லோகேஷ் கனகராஜ்
இன்னைக்கு இளைஞர்களோட ஆஸ்தான இயக்குநர்னு சொன்னா அதுல முக்கியமான இடம் லோகேஷ் கனகராஜ்க்கு உண்டு. மாநகரம்ல ஆரம்பிச்சு 4 படங்களை இயக்கியிருக்கார், லோகேஷ். 2017-ல முதல் படம் 2022-ல நாலாவது படம், அதுவும் கமலை வச்சு.., 5 வருஷத்துல இவ்ளோ பண்ணின லோகேஷ் கனகராஜ், தன்னோட மாநகரம் கதையை பதிவு பண்ணதுல இருந்து முதல்படம் ரிலீசாக 4 வருஷம் ஆச்சு. ஒரு படத்துக்கு 4 வருஷ இடைவெளிங்குறது எவ்ளோ பெரிய மனவலி. அதையெல்லாம் தாங்கிட்டுதான் மாநகரம் பண்ணினார். விக்ரம்ல சூர்யா பேசுற ஒரு டயலாக் வரும். ’27 வருஷம் ஆச்சு, இந்த இடத்துக்கு வர்றதுக்கு.. அப்பனோ பாட்டனோ தூக்கி கொடுத்துறலனு’ அவருக்கு நிச்சயமா பொருந்தும். இன்னைக்கு கோலிவுட்டோட நம்பிக்கை நட்சத்திர இயக்குநரா இருக்கிற லோகேஷ் கனகராஜ் பத்தித்தான் இந்த எபிசோட்ல பார்க்கப்போறோம். அதுக்கு முன்னால சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க.
Also Read – இயக்குநர் பாலா திரும்பி வரணும்… பழைய பன்னீர்செல்வமா திரும்பி வரணும்!
குறும்பட இயக்குநர் அவதாரம்!
லோகேஷ் கனகராஜ் எம்பிஏ முடிச்சுட்டு, பேங்க்ல நாலு வருஷம் வேலையும் பார்த்திருக்கார். பேங்க் வேலை 9-5 மணி நேரம், ஆனா பிடிக்கலை. தப்பான இடத்துல வந்து உட்கார்ந்துட்டமோனு நினைச்சு கவலைப்பட்டுக் கொண்டே இருக்கார். யார்கிட்டயும் அசிஸ்டெண்ட்டாவும் சேர முடியலை. ஏன்னா அதுக்கு காசு வேணும். அதனால, பார்கும் வேலையும் பாதிக்கப்படும்.அப்போதான் குறும்படங்கள்ல இருந்து வந்த கார்த்திக் சுப்பராஜ், நலன் குமாரசாமினு பலர் நியாபகத்துக்கு வர, இவரும் குறும்படம் எடுக்க ஆரம்பிக்கிறார். இண்டர்நெட்ல ஸ்கிரீன்பிளே படிக்கிற வாய்ப்பு கிடைக்குது. அப்போவே தனக்கு தோணுற சீன்கள்லாம் நோட்ஸ் எடுத்து மொபைல்ல ஸ்டோர் பண்ணி வச்சுப்பாராம்.
ஒருகட்டத்துல இவரோட ஆர்வத்தைப் பார்த்த பேங்க் மேனேஜரே இந்தா பணத்தை வச்சுக்கோனு சொல்லி கொஞ்சம் பணத்தைக் கொடுத்து குறும்படம் எடுக்கச் சொல்லியிருக்கார். அந்த அளவுக்கு குறும்படத்துல லோகேஷ் ஆர்வமா இருந்திருக்கார். அந்த நேரத்துலதான் இவருக்கு கல்யாண ஏற்பாடு நடக்குது. 2011-ம் வருஷம் நிச்சயக்கப்பட்டு, 2012-ம் வருஷம் வேற வழியில்லாம் ஐஸ்வர்யாங்குற பெண்ணை திருமணம் செய்கிறார்.
குறும்படத்துக்காக கிடைத்த முதல் விருது!
முதல்முதலா ‘அச்சம் தவிர்’ங்குற ஷார்ட்பிலிம் பண்றார். அது Clubace Short Film Festival-க்கு அனுப்புறார். அந்த விழாவுல சிறந்த இயக்குனர், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகருக்கான விருதை அந்த படம் வாங்குது. அப்போ அந்த போட்டியோட நடுவர் கார்த்திக் சுப்பராஜ். அடுத்ததாக கஸ்டமர் டிலைட்ங்குற குறும்படம் அகில இந்திய கார்ப்பரேட் குறும்பட விழாவுல முதல் பரிசை வாங்குது. இதை ஒரே நாள்ல படமாக்கியிருந்தார், லோகேஷ். அப்பவே மனுஷனுக்கு ப்ரொடக்ஷன் அத்துப்படியா இருந்துருக்கு. அதுக்குப் பின்னாலயும் கொஞ்சம் கார்ப்பரேட் குறும்படங்களை இயக்குறார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜோட பயணத்தைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்க நம்ம `Tamilnadu Now’ யூடியூப் சேனல்ல வெளியாகியிருக்க `நம்பிக்கை நாயகன்’ சீரிஸோட எபிசோடைப் பாருங்க.