சீமான், நீங்க முதல்வராகதான் கட்சி ஆரம்பிச்சிங்களாமே, பின்ன என்ன முச்சந்தில நின்னு கத்திட்டு சாகவா கட்சி ஆரம்பிச்சேன்னு வெறும் வாயாலயே ஆட்சியை புடிச்சு, வாயாலயே தமிழ்நாட்டுல ஆண்டுட்டு இருக்குற தலைவர் சீமான்தான். ஸ்கூல் டேஸ்ல நான் முதலமைச்சரானால்னு கட்டுரை போட்டிக்கு எழுதுவோம். அதை நம்ம சீமான் அண்ணன் இன்னும் எழுதிட்டு இருக்காரு. அவரு முதலமைச்சரானால், என்னலாம் நடக்கும்?
தமிழ்நாட்டுல கடந்த எலக்ஷனுக்கு முந்தின எலக்ஷன் நேரத்துல சீமான் பேசுனதை இங்க குறிப்பிட்டே ஆகணும். நாங்கள் தேர்தல் களத்துல நிக்கல. கடந்த சில பல வருஷங்களா படிச்சுட்டு இருந்தோம். இப்போ தேர்வுக்கு வந்துருக்கோம். நாங்க ஒண்ணும் உங்ககிட்ட ஓட்டு கேட்டு வரலை. தமிழர்களின் எதிர்கால வாழ்க்கையை கேட்டு இங்கேயே வந்துருக்கோம். நாங்க குறை கேட்க உங்ககிட்ட வரலை. குறைகளை தீர்க்கதான் வந்துருக்கோம். ஜெயலலிதா கால்ல விழுந்தா பரவால்ல, கார் டயர்ல விழுறாங்ஜ. ஹெலிகாப்டர் நிழல்ல விழுறாங்க. தாய் போல தமிழ்நாட்டை ஆட்சி செய்தேன்னு சொல்லியிருக்காங்க. எந்த தாய் தன் மகனை குடிக்க சொல்லியிருக்காங்க? டாஸ்மாக்கை படிப்படியாக மூடுவேன் என்கிறார் கலைஞர். அவரோட மதுபான ஆலைகளை முதல்ல மூட சொல்லுங்க! – இப்படிலாம் சொல்லிட்டு நம்ம அண்ணன் கள்ளு கடை வைப்பேன். தென்னங்கள், பனங்கள்னு நீரா பானம் வழங்கப்படும்னு சொல்லியிருக்காரு. அது மட்டும் என்ன மருந்தானுலாம் அண்ணன்ட்ட கேட்க கூடாது. எதிர்த்து பேசுனா எதிரிகளுக்கு எதிர்காலமே இல்லாமல் பண்ணுவேன்னு அண்ணன் சொல்லியிருக்காரு.
தி.மு.க, அ.தி.மு.கனு எந்த திராவிட கட்சிகளும் சீமானுக்கு ஆகாது. அதுனால, அவர் ஆட்சிக்கு வந்தாச்சுனா, திராவிட கட்சிகள் வாங்கிய கடனை அடைக்க மாட்டேன்னு ஸ்ட்ரிக்ட்டா அண்ணன் சொல்லிட்டாப்புல. திராவிட கட்சிகள் பண்ண தப்பை ஒருபோதும் நான் பண்ண மாட்டேன்னு அண்ணன் திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்காரு. அதுனால, ஆட்சிக்கு வந்தப்புறம் இலவசமா அரிசு, பருப்பு ஆடு, மாடு, டி.வி, கோழி எல்லாம் கொடுக்க மாட்டேன். ஆனால், கல்வி இலவசம், மருத்துவம் இலவசம்னு சொல்லியிருக்காரு. சரி, நம்ம அண்ணன் கடைசி வரை கொண்ட கொள்கைல விடாபிடியா இருப்பாருனு பார்த்தா, மற்ற கட்சிகளை மாதிரி, தனக்கு பிரச்னைனு வந்ததும் காங்கிரஸ் கூட்டணில இருந்து விலகிட்டாரங்கனா, நான் தி.மு.க-வுக்கு ஆதரவு அளிப்பேன்னு இப்போ சொல்லியிருக்காரு. ரைட்டு அவரும் அரசியல்வாதிதான.
விவசாயம் பத்தி படம் எடுத்தா நல்லா ஓடும்ன்ற டிரெண்டு இப்போ கொஞ்சம் நாளா மாறிடுச்சு. ஆனாலும், அதைப் பத்தி பேசுனா ஓட்டு வாங்கிடலாம்னு மேடைக்கு மேடை மைக் போட்டு அண்ணன் கத்திட்டு தான் இருக்காரு. விவசாயம் அரசு வேலையாக மாற்றப்படும், ஆடு மேய்க்கிறது, மாடு மேய்க்கிறதுலாம் கூட அரசு வேலையாக மாற்றப்படும்னு சொல்லியிருக்காரு. பிரச்னை என்னன்னா, பொருளாதார ரீதியில் என்னென்ன மாற்றம் இதன் மூலமா வரும்ன்றதுதான். வந்துச்சுனா சூப்பருப்புனு சொல்லலாம். ஆனால், இருக்குற சூழல் கொஞ்சம் பிசகிச்சு ஆப்பப்புதான். பட்டுப்பூச்சி வளர்த்தல், தேனீ வளர்த்தல்கூட அரசு வேலையாக மாறும்.
Also Read – மனச்சான்று, கீச்சுக்கருத்து, முப்பாட்டன் – சீமான் தமிழுக்கு பண்ண சேவைகள்!
கணேஷ், ரமேஷ், விக்னேஷ், சுரேஷ்னு பாம்பு மூச்சு விட்ட மாதிரி எவனாவது பேர் வைச்சிருந்தா.. 10 ரூபாய் கட்டி தமிழ் பெயரை வைச்சுட்டுவானு சீமான் அனுப்பிடுவாரு. இந்த நிலம் அவர்கிட்ட சிக்கிச்சு, கணேஷ், ரமேஷ், தினேஷ்லாம் செத்தான். ஸ்கெட்ச்சு பா.ஜ.க, திராவிட கட்சிகளுக்குலாம் இல்லை. இவர் ஜெயிச்சா நமக்குதான். நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் மரக்கிளையை வெட்டினால், மனிதர்கள் கையை வெட்டியது பொல.. குற்றமாக கருதி, ஆறு மாத சிறை தண்டனை விதிப்பாங்களாம். வீடு ஒண்ணு கட்டணும்னு வைங்க ஒரு மரம் வளர்க்கணும். அது உங்களோட தோட்டத்துல வளர்ந்த மரமாக இருந்தால்கூட கலெக்டரிடம் அனுமதி பெற்று தான் வெட்ட முடியும். ஒரு மரம் நீங்க வெட்டணும்னா, 100 மரம் நட்டு பாதுகாக்கணும்னு சொல்லியிருக்காங்க. எப்படி? ஆட்சிக்கு வந்த உடனே, ஒரே இரவில் எல்லா சுங்கச்சாவடிகளையும் இடிச்சு தள்ளிடுவேன். சாலை வரி வசூலிச்சாங்கனா, சுங்கச்சாவடி எதுக்கு? அப்டின்றாரு. அண்ணன் இப்போதான் பாயிண்டுக்கு வராரு.
நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் எல்லா வீட்டுக்கும் கார் தருவோம்ன்றுக்காரு. என்ன கார்னா.. அம்பேத்காராம். ஜோக்கு ஜோக்கு.. இல்லை! மீனவர்கள் பிரச்னை மிகப்பெரிய பிரச்னையா இருக்கு. அதை தீர்க்க நெய்தல் படை அமைச்சு கைல வெடிகுண்டு கொடுத்து அனுப்பாவாராம். வடமாநில தொழிலாளர்களின் பிரச்னை கடந்த சில பல மாதங்களா அதிகமா இருக்கு. அண்ணன் ஆட்சிக்கு வந்தா வந்த டிரெயின்லயே திரும்பி போக வைப்பாராம். அதிக நபர்கள் இன்னைக்கு ஐ.டில வேலை பார்க்குறாங்க. அரசே ஐடி வேலையை உருவாக்கும். பால் எத்தனை லிட்டர் வருதுனு கணக்கு பண்ணனுமாம். எப்படி ஐடியாக்கள் எல்லாமே நல்லாதான் இருக்கு. ஆனால், ஒரு பிரச்னை.. அண்ணன் ஆட்சிக்கு வரணுமே! நிலம் கையில சிக்கணுமே. இப்போதான் அவரோட வாக்களர்கள் எல்லாம் 8-வது படிக்கிறாங்க.