ஃபீல்குட் படங்கள்

ஒவ்வொரு படமும் கொல மாஸ்… சேட்டன்ஸின் அடிபொலி கதகளி ஃபீல்குட் படங்கள்!

ஃபீல்குட் படங்கள் | நாய்தான் ஹீரோ, கார் தான் ட்ரிகர் பாயிண்ட், ஐபோன் மேல ஆசை, ஓஜா போர்டு பேய், 96-க்கு கொஞ்சமா டஃப் கொடுக்குற காதல், தண்ணீரில் தவிக்கும் ஊர் இதெல்லாம் வைச்சு முழு படத்தோட கதையை எடுக்க முடியுமானு கேட்டா.. சேட்டா.. ஞான் எடுக்கும்னு மலையாள டைரக்டர்ஸ் பண்ண ரீசண்டான ஃபீல் குட் ஆன சில படங்களை இந்த லிஸ்ட்ல இருக்கு.

படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இல்லை. எதார்த்தமா வெக்கேஷன் போற மாதிரி டிராவல் மோடுல போஸ்டர் பார்த்து படத்தை போட்டா.. ஃபஸ்ட் கொஞ்சம் நேரம் என்னடா இதுனு நினைக்கும்போதுதான் நெய்மர் எண்ட்ரி. அதுக்கப்புறம் படத்தோட ரேஞ்சே வேறமாறி. லவ் பண்ற பொண்ணை இம்ப்ரஸ் பண்றதுக்காக மேத்யூ தாமஸ், நாய் ஒண்ணை வாங்குறாரு. நாய் ஏகப்பட்ட சேட்டைகளை பண்ணுது. அதுமட்டுமில்ல, ஃபுட்பால் பைத்தியமா இருக்குற அந்த ஊர் இளைஞர்கள்.. அந்த நாய்க்கு நெய்மர்னு பெயர் வைச்சதையும் எதிர்க்குறாங்க, ஒரு கட்டத்துல நாய் பயங்கரமா சேட்டை பண்ண, அந்த நாயை மேத்யூ அப்பா ஊர் விட்டு ஊர் கடத்துறாரு. அப்புறம் அந்த நாயை தேடி கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்தாங்களா? இல்லையான்றதுதான் கதை. சிம்பிளான ஒன்லைன். ஆனால், காமெடி பட்டாஸா இருக்கும். கிளைமாக்ஸ்ல அப்பாக்களோட ஸ்டோரி சொல்றது, அடியாள்களை அடிக்கிறது எல்லாமே பல கவலைகளை மறக்க வைக்கும்.

ஃபகத் கரியர்ல நிறைய ஃபீல்குட் படங்கள் இருக்குனு சொல்லலாம். அப்படி முக்கியமானது, பாச்சுவும் அத்புத விளக்கும். படம் டிராவல்லயே இருக்கும். ஆனால், டிராவல் ஸ்டோரி கிடையாது. மும்பைல மெடிக்கல் ஷாப் வைச்சிருக்குற ஃபகத் ஊர்ல அப்பாம்மாவ பார்க்க வரும்போது சந்தர்ப்ப சூழ்நிலையால அங்கயே சில நாள்கள் இருக்க வேண்டியது வருது. அப்போ, அவர் கடையோட ஓனரோட அம்மாவும் ஊர்ல இருக்காங்க. இவர் அவங்களை கூட்டிட்டு வரணும்னு சொல்றாரு. ஐபோன் அம்மாகிட்ட இருக்கு வாங்கிக்கோணும் சொல்றாரு. அந்த டிராவல் என்னாச்சு.. அந்த அம்மா கொடுத்த சேலஞ்ச் என்ன.. ஹீரோயினுக்கு என்ன வேலை.. எல்லாமே அவ்வளவு இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். ஃப்ரெண்டா இருந்தாலும், கேர்ள் ஃப்ரெண்டா இருந்தாலும், யாராக இருந்தாலும் அவங்களுக்கு தேவையான ஸ்பேஸ் கொடுக்கணும்னு சொல்ற சீன், ஐபோன் வாங்குற சீன் (அந்த ஐபோன் வாங்க அவர் பண்ற வேலைலாம் குழந்தைத்தனமா இருக்கும், கடைசில கிடைச்ச பிறகு மிட்டாய் கிடச்ச குழந்தை மாதிரி அவ்வளவு சந்தோஷமா ஃபீல் பண்ணுவாரு, அந்த ஐபோனுக்காகதான் அவங்கம்மாவை கூட்டிட்டு வரவே அக்சப்ட் பண்ணுவாரு), நிதியை காப்பாத்த சண்டை போடுற சீன், ஹம்சத்வனியோட ஸ்டோரி, நிதியோட ஸ்டோரி எல்லாமே எமோஷனலான ஃபீல்குட்டான ஃபீலிங்கை கொடுக்கும். பார்க்கலைனா பார்த்துடுங்க.

கேரளால 2018-ல வந்த வெள்ளம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திச்சு. அதை மையமா வைச்சு எடுத்த படம்தான் 2018. படம் முழுக்கவே நம்மளே ஏதோ பெரிய வெள்ளப்பெருக்குல சிக்கின மாதிரி இருக்கும். அதுல என்னடா ஃபீல்குட்டுனுதான கேக்குறீங்க. அந்தச் சம்பவத்துல பாதிக்கப்பட்ட மக்களை டொவினோ காப்பாத்துறது, சர்டிஃபிகெட் எடுக்க உயிரையே பணயம் வைச்சு போற ஆசிஃப் அலி, எரிஞ்சு விழுற கலையரசன் மனசு மாறும் சீன், அவங்களோட காதல் கதைகள், கண்ணு தெரியாமல் வெள்ளத்துல சிக்கி தவிக்கிற இந்திரனை காப்பாத்துறதுனு எல்லாமே செம ஹார்ட் வார்மிங் சீனா இருக்கும். ஆனால், கடைசில டொவினோ இறந்து போறது மட்டும் தான் படத்துல பார்த்து அதிகமா ஃபீல் பண்ண வைச்ச சீனா இருக்கும். ரொம்ப நல்ல படம். கண்டிப்பா மிஸ் பண்ணாதீங்க.

Also Read – அருண் அண்ணன் சிரிப்பு இனி இல்லைல… லோகேஷை அழவைத்த நடிகர்!

கேரம் போர்டு ஒண்ணை வைச்சு அலற விடுற சம்பவங்களையெல்லாம் சேட்டன்ஸால மட்டுமேதான் பண்ண முடியும். ஓஜா போர்டு வைச்சு நம்ம எல்லாருமே பேச்சுலர்ஸ் ரூம்லயோ.. ஹாஸ்டல்லயோ கண்டிப்பா விளையாடியிருப்போம். அதை வைச்சு முழு நீள படம் எடுத்து சிரிக்க வைச்சு அனுப்புறதுலாம் அவார்ட் குடுடா ட்ரம்ப் மோடுதான். நைட்டு அசோகன் எழும்பி செவுத்தைப் பார்த்து பேசிட்டு சௌபின் சாஹிரைப் பார்த்து லுக் ஒண்ணு விடுவாரு. நினைச்சு நினைச்சு சிரிக்க வைச்ச படம். அடேய், இதுலாம் பேய்ப்படம்டா.. பயப்படணும்னு சொன்னாலும் நமக்கு அப்படி தோணவே தோணாது. கிளைமாக்ஸ்ல கேங்க்லயே எதுக்கும் பயப்படாதவன் பேயோட பெயர் அனாமிகானு சொன்னதும் துண்டக் காணோம், துணியைக் காணோம்னு தெரிச்சு ஓடுற சீன்லாம் அல்டி.

இந்த வீடியோல நான் மிஸ் பண்ண படங்களை கமெண்ட்ல சொல்லுங்க.

2 thoughts on “ஒவ்வொரு படமும் கொல மாஸ்… சேட்டன்ஸின் அடிபொலி கதகளி ஃபீல்குட் படங்கள்!”

  1. You have mentioned very interesting points! ps decent site. “I just wish we knew a little less about his urethra and a little more about his arms sales to Iran.” by Andrew A. Rooney.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top