சிபிஐ அதிகாரி சேதுராம ஐயராக மம்மூட்டி நடிப்பில் சிபிஐ சீரிஸின் ஐந்தாவது பாகத்துக்கான ஷூட்டிங் தொடங்கியிருக்கிறது. நான்காவது பாகம் வெளியாகி 17 ஆண்டுகளுக்குப் பின்னர் தயாராகும் இந்தப் படம் அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு
கொலை வழக்குகளைத் துப்புத்துலக்கும் அதிகாரியாக நாயகன் நடிக்கும் படங்களை எடுத்துக் கொண்டால், மலையாள சினிமாவின் முன்னோடி படமாகக் கருதப்படுவது 1988-ல் வெளியான ஒரு சிபிஐ டைரிக் குறிப்பு’. கே.மாது இயக்கத்தில் கொலை வழக்கொன்றை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிசேதுராம ஐயர்’ கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருப்பார். மிகப்பெரிய வெற்றிபெற்ற இந்தப் படத்தின் திரைக்கதையை எஸ்.எஸ்.சுவாமி எழுதியிருந்தார்.
அதுவரை வெளியான கொலை வழக்குகளைத் துப்புத் துலக்கும் படங்களில் இருந்து தனித்துத் தெரிந்தது ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு. ஓமணா என்ற பெண்ணின் மர்ம மரணத்தைச் சுற்றி நிகழ்ந்த சம்பவங்களின் முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கும் சேதுராம ஐயரின் சாமர்த்தியத்தை கேரளாவே கொண்டாடியது. பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் சேதுராம ஐயராக சிறப்பான நடிப்பை மம்மூட்டி கொடுத்திருந்தார். அவரது கரியரில் முக்கியமான படமாக மாறியது.

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மம்மூட்டி – கே.மாது – எஸ்.என்.சுவாமி கூட்டணி இரண்டாவது முறையாகக் கைகோர்த்தது. இந்தக் கூட்டணியில் 1989-ல் வெளியான ஜகர்த்தா படமும் ஹிட்டடித்தது. அதன்பின்னர், சுமார் 15 ஆண்டுகள் கழித்து சிபிஐ சீரிஸில் மூன்றாவது படம் சேதுராம ஐயர் சிபிஐ’ என்ற பெயரில் 2004-ல் வெளியானது. இந்த சீரிஸின் நான்காவது பாகமான நேரறியான் சிபிஐ 2005-ல் வெளியாகி வெற்றிபெற்றது. இந்தநிலையில், சிபிஐ சீரியஸின் ஐந்தாவது படம்சிபிஐ 5’ கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கழித்து உருவாகிறது.
நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்குவதாக இருந்தது. கொரோனா சூழலால் தள்ளிப்போன நிலையில், தற்போது பூஜையுடன் கொச்சியில் ஷூட்டிங் தொடங்கியிருக்கிறது.