பெரும்பாலும் எல்லா சினிமா இன்டஸ்ட்ரீலயுமே சில படங்களைப் பார்க்கும்போது இதெல்லாம் என்ன ஒன்லைன்னு படமா எடுத்தாங்க?னு தோணும். ஆனால், மலையாள இன்டஸ்ட்ரீல வர்ற படங்களைப் பார்க்கும்போது ‘சே… இந்த ஒன் லைன எப்படியா படமா எடுத்துருக்காங்க’னு ஆச்சரியமா இருக்கும். அப்படி நம்மள ஆச்சரியப்பட வைச்ச சில படங்களோட ஒன்லைனதான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.
சமீபத்துல ‘ன்னா, தான் கேஸ் கொடு’ அப்டினு ஒரு படம் வந்துச்சு. சோஷியல் மீடியா முழுக்க இந்தப் படத்தை பத்திதான் இப்போ பேசிட்டு இருக்காங்க. இந்தப் படத்தோட ஒன்லைன் என்னனா ‘திருந்தி வாழும் திருடனான ஹீரோவோட பெட்டக்ஸ்ல நாய் கடிச்சிரும். அதுக்கு காரணம் மினிஸ்டர்தான்னு கேஸ் கொடுப்பாரு. அந்த கேஸ் எப்படி நடக்குது?’ – அவ்வளவுதான் கதை. இதுக்குள்ள அவங்க அதிகாரத்துக்கு எதிரா சாமானிய மனுஷன் நீதி வாங்க எவ்வளவு போராட வேண்டியது இருக்கு. அமைச்சர் – சாமானியன், கோர்ட் எப்படி டீல் பண்ணுதுனு செமயா சொல்லியிருப்பாங்க. சமீபத்துல வந்த சூப்பரான பொலிட்டிக்கல் சட்டைர் திரைப்படம் இது.
பொலிட்டிகலா மட்டுமில்ல எல்லா ஜானர்லயுமே வர்ற திரைப்படங்களோட ஒன்லைன் பல நேரங்கள்ல நம்மள ரொம்பவே ஆச்சரியப்படுத்தும். இன்னொரு எக்ஸாம்பிளா ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ படத்தை எடுத்துக்கலாம். ‘கல்யாணம் ஆகிப்போற ஒரு பொண்ணை, சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம் எப்படி நடத்துது?’ – இவ்வளவுதான் கதை. அதுக்குள்ள பெண்ணோட சுயமரியாதை, கனவு எல்லாமே அடிபடுறதை அவ்வளவு அழகா சொல்லியிருப்பாங்க. ஃபேமிலி டிராமாக்கு இதை எக்ஸாம்பிளா வைச்சுக்கலாம்.
த்ரில்லர் ஜானர் எடுத்துக்கிட்டாலும் அதோட ஒன்லைனும் ரொம்பவே சிம்பிளாதான் இருக்கும். ஜோசப்-னு ஒரு படம் வந்துச்சு. அதுல கதை என்னனா, “ஹீரோவோட முன்னாள் மனைவி ஒரு ஆக்சிடன்ட்ல இறந்துடுவாங்க. எப்படி அந்த ஆக்சிடன்ட் நடந்துச்சுனு விசாரிக்கும்போது, அதுக்கு பின்னாடி மிகப்பெரிய கிரைம் இருக்குனு தெரிய வரும்” – காம்ப்ளிகேட் பண்ணிக்கவே மாட்டாங்க. அந்த கதைப் போற போக்குலயே காதல், பிரிவு-னு ஏகப்பட்ட விஷயங்களை எதார்த்தமா சொல்லியிருப்பாங்க.
கனகம் காமினி கலகம், தீவண்டி, ஜோ அண்ட் ஜோ, கேஷு இ வீடிண்ட நாதன் – இந்தப் படங்களோட ஒன்லைன்லாம் கேட்டா ஷாக் ஆயிடுவீங்க. இதையெல்லாம் எப்படி யோசிச்சாங்கனு நம்மள யோசிக்க வைச்சிருவாங்க. அதை தெரிஞ்சுக்கணுமா? வெயிட் கரோ!
பொதுவா இந்த ஒன்லைன்லாம் கேட்டா நம்மளே இதைப் படமா எடுத்துருக்கலாமே அப்டினு நமக்கு தோணும். ஆனால், சில டயலாக்ஸ் எழுதுறது, எமோஷன்ஸ ஈஸியா கன்வே பண்றது, லேண்ட்ஸ்கேப்லாம் புடிக்கிறதுல மலையாள இன்டஸ்ட்ரீ டைரக்டர்ஸ் கில்லினே சொல்லலாம். ஞான் பிரகாஷன்னு ஒரு படம் வந்துச்சு. “பணம், வெளிநாடு-னு நிறைய கனவோட வாழ்ற ஒரு ஹீரோ. ஆண் நர்ஸா ஒரு பொண்ணை பார்த்துக்க வீட்டுக்கு வேலைக்கு போவாரு. அங்க அவர் லைஃப் எப்படி மாறுது?” – இதுதான் கதை. ரொம்பவே எமோஷனலான கிளைமாக்ஸ், காதல், ஏமாற்றம்னு செமயா இருக்கும். இந்த ஆண் நர்ஸ் கதாபாத்திரங்களையெல்லாம் மலையாள சினிமாக்கள்லதான் பெரும்பாலும் பார்க்க முடியும். அதேபோல சார்லி சாப்ளின் பத்தின ஒரு டயலாக்கும் இதுல செமயா இருக்கும்.
டிராவல் படங்கள்னாலே எல்லாருக்கும் புடிக்கும். அதுல காதல். பாலிடிக்ஸ், பல தரப்பட்ட மக்களின் வாழ்க்கை எல்லாத்தையும் காமிச்சா? செமயா இருக்கும்ல! அப்படி ஒரு படம்தான், நீலாகாஷம் பச்சக்கடல் சுவண்ணபூமி. “நாகலாந்துல இருக்குற தன்னோட காதலியை வீட்டை எதிர்த்து தேடிப்போற ஹீரோ. கடைசில எப்படி சேர்ந்தாங்க?” – ஒன்லைன் எவ்வளவு ஈஸியா இருக்குல? ஆனால், படம் பேசுற விஷயங்கள் எல்லாம் அவ்வளவு நுட்பமானதா இருக்கும். அப்புறம் மம்முட்டி நடிச்ச முன்னறியிப்பு. கிளாசிக் படம். “கொலை பண்ணிட்டு பல வருஷமா கைதியா இருக்குற ஹீரோவோட வாழ்க்கையை எழுத நினைக்கிற ஜார்னலிஸ்ட். அதை எழுதுனாங்களா? இல்லையா?” – இவ்வளவுதான் கதை. மம்முட்டியோட வேற டைமென்ஷன் நடிப்பை இதுல பார்க்கலாம். கதை, மம்முட்டி நடிப்பு ரெண்டுமே அவ்வளவு இண்டன்ஸா இருக்கும்.
கனகம் காமினி கலகம்-னு லாக்டௌனுக்கு அப்புறம் ஒரு படம் வந்துச்சு. ஹீரோ – ஹீரோயின், ஹனிமூன் போவாங்க. அங்க ஹீரோ கிஃப்ட் பண்ண கம்மல் தொலைஞ்சுரும். அதை யார் எடுத்தானு கண்டுபிடிக்கிறதுதான் கதை. காமெடியான படம். ஆனால், சீரியஸ் டோன்லயே போகும். நாம ஒவ்வொரு ஃப்ரேம்லயும் அப்படி சிரிக்கலாம். லைனா பார்த்தா, இதெல்லாம் கதையானு தோணுச்சு. ஆனால், படம் தரமா இருக்கும். தீவண்டி-னு ஒரு படம் வந்துச்சு. ஹீரோ ஸ்கூல் டேஸ்லயே சிகரெட்டுக்கு அடிக்ட் ஆயிடுவாரு. அதனால, என்னென்ன பிரச்னைகள் எல்லாம் அவர் வாழ்க்கைல வருதுன்றதுதான் கதை. அந்தப் படத்துல சிகரெட்தான் கதை. மம்முட்டியோட இன்னொரு படம், உண்டா. மாவோயிஸ்ட் நிரம்பிய ஒரு பகுதிக்குள்ள தேர்தல் நடத்தப் போறாங்க. ஒரு கட்டத்துல எட்டு தோட்டாக்கள் மட்டும்தான் அவங்க கைல இருக்கு. அதை வைச்சு அந்த தேர்தலை எப்படி நடத்துனாங்கன்றதுதான் கதை. மம்முட்டியோட எதார்த்த நடிப்பு மாஸா இருக்கும்.
சமீபத்துல வந்து எல்லாரையும் சிரிக்க வைச்ச படம், ஜோ அண்ட் ஜோ. வீட்டுல அக்கா, தம்பி-னு ரெண்டு பேர் பேருமே ஜோதான். ஜோன்ற பேருல ஒரு லெட்டர் வருது. அது யாருக்கு வந்ததுனு கண்டுபிடிக்கிறதுதான் கதை. செமல்ல? அப்புறம் கேஷூ இ வீடிண்ட நாதன் படம். ஹீரோவுக்கு லாட்டரி அடிக்கும். ஆனால், அந்த லாட்டரி டிக்கெட் தொலைஞ்சு போய்டும். அதை கண்டுபிடிக்கிறதுதான் கதை. எப்படி? த்ரில்லர் ஜார்னர்ல இன்னொரு கதை சொல்லணும்னா, 12த் மேன். பார்ட்டிக்கு போன இடத்துல ஒரு கொலை நடக்கும். அந்தக் கொலையை டேபிளை சுத்தி உட்கார வைச்சு மோகன்லால் விசாரிப்பாரு. எல்லாரும் ஃபோனை எடுத்து மேல வைச்சு கேம் மாதிரி போகும். செம த்ரில்லிங்கா இருக்கும்.
இதெல்லாம் கேக்கும்போதே தோணுதுல எப்படி இதெல்லாம் யோசிச்சிருப்பாங்க? கான்ஃபிடண்டா படமா எடுக்க களத்துல இறங்கியிருப்பாங்க? அப்டினு. ஆனால், எல்லாமே செம படம். இப்படி அவங்க ஒன்லைன் மேஜிக்கை சொல்லிட்டே போகலாம். நீங்க வியந்து பார்த்த மலையாள படம் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!