தமிழ் சினிமால தான் ஹீரோவா அறிமுகமாகுற முதல் படத்திலேயே தனக்குனு சொந்தமா கேரவன் வச்சிருந்த ஹீரோனா அது ‘மெகந்தி சர்க்கஸ்’ பட ஹீரோ மாதம்பட்டி ரங்கராஜ்தான். மோடில ஆரம்பிச்சு கமல் வரைக்கும் பலருக்கும் இவரோட சமையல் ஃபேவரிட். ஒரே நேரத்தில 75 ஆயிரம் பேருக்கு பிரமாண்டமா சமையல் பண்ணி வியக்க வைப்பாங்க.. இன்னொரு பக்கம் கோவை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு சமையல் பண்ணிக் கொடுத்து நெகிழ வைப்பாங்கனு மாதம்பட்டி கேட்டரிங்கும் தனி மவுசு உண்டு. யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்? மாதம்பட்டி கேட்டரிங்கோட வரலாறு என்ன?
மாதம்பட்டி ரங்கராஜோட கதை ஜி.டி.நாயுடு காலத்துல இருந்து ஆரம்பிக்குது. ரங்கராஜோட அப்பா ஃபேமஸான மாதம்பட்டி தங்கவேலு 1960-கள்ல ஜி.டி.நாயுடுகிட்ட சமையல் வேலை பார்த்தாரு. அப்பறம் சின்ன சின்ன ஹோட்டல்கள்ல தினம் 20 ரூபா சம்பளத்துக்கு சமையல் வேலை பார்த்திருக்காரு. அவர் வேலைபார்த்த ஹோட்டல் முதலாளி ஒருத்தர் ‘இந்த ஹோட்டல் நஷ்டத்துல போகுது. என்னால நடத்த முடியல. அதுனால நீங்களே எடுத்து நடத்திக்கோங்க’னு சொல்லிடுறாரு. ஆரம்பத்துல அந்த ஹோட்டல் பிசினஸ் செட் ஆகல. சின்ன சின்னதா கல்யாண ஆர்டர்ஸ் எடுத்து பண்றாங்க. அப்போ மாதம்பட்டியில ‘சின்ன தம்பி பெரிய தம்பி’ படத்தோட ஷூட்டிங் நடக்குது. அங்க ப்ரொடக்ஷன் சாப்பாடு சரியில்லைனு இவங்களை சமையல் பாத்துக்க சொல்றாங்க. அப்படித்தான் ஆரம்பமானது இவங்களோட ஜர்னி. ஆரம்பத்துல லட்சுமி கேட்டரிங்ன்ற பெயர்ல செயல்பட்டது. அப்பறம் மாதம்பட்டி தங்கவேலு சமையல் பிரமாதமா இருக்குமேனு வேர்ட் ஆஃப் மௌத் கிளம்ப தங்கவேலுவோட பசங்க இந்த பிசினஸ்ல வரும்போது மாதம்பட்டி தங்கவேல் ஹாஸ்பிடாலிட்டிங்குற பெயர்ல நடத்திட்டு இருக்காங்க.
மாதம்பட்டி ரங்கராஜ் கம்ப்யூட்டர் டெக்னாலஜி படித்தவர். ஆனா அப்பாவோட தொழிலை கண்டினியூ பண்ணனும்ங்குறதுக்காகவே கேட்டரிங் படிச்சு தொழிலுக்கு வந்தவர். மாதம்பட்டி ரங்கராஜ் சினிமாக்குள்ள வர்றதுக்கு முன்னாடியே கேட்டரிங் இண்டஸ்ட்ரீல பெரிய பிரபலமா இருந்தார். தினமும் பல ஊர்களுக்கு போய் தங்கி சமையல் பண்ண வேண்டியிருந்ததால ஒவ்வொரு ஊருலயும் ஹோட்டல்ல தங்குறது சிரமமா இருந்திருக்கு. அதனால தனக்குனு ஒரு கேரவன் ரெடி பண்ணினாரு. எல்லா வசதிகளோட இருக்குற அந்த கேரவன் செலிபிரிட்டீஸ் சிலருக்கு வாடகைக்கும் கொடுக்கப்பட்டிருக்கு. அப்படி இவரோட கேரவன்ல தங்கிய செலிபிரிட்டி லிஸ்ட்ல பிரதமர் மோடியும் இருக்காரு.
கார்த்தி கல்யாணத்துல இருந்து விக்ரம் படத்தோட சக்ஸஸ் ஃபங்ஷன் வரைக்கும் சினிமாத் துறையில எந்த பெரிய ஃபங்ஷன்னாலும் மாதம்பட்டி சமையல்தான். கிட்டத்தட்ட 3000 மெனு இருக்கு இவங்ககிட்ட. ஒவ்வொரு ஐட்டமுக்கும் அதுல ஸ்பெஷலிஸ்ட்டா இருக்கிற செஃப் இருக்காங்க. இந்தியா முழுக்க தொடர்ந்து டிராவல் பண்ணி ஒவ்வொரு ஊர் ஐட்டங்களைத் தேடிக் கண்டுபிடித்து கல்யாண விருந்தில சேர்க்கிறதை ஆர்வத்தோட பண்ணிட்டு இருக்காரு ரங்கராஜ். சர்வசாதாரணமா ஒரு பந்தில 50 ஆயிரம் பேருக்கு பரிமாறுவாங்க. சமீபத்துல மாதம்பட்டி விருந்தை ருசிபார்த்த ஃப்ரெண்டு ஒருத்தன், ‘மெகந்தி சர்க்கஸ் ஹீரோதான்டா சமையல்.. அவரே வந்து உங்களுக்கு எந்த டிஷ் பிடிச்சிருக்குனு சொல்லுங்க.. நான் கொண்டு வர்றேன்னு ஒவ்வொரு கெஸ்டுகிட்டயும் போய் கேட்கிறாருனு’ ஆச்சர்யத்தோட சொன்னான். கேட்டப்போ ‘அட’னு இருந்துச்சு.
“பத்து வருசங்களுக்கு வாழ்க்கையை திரும்பி பார்க்குறப்போ நான் என்னெல்லாம் ஆசைப்பட்டேனோ அதெல்லாம் பண்ணிருக்கணும்னு ஆசைப்படுறேன். அப்படித்தான் ஹீரோவானேன்”னு சொல்றாரு மாதம்பட்டி ரங்கராஜ்.