணியிருக்காரு. யாரை கேமரா மேனா போடலாம்னு அறிவழகன் பெரிய லிஸ்ட்டே எடுத்துட்டு போய்ருக்காரு. ஷங்கர் வாங்கி பார்த்துட்டு, இவங்கலாம் வேண்டாம் ஸ்க்ராட்ச் ஃபிலிம் பண்ண கேமரா மேன் இருக்காருல, அவரையே போட்ருங்கனு சொல்லியிருக்காரு. அவர்தான் மனோஜ் பரமஹம்சா. அதாங்க, இன்னைக்கு உலகமே எதிர்பார்த்து காத்துட்டு இருக்குற லியோ படத்தோட கேமரா மேன்.
Also Read – விஜய்க்கு ஆப்போசிட், அஜித் ஃபேவரைட், எஸ்.ஏ.சி வழி.. ஜேசன் சஞ்சய் சம்பவம் பண்ணுவாரா?!
மனோஜ் பரம்ஹம்சா-வோட அப்பா இயக்குநர் யு.வி.பாபு. தெலுங்குல அரை டஜன் படங்கள் டைரக்ட் பண்ணி பெயர் வாங்குன ஆள். அதுனால சினிமான்றது சின்ன வயசுல இருந்தே மனோஜ் பரம்ஹம்சாவோட வாழ்க்கைல பிணைஞ்சிருக்குனு அடிச்சு சொல்லலாம். அவங்க அப்பாவுக்குதான் இவர் மிகப்பெரிய அளவில் சினிமோட்டோகிராஃபரா சினிமாத்துறைல வலம் வரணும்னு நினைச்சிருக்காரு. அதுனாலயே சின்ன வயசுல இருந்தே ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு கூட்டிட்டுப் போறது, கேமரா பற்றிய சின்ன சின்ன ரகசியங்களை சொல்லி கொடுக்குறதுனு அவங்க அப்பா தன்னோட பையன் சினிமோட்டோகிராஃபர் ஆக என்னலாம் பண்ணனுமோ எல்லாமே பண்ணிட்டு இருந்துருக்காரு. கேமரா மேன் சரவணன்கிட்ட கிட்டத்தட்ட 7 வருஷம் அஸிஸ்டெண்டா வேலை பார்த்துருக்காரு. சிலம்பாட்டம் படத்தை எடுக்குறதுக்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கும்போது, ஒரு மேஜிக்கல் மொமண்ட் அவர் வாழ்க்கைல நடந்துச்சுனு சொல்லலாம். மனோஜோட கிளாஸ்மேட் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்கிட்ட உதவி இயக்குநரா இருந்துருக்காரு. அப்ப, சென்னையில் ஒரு மழைக்காலம் அப்டின்ற படத்தை எடுக்க கௌதம் வேலைகளை பண்ணிட்டு இருந்தாரு. அவர்கிட்ட மனோஜோட ஃபரண்ட் கேமரா மேனுக்காக இவரோட பெயரை பரிந்துரை பண்ணியிருக்காரு. அப்படி சென்னையில் ஒரு மழைக் காலம் படத்தோட கேமரா மேனா வர்றாரு. ஆனால், அந்தப் படம் அவருக்கு கைகொடுக்கலை. பாதியிலேயே நின்னு போச்சு. பேரலல் டைம்லதான் நான் ஏற்கெனவே சொன்ன ஈரம் படத்தோட சம்பவம் நடந்துச்சு. அந்தப் படத்தோட சினிமோட்டோகிராஃபி இன்னைக்கும் பாராட்டப்பட்டுட்டே இருக்கு.
விண்ணைத்தாண்டி வருவாயா படம் எடுக்குறதுக்கு பின்னாடி மிகப்பெரிய ஸ்டோரி இருக்கு. அந்த கதையே செம இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். ஜெஸ்ஸின்ற கேரக்டரே நிஜமாவே கௌதம் மேனன் வீட்டு பக்கத்துல இருந்த கேரக்டராம். அந்த லைனை எடுத்து மகேஷ்பாபுவுக்காக அந்தக் கதையை கௌதம் எழுதியிருக்காரு. ஆனால், ரொம்ப லவ்வா இருக்குனு மகேஷ் பாபு சொல்லியிருக்காரு. கொஞ்சம் ஆக்ஷனும் சேர்க்க மகேஷ் பாபு சொல்லியிருக்காரு. ஆனால், ஸ்கிரிப்ட்டை மாத்தாமல் விண்ணைத்தாண்டி வருவாயாவை சிம்புவை வைச்சு எடுத்துருக்காங்க. படத்தைப் பத்தி நினைச்சாலே நமக்கு முதல்ல நியாபகம் வர்றது அந்தப் படத்தோட பாடல்களும் அழகான இயற்கை இடங்களும்தான். மனோஜ் பரம்ஹம்சா உண்மையாவே அந்தப் படத்துல கேமராவை வைச்சு விளையாடியிருப்பாரு. ஏரிக்கு பக்கத்துல நின்னு ஏன் ஜெஸியை புடிச்சிருக்கு அப்டினு கார்த்தி பேசுற சீன், சர்ச்சுக்குள்ள ரெண்டு பேரும் சந்திச்சுக்குற சீன், ஓமணப்பெண்ணே பாட்டு, காபி டேபிள்ள உட்கார்ந்துட்டு ரெண்டு பேரும் பேசுறது, கேட்ல வந்து சாஞ்சு நிக்கிறது, நைட்டு ரெண்டு பேர் பிரேக்கப் பண்ற சீன் எல்லாமே அட்டகாசமா ஷுட் பண்ணியிருப்பாரு. அந்தப் படத்துல நிறைய சீனை லோ ஆங்கிள்ல வைச்சு ஷுட் பண்ணியிருப்பாரு. அதுவே ஒரு மாதிரி இண்ட்ரஸ்டிங்கா இருக்கும். முதல் ரெண்டு படமுமே மனோஜ் பரம்ஹம்சாவுக்கு மிகப்பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்துச்சு. அப்புறம் தமிழ், மலையாளம்னு மாத்தி மாத்தி அவர் நிறைய படங்கள் எடுத்தாலும் நச்னு அவர் பெயர் சொல்லும்படியான படங்கள் அமையவே இல்லைனு சொல்லலாம்.
எனை நோக்கி பாயும் தோட்டா, துக்ளக் தர்பார், பீஸ்ட், பிரின்ஸ்னு பல படங்களை இவர் எடுத்தாலும், சினிமோட்டோகிராஃபி வழியா தன்னால என்ன பெஸ்ட் கொடுக்க முடியுமோ அதை பக்காவா கொடுத்துருவாரு மனோஜ் பரமஹம்சா. எக்ஸாம்பிள்க்கு பீஸ்ட் படத்தையே எடுத்துப்போமே அதுல டோர் வைச்சு மறைச்சு சுடுற சீன் ஒண்ணு வரும். அட்டகாசமா லைட்டிங்லாம் பண்ணி எடுத்துருப்பாரு. அரபிக்குத்து பாட்டு, பேனரைக் கிழிச்சுட்டு வெளிய வர்றது எல்லாமே அட்டகாசமா பண்ணியிருப்பாரு. இவ்வளவு பெர்ஃபெக்ட்டா தன்னோட வேலையை மனோஜ் பரமஹம்சா பண்றதுக்கு முக்கியமான காரணம், அந்த பிளானிங்தான். பீஸ்ட்ல ஆரம்பத்துல வரக்கூடிய ஃபைட் சீன் கூட அவ்வளவு ஷார்ப்பா எடுத்துருப்பாங்க. மனோஜோட கேமரா பண்ண மேஜிக் விஷயங்களைப் பார்க்கும்போது, லியோல மனுஷன் என்ன பண்ணியிருக்காருனு நினைக்க தோணுது. என்னதான் பெர்ஃபெக்ட்டா கேமராவை வைச்சு விளையாடி இருந்தாலும், கதையும் முக்கியம் அப்டின்றதுக்கு மனோஜ் பரம்ஹம்சாவோட பல படங்களை எடுத்துக்காட்டா சொல்லலாம்.
மனோஜ் பரமஹம்சா எடுத்த ஃப்ரேம்ல உங்களோட ஃபேவரைட் என்னனு கமெண்ட்ல சொல்லுங்க.