சோஷியல் மீடியால கடந்த சில நாள்களா டிரெண்டிங்ல இருக்குற டாப்பிக் ‘காதலா? காமமா?’. சிலர் ஷாஜகான் விஜய் மாதிரி, “உண்மைக் காதல்னா சொல்லு உயிரைக் கொடுக்குறேன்”னு காதல்தான் முக்கியம்னு போஸ்ட் போட, “ஏன்டா, உலகத்துல காமத்தை விட சிறந்த போதை வேற எதாவது இருக்காடா?”னு அதுக்கு வேற சிலர் வந்து கமெண்ட் போட, “காதல் இல்லா காமமும், காமம் இல்லா காதலும் வேஸ்ட்”னு கமல் ஃபேன்ஸ் வந்து ரிப்ளை பண்ண ஃபேஸ்புக் பக்கம் போனாலே ஒரே குதூகலமா இருந்துச்சு.
‘நெஞ்சமெல்லாம் காதல், தேகமெல்லாம் காமம், உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா’ பாட்டு பேக் ரௌண்ட்ல ஓடுது. முன்னாடி நம்ம அண்ணன் சீமான், “இப்போ யார் பக்கம் நிக்கிறதுனே எங்களுக்கு தெரியாத பிள்ளைகளா நாங்க இருக்கோம். இவர் பக்கம் நிக்கிறதா? இவர் பக்கம் நிக்கிறதா? என்னைப் போன்ற பிள்ளைகளுக்குதான் ரொம்ப தடுமாற்றம்”னு பேசுற வீடியோ போட்ருந்தாங்க. அதைப் பார்த்துட்டு அண்ணன எதுக்குலாம்தான்டா கன்டன்டா யூஸ் பண்ணுவீங்கனு கொஞ்சம் ஆத்திரம் வந்தாலும், அந்த இடத்துல அண்ணன் சொன்னதுதான் பலரோட மனநிலை. காதலா? காமமா? டாப்பிக் வழக்கம் போல ஒரு ஃபேஸ்புக் பிரபலம் சும்மா போர போக்குல போஸ்ட் போட, கன்டன்ட் இல்லாமல் சிக்கி தவிச்சவங்க இதையே கன்டன்டா எடுத்து ரைட்டப் போட ஆரம்பிச்சாங்க. ஆக்சுவலா டாப்பிக்கைவிட அதுக்கு இவங்க எழுதுன ரைட்டப்கள் எல்லாம்தான் ஜாலியா இருந்துச்சு. சிலர்லாம் காஜி மேக்ஸ் போஸ்ட்தான்.
நம்ம மைண்ட் எதுக்கெடுத்தாலும் சினிமாக்குதான போகும். சரி, சினிமால நமக்கு அதிகமா காமத்தை சொல்லிருக்காங்களா? காதலை சொல்லிருக்காங்களா? நல்லா யோசிச்சுப் பார்த்தா, உருப்படியான காதல் படம்னு ஒண்ணுகூட நமக்கு நியாபகம் வராது. நமக்கு நியாபகம் வர்ற எல்லா காதல் படங்களுமே, வயசுக் கோளாறுல வர்றது. இல்லைனா, ஸ்டாக் பண்ணிட்டு திரியுறது, அந்தப் பொண்ணு காதலை அக்டப்ட் பண்ணலைனா திட்டுறது. இப்படித்தான் படங்கள் வந்துருக்கு. இப்பவும் வந்துட்டு இருக்கு. சரி, பாடல்களை எடுத்துப் பார்த்தா எல்லாமே ‘இதையாடா சத்தம் போட்டு பாடிட்டு இருந்தோம்?”னு நினைக்க வைக்கிற பாடல்கள்தான். கண்ணாலே மிய்யா மிய்யா பாட்டு, செம காதல் பாட்டுல? அதுல வர்ற லிரிக்ஸ்லாம் கேட்டா ஷாக் ஆயிடுவோம். “தீயை தின்னும் நேரம் தேகம் எங்கும் ஈரம், மோகம் கொண்ட முத்தம் காயாதல்லோ, காமன் கட்டில் ஆடும் மூச்சின் வெப்பம் கூடும், ஆடை பற்றிக் கொள்ள கூடுமல்லோ”னு எழுதியிருக்காங்க.
மழை படத்துல காதல் உச்சத்துக்குப் போகும்போது மண்ணிலே மண்ணிலே பாட்டு வரும். அந்தக் காதல்ல அவ்வளவு அழகு இருக்கும்னு சில்லறைய சிதற விட்ருப்போம். தலைவர் சூச்சமத்தை வைச்சிருப்பாரு. “நான் காதலை சொல்ல என் வாய் மொழி துணை இல்லையே”னு காதலை சொல்லிட்டு அடுத்த வரி, “முன் கோபுர அழகை உன் தாவணி மூடியதே உன் ரகசியத்தை மழை துளி அம்பலம் ஆக்கியதே”னு எழுதிருப்பாரு. சுத்தி சுத்தி வந்திகனு எத்தனை தீபாவளிக்கு சின்ன வயசுல ஆடிருப்போம்? அதுவும் காதல் டூயட்தானனு நீங்க கேக்கலாம். ஆனால், பாட்டை எழுதுனது யாரு? “கண்ணால் எதையோ பார்த்தீக. காயா பழமா கேட்டீக, என்னோட ஆவி இத்துப்போக”, “காதல் தேர்தலில் கட்டில் சின்னத்தில் வெற்றி பெற்று நீ வாழ்க”னுலாம் வரில காமத்தை தூவியிருப்பாங்க. இந்த லிஸ்ட்ல மூணு பாட்டுதான் எக்ஸாம்பிள்க்கு சொல்லிருக்கேன். சில காதல் பாட்டுலலாம் காமத்தை மட்டும் தான் முன்னிலையா வைச்சு எழுதியிருப்பாங்க. சினிமா காதலுன்ற பேர்ல நிறைய காமத்தைதான் சொல்லிருக்கு. இதனால, காமம் தப்புனு நான் சொல்ல வரல. நான் சொல்றதுக்கு பதிலா சயின்ஸ் என்ன சொல்லுதுனு பார்ப்போமா?
ஃபேஸ்புக்ல இந்த டாப்பிக் டிரெண்ட் ஆக ஆரம்பிச்சதும், ஒருத்தர் கண்ணுல மட்டும் படவேக்கூடாதுனு நினைச்சேன். அது யாரு? உங்களால முடியும் கண்டுபிடிங்க! கடைசில க்ளூ தரேன்.
காதலைப் பற்றி ஆராய்ச்சி செய்ற ஹெலன் ஃபிஷருன்றவரு காதலை மூன்று படிநிலைகளா பிரிக்கிறாரு. அதுல முதல்ல காமம்தான் இருக்கு. எதிர்பாலினங்களை சேர்ந்தவங்களை பார்க்கும்போது நமக்குள்ள சில ஹார்மோன்கள் தூண்டப்படும். அப்போ, காம உணர்வுகள் ஏற்படும். இந்த உணர்வு நாள்டைவில காதலாவும் மாறும்னு சொல்றாரு. நீங்க தொடர்ந்து ஒருத்தங்ககிட்ட பழகும்போதுதான் அவங்க மேல உங்களுக்கு காதல் இருக்கா? இல்லை காமம் இருக்கா?-னு தெரியுமாம். சந்ததி வழியாவும் இந்த உணர்வு தொடர வாய்ப்பு இருக்குனு சொல்றாரு. ரெண்டாவது ஈர்ப்பு. ஒருத்தர பார்க்கும்போது மூளைல டொபமைன் சுரக்குறதால இந்த உணர்வு ஏற்படுதாம். இந்த உணர்வு நல்லதுனும் சொல்லிருக்காரு. சிலர் இந்த ஈர்ப்பால காதல் படம் பரத் மாதிரி புலம்பிட்டு இருப்பாங்க. காதல் மாதிரி புனிதமான ஒண்ணு இல்லைனுலாம் சொல்லுவாங்க. இல்லைனா, புதிய உறவுகளை தேடிட்டே இருப்பாங்களாம். அதாங்க, பிளேபாய். மூணாவது, பிணைப்பு. தோலும் தோலும் உரசிக்கொள்ளும்போது ஒருவித ஹார்மோன்கள் உருவாகும். இதனால, உங்க காதலர்கள் மேல ஆழமான பிணைப்பும் உங்க உறவு மேல மனநிறைவும் ஏற்படும். இந்த மூணுல நீங்க எதுனு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.
Also Read – சென்னை டு கன்னியாகுமரி… பஸ் டிராவல் அலப்பறைகள்!
விஞ்ஞானிகள் வாய்லயே விரல் வைக்கிற அளவுக்கு நம்ம நெட்டிசன்கள் சில விளக்கம் கொடுத்துருந்தாங்க. அதுலாம் சான்ஸே இல்லை. ஒருத்தர், “காதலும் காமமும் கிரீம் கேக் மாதிரி. கிரீம் இல்லாமல் கேக் சாப்டாலும், கேக் இல்லாமல் கிரீம் சாப்டாலும் வெறுத்துப் போய்டும், காதல் என்பது ராகுல் காந்தி போல. எப்போ வரும், என்ன செய்யும், எதுவும் தெரியாது. காமம் என்பது கோவையில் சென்ற கார் போல, எப்போ வெடிக்கும்னே தெரியாது, காதலா? காமமா? எதா இருந்தாலும் நம்மாளுங்கதான?, காலைல வந்தேன். இதை தான் உருட்டிட்டு இருந்தீங்க. இன்னுமாடா உருட்டுறீங்க?, ஆசிரியரோட சூரிய கிரகண போராட்டத்தை இருட்டடிப்பு செய்யதான், இந்த டாப்பிக்கை கிளறி விட்ருக்காங்க”னு போஸ்ட் போட்டு ஃபன் பண்ணிட்டு இருந்தாங்க. சிலர் கவித்துவமாலாம் எழுதிட்டு இருந்தாங்க. இறுதியா நம்ம என்ன சொல்றோம்னா, காதல், காமம் ரெண்டுமே அவங்கவங்க மனநிலையை, உடல் நிலையை பொறுத்தது. காதலோ, காமமோ… எதையும் புனிதமா பார்க்காமல். அதுல இருக்குற பேரன்ப பாருங்க.
ஒருத்தர் கண்ணுல இந்த டிரெண்டிங் டாப்பிக் படக்கூடாதுனு நினைச்சேன்ல. அது யாருனு நான் சொல்ல மாட்டேன். ஒரு சின்ன க்ளூ வேணும்னா தரேன். அவரு ஒரு கவிஞர். ஆனால், அவர் கண்ணுல பட்டு கவிதை எழுதிட்டாரு. அவர் யார்னு கண்டுபிடிச்சா கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே, காதல், காமம் பத்தி என்ன நினைக்கிறீங்கனும் சொல்லுங்க.