கொஞ்ச நாளைக்கு முன்னால லியோவுல தாமரைப்பூவுக்கும் தண்ணிக்கும் பாட்டு ப்ளே ஆச்சு. இந்தப்பாட்டை போட்ட மியூசிக் டைரக்டர் யார்னு கூகுள்கிட்ட கேட்டா அட நம்ம வித்யாசாகர்னு பதில் சொல்லிச்சு. ஓகே கூகுள்னு சொல்லி வித்யாசாகர் ப்ளேலிஸ்ட்னு டைப் பண்ணப்போ என்ன இத்தனை வைப் சாங்ஸை நம்ம ஆள்தான் போட்டிருக்காரானு ஆச்சர்யப்பட வைச்சது. 90-கள்ல அறிமுகமானவர்.. இளையராஜா-ஏ.ஆர் ரகுமான் கொடிகட்டிப் பறந்துக்கிட்டிருந்தாலும் தனக்குனு ஒரு சாம்ராஜ்யம் அமைச்சு அதுல பயணிச்சுக்கிட்டிருக்கிறவர்.
வித்யாசாகர் தமிழ்நாடு முழுக்க ஃபேமஸ் ஆனது ஜெய்ஹிந்த் படம் மூலமாத்தான். ஜெய்ஹிந்த்ல இவர் கொடுத்தது ஆல்பம் ஹிட். அதுலயும் தாயின் மணிக்கொடி இன்னைக்கு வரைக்கும் சுதந்திர தின விழாக்கள்ல ஒலிச்சுக்கிட்டிருக்கு. அதே படத்துலதான் போதையேறிப் போச்சுனு இன்னொரு வைப் பாட்டையும் கொடுத்து வெரைட்டியில பின்னியிருப்பார். எஸ்.பி.பி ஜானகி காம்போவை இப்படி பாடிக் கேட்டு இருக்க மாட்டாங்கனு சொல்ற அளவுக்கு கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துருச்சுனு பின்னியிருந்தார். அடுத்ததா கர்ணா படத்துல பாடகர் மனோவை ‘ஏ சைப்பா’னு வித்தியாசமான டோன்ல பாட வைச்சு அசத்தியிருப்பார். இந்த படம் வொர்க் பண்றப்போ ஒரு பாட்டை முடிச்சு நேரம் அதிகமாகிடுச்சு. சார், இன்னைக்கே இன்னொரு பாட்டையும் பாடிடலாம்னு வித்யாசாகர் கேட்க, நான் 9 மணிக்கு மேல பாடமாட்டேன்னு சினிமா உலகத்துக்கே தெரியும். பாட முடியாதுனு சொல்றார். சார் நீங்க ட்யூனை மட்டுமாவது கேளுங்கனு வித்யாசாகர் சொல்றார். சரி இவ்ளோ கேட்குறாரேனு எஸ்.பி.பியும் கேட்டார். ஜானகி பாடுன அந்த போர்ஷனை மட்டும் ப்ளே பண்ணினார், வித்யாசாகர். முழுசா கேட்டு முடிச்ச எஸ்.பி.பி, இப்போவே இந்த பாட்டை முடிச்சுடலாம்னு சொல்ல, அப்படித்தான் அந்த பாட்டு ரெக்கார்டிங் ஆகுது. முதல் டேக்கே ஓகே ஆக, இல்ல எனக்கு திருப்தியா வரலை, நான் மறுபடியும் பாடுவேன்னு அடம்பிடிச்சு அந்த பாட்டை ரெண்டாவது தடவையும் பாடினார். முடிச்சுட்டு, எமோஷனலா ஸ்டுடியோவுல விழுந்து வணங்கினார்.
லோகேஷ் ஒருமுறை பேட்டியில வில்லாதி வில்லன் படத்துல வந்த தீம்தலக்கடி தில்லாலே பாட்டை பிடிக்கும்னு சொல்வார். அப்படிப்பட்ட வைப் பாட்டையும் போட்டது வித்யாசாகர்தான். அடுத்ததா கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சானு விஜய்க்கு ஒரு ஆல்பம் ஹிட் கொடுத்தார். கரணுக்கு அந்த ஷ்ரூவ் இசையும் இவரோடதுதான். அதேபோல தமிழ், தெலுங்குனு இருந்த இவரை மலையாள உலகம் வரவேற்க இன்னைக்கு வரைக்கும் அங்க் பீக்ல இருக்கார். அங்க இவர் வாங்காத அவார்டுகளே இல்லை. நிலாவே வே படத்துல நிலவே நிலவே நில்லு நில்லுனு விஜய்யை இவர் பாடை வைச்சது டிஃப்ரண்ட் ஆன கம்போசிங். விஜய்ங்குற கம்ப்ளிட் சிங்கரை வெளில கொண்டுவந்தவரும் இவர்தான். தளபதிக்கு மட்டும் நல்ல பாட்டு கொடுத்துட்டு தலைக்கு போடாம விட்ருவாரா என்ன, அஜித்தோட உயிரோடு உயிராக படத்துக்கு அன்பே அன்பேனும், பூவுக்கெல்லாம் சிறகுகள் முளைத்ததுனு உருகி உருகி மியூசிக் போட்டிருப்பார். நம்ம யோசிக்க முடியாத சிங்கர்ஸ் காம்போவை இணைச்சார், வித்யாசாகர்.
அப்படி சொர்ணலதா-புஷ்பவனம் குப்புசாமி காம்போல வந்த தொட்டுத்தொட்டு பேசும் சுல்தானா பாட்டெல்லாம் வைப்போட உச்சம். அதேபோல 2000-ம் வருஷத்துல இருந்து இது மட்டும் மாறலைனு சொல்ற அளவுக்கு ஒரு பாட்டு போட்டார். இன்னைக்கு வரைக்கும் காலேஜ், ஸ்கூல் கல்ச்சுரல்ஸ்ல ராதை மனதில் பாட்டு ஒலிச்சுக்கிட்டே இருக்கு. சித்ரா-சுஜாதா ரெண்டுபேரும் இந்த பாட்டை பாடியிருப்பாங்க. அடுத்ததா இன்னும் உச்சம்போனது தில் படம். மச்சான் மீச வீச்சருவா பாட்டெல்லாம் பார்ட்டி வைப் பாடலா கொடுத்தார். அடுத்ததா அள்ளித்தந்த வானம் படத்துல வாடி வாடி நாட்டுக்கட்ட, ரன் படத்துல தேரடி வீதியில ஆரம்பிச்சு ஆல்பம் ஹிட். அடுத்த வருஷம் வித்யாசாகர் வருஷம்னே சொல்லலாம்.
2003-ல தூள், அன்பே சிவம், பார்த்திபன் கனவு, தித்திக்குதே, அலை, திருமலை, இயற்கைனு பல படங்களுக்கு தரமான இசையை கொடுத்தார். திருமலையில ஆரம்பிச்ச தளபதி-வித்யாசாகர் காம்போ அடுத்தடுத்து ஆதி, கில்லி, குருவி, மதுர, காவலன்னு பல படங்கள்ல சேர்ந்து வைப் பாட்டுக்களை கொடுத்தாங்க. ஜி, பரமசிவன், சிவப்பதிகாரம், சந்திரமுகி, மொழி, அபியும் நானும், சிறுத்தைனு ரகம் ரகமா பிரிச்சார். வித்யாசாகர் கிட்ட எல்லோரும் மறந்த ஒரு விஷயம் பெஸ்ட் பேக்ரவுண்ட் மியூசிக்.. எல்லா படங்கள்லேயும் பேக்ரவுண்ட், பிஜி எம்ல பின்னியெடுத்திருப்பார். இவ்ளோ இசையை கொடுத்த இசையமைப்பாளரை தமிழ் சினிமா ரசிகர்கள் செலப்ரேட் பண்ணவே இல்லைங்குறதுதான் சோகமான விஷயம். கடந்த சில வருஷமா தமிழ் சினிமாவுல பெரிய படங்கள் இல்லாம இருக்கார், வித்யாசாகர். அது தமிழ் சினிமாவுக்கு நிச்சயமா பேரிழப்புதான்.