2019-ம் வருஷம் நாடாளுமன்றத் தேர்தல் நேரம் அது. மாண்டியா தொகுதியில் சுயேச்சை வேட்பாளாராகக் களமிறங்கினார், நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பரீஷின் மனைவி நடிகை சுமலதா. இந்தத் தொகுதியில், மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணியில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் வேட்பாளராக நிற்கிறார். மகனுக்கு ஆதரவாக குமாரசாமி, தேவகவுடா ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஆப்போசிட்ல சுமலதா அம்பரீஷை ஆதரித்து மே ஐ கம் இன் அப்படினு சொல்லிட்டு வந்தார், கன்னட நடிகர் யாஷ். குமாரசாமியின் மகன் நிகிலுக்கு எதிராவும், நடிகை சுமலதாவுக்கு ஆதரவாவும் வாக்குகள் சேகரிக்கிறார். வாக்குகள் சேகரித்துக் கொண்டிருக்கும்போதே அழையா விருந்தாளியாக வந்தது, கொலை மிரட்டல் ஒன்று, சரி இத்துடன் நின்றுவிடும் என்று நினைத்தார், ஆனால் தொடர்ச்சியான கொலை மிரட்டல்கள். வாக்குகள் சேகரிக்கும்போது மக்கள் மத்தியில் பகிரங்கமாக அறிவிக்கவும் செய்தார். ஆனால், முதல்வர் இதைக் கேளுங்கள் என சொல்லவில்லை. ‘நான் எந்த கட்சிகளுக்கும் சார்பானவன் இல்லை. மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டேன். மறுபடியும் மிரட்டினால் பதிலடி கொடுப்பேன்’ என்று தனது ஸ்டைலிலேயே ஒன் மேன் ஷோ காட்டினார், நடிகர் யஷ்.
‘கே.ஜி.எஃப்’ படத்தின் மூலமாகத் எல்லோராலும் அறியப்பட்டவர் இந்த ராக்கி பாய் எனும் யஷ். கன்னடத் திரையுலகம் எப்பவுமே ஒரு குறுகிய வட்டத்துக்குள் பயணப்பட்டு வந்தது. அந்த சிறிய வட்டத்தை உடைத்து, கன்னட சினிமாவை உலகம் முழுவதும் தெரிய வைத்த பெருமை கேஜிஎப் படத்தையே சேரும். அப்படத்தின் முதல் பாகத்தில் ஒரு டயலாக் வரும். “அவங்களுக்குத் தெரியாது, ஏற்கெனவே ஒருத்தன் தன்னோட காலடித் தடத்தை பதிச்சுட்டான்னு” அது படத்துக்காக யஷ்க்கு கொடுத்த லீட். ஆனால் நிஜமான வாழ்க்கையிலும் ஒரு லீட் அப்படி கொடுக்கலாம். அதுக்குச் சரியான நபரும் கூட. யஷ் கடந்து வந்த பாதை முழுக்க முழுக்க அவரே அமைத்துக் கொண்டது. இன்றைக்கு இந்திய சினிமாவின் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கும் யஷ்க்கு சினிமாவுக்கு வந்த புதிதில் தங்குவதற்கு சிறிய இடமில்லாமல் தவித்தவர்.
யஷ்ஷோட உண்மையான பெயர் தெரியுமா… அவர் எப்படி நடிக்க வந்தார்… அவரோட சினிமா ஆர்வம் எங்க தொடங்குச்சு… கரியர்ல பண்ண தரமான சம்பவங்கள்… இதெல்லாம் தெரிஞ்சுக்க `Tamilnadu Now’ யூடியூப் சேனல்ல வெளியாகியிருக்க `நம்பிக்கை நாயகன்’ சீரிஸோட இந்த எபிசோடப் பாருங்க…