பேய், பிசாசு – இது மேல எல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இருக்கா? இல்லைனாலும் பரவால்ல.. இந்த யூ டியூப் சேனல்களை பார்த்தீங்கனா.. உண்மைலயே பேய்லாம் இருக்கும் போலயேனு உங்களுக்கே சந்தேகம் வந்துரும். ஆமாங்க, த்ரில்லான சம்பவங்களை நேரடியாக களத்துக்குச் சென்றோ அல்லது கதை மூலமாகவோ அல்லது திகிலான படங்களைப் பற்றியோ யூ டியூப் மீடியம் வழியா உங்களுக்கு தெரியப்படுத்தும் நிறைய சேனல்கள் இருக்கு. அதுல சில இண்ட்ரஸ்டிங்கான சேனல்கள் பத்திதான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்கப் போறோம்.
சிம்ப்ளி சரத் (Simply Sarath )
`ரிஸ்க் எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி’ – இந்த டயலாக் சிம்ப்ளி சரத்துக்கு ரொம்பவே பொருத்தமா இருக்கும். ஏன்னா.. அவர் போடுற வீடியோக்களை பார்க்கும்போது `எவ்வளவு ரிஸ்க் எடுக்காருல?!’ அப்டினு நமக்கே தோணும். மக்களை என்டர்டெயின்மென்ட் பண்றதுக்காகவே பேய் இருக்குனு நம்பப்படுற இடங்கள் மற்றும் கைவிடப்பட்ட இடங்களுக்கு சென்று வீடியோ எடுக்குறாரு. சவுத் இந்தியாவிலேயே நம்பர் 1 கோஸ்ட் ஹண்டிங் சேனல் இதுதான்னு சொல்றாங்க. இவங்க சூஸ் பண்ற இடங்களே வேற லெவல்ல இருக்கும். இவங்க ஸ்டைல்ல சொல்லனும்னா.. இவங்க போற எல்லா இடமும் டேஞ்சர்தான். 2018-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சேனலுக்கு இதுவரை சுமார் 5.5 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் இருக்காங்க. சிம்ப்ளி சரத்துக்கு நிறைய ஃபேன்ஸூம் இருக்காங்க.
கிரே வொல்ஃப் ( Gray Wolf )
பொழுதுபோக்கு, த்ரில்லர், சாகசம் இந்த மூன்றையும் ஒரே இடத்துல நீங்க பார்க்கனும்னு ஆசைப்பட்டா `கிரே வோல்ஃப்’ சேனல் உங்களுக்கு சரியானதாக இருக்கும். பெரும்பாலும் இரவு நேரங்களில் கைவிடப்பட்ட, ஆட்கள் அதிகம் இல்லாத இடங்களுக்கு நேரடியாகச் சென்று அங்கு என்ன இருக்கிறது என்பதையும் அங்கு கேட்கும் விசித்திரமான சப்தங்களையும் பதிவு செய்து த்ரில்லான எக்ஸ்பீரியன்ஸை நமக்கும் வழங்குகிறார். வாசு என்பவர்தான் இந்த சேனலை நடத்தி வருகிறார். 2018-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சேனலுக்கு இதுவரை சுமார் 3.6 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் வந்துள்ளனர். இவரோட ஃப்ரண்ட்ஸ் கொடுக்குற ரியாக்ஷன் பாக்குற உங்களுக்கே செம பயத்தை ஏற்படுத்தும்.
ஃபயாஸ் தமிழன் ( Fayaz Thamizhan )
லேடன்ட பேசுறியான்ற மாதிரி.. பேய்கிட்ட பேசுறியானு… இவர் போடுற வீடியோக்கள்ல திகில் அனுபவத்துக்கு பஞ்சமே இருக்காது. லைட்டிங் செட்டிங்ல இருந்து குட்டி குட்டி சவுன்ட் எஃபெக்ட் வரைக்கும் நம்மள திகிலான அனுபவத்துக்குள்ளேயே வச்சிட்டு இருக்கும். அவர் தங்கி இருக்குற இடமே முன்னாடி சுடுகாடாதான் இருந்துச்சாம். பேயைத் தேடியும் போவாரு.. தான் இருக்குற இடத்துலயே பேயை வரவச்சும் பேசுவாரு. இதுவரைக்கும் 90.6 ஆயிரம் சப்ஸ்கிரைபர்கள் இவரோட சேனலுக்கு இருக்காங்க. இவர் வீடியோக்கள்ல `ஐ வில் கில் யூ’னு பேய் பேசிலாம் இவர பயமுறுத்துது. இருந்தாலும் ரொம்ப தைரியம் பாஸ் உங்களுக்கு. 2011-ம் ஆண்டு முதல் இந்த சேனலை ஃபயாஸ் நடத்திட்டு வர்றாரு.
தமிழ் சி.ஐ.டி
உலக அளவில் நடக்கக்கூடிய அதிசயங்கள், மர்மமான விஷயங்கள், ஏலியன்கள் உள்ளிட்ட இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை என்டர்டெயின்மென்டா மக்களுக்கு சொல்ற சேனல்தான் தமிழ் சி.ஐ.டி. இவங்க சொல்ற கதைகள் எல்லாமே திகில் அனுபவத்துக்கு பஞ்சம் இல்லாததாதான் இருக்கும். இதுவரைக்கும் சுமார் 1.92 லட்சம் மக்கள் இந்த சேனலை சப்ஸ்கிரைப் பண்ணியிருக்காங்க. 2018-ம் ஆண்டு முதல் இந்த சேனலை ஆரம்பிச்சு நடத்திட்டு வர்றாங்க.
My Randy
சேனல் பேரு எவ்வளவு வித்தியாசமா ஃபன்னியா இருக்கோ.. அதே மாதிரிதான் இவங்க போடுற வீடியோவும் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். நவீன் மற்றும் மோகன், இந்த இரண்டு பேரும்தான் இந்த சேனல்ல வீடியோ போட்டுட்டு இருக்காங்க. 2020-ல் இந்த சேனலை ஸ்டார்ட் பண்ணியிருக்காங்க. தொடர்ந்து நிறைய வீடியோக்கள் போட்டுட்டு வர்றாங்க. இவங்க போடுற வீடியோக்கள்லயும் திகிலுக்கு குறைவே இருக்காது. பேய்கூட ஃப்ரண்ட்ஸ லைவ்லலாம் பேச வைக்கிறாங்கனா பார்த்துக்கோங்க. பேய், மனிதர்களை கன்ட்ரோல் பண்ற விஷயங்களை எல்லாம் இவங்க வீடியோல பார்க்கலாம்.
இந்த வீடியோக்கள்ல வர்ற மாதிரி உங்களுக்கு நேரடியான பேய் தொடர்பான அனுபவங்கள் எதாவது இருந்தா கமென்ட்ல சொல்லுங்க மக்களே!
Also Read : விஜய் முதல் ரொனால்டோ வரை… செலிபிரிட்டிகளின் செயல்களால் நஷ்டமடைந்த பிராண்ட்கள்!