கொஞ்ச நாளைக்கு முன்னால ஆதி-அறிவழகன் இணையும் சப்தம் படத்துக்கான அறிவிப்பு வெளியானது. அது முதலே இணையத்தில் ‘ஈரம்’ டீம் ஆன் பேக் என போஸ்ட்கள் பறக்க ஆரம்பித்தன. சுமார் 13 வருஷங்களுக்கு முன்னால எடுத்தப்படம் இப்போ பெருமையா ‘ரீயூனிட்டட்’னு சொல்ற அளவுக்கு அதுல என்ன சுவாரஸ்யம் இருக்குனு தோணலாம். ஆனா, அன்னைக்கு கம்மி பட்ஜெட்ல வெளியான நல்ல த்ரில்லர் படங்களுக்கு ஈரம் படம் ஒரு முன் மாதிரியாக இருந்தது. சின்ன பட்ஜெட்டுக்காக மேக்கிங்ல சமரசம் இல்லாம உருவான ஹாரர் படம். அது ஏன் வெற்றியடைஞ்சதுங்குற 4 காரணங்களைத்தான் இந்த வீடியோவுல பார்க்கப் போறோம்.
ஈரம் – பழைய கதையில் புதிய பார்முலா!
மனதில் ஈரம் இல்லாதவறதங்களை அந்த ‘ஈரம்’ பழி வாங்குறதுதான் கதை. தமிழில் ஒரு புதுமுயற்சி… மிரட்டலான படம்னு சொல்ற அளவுக்கு எல்லாம் இருக்குமான்னு பார்த்தா நிச்சயமா இருக்காது. ப்ளாக் வாட்டர் மாதிரியாக ஹாலிவுட்ல அதுக்கு முன்னால பார்த்த படங்கள் நிறையவே இருக்கு. ஆனா, எடுத்துக்கிட்ட கதையில அதை நம்புற மாதிரியான பிண்ணனி வச்சு, மேக்கிங்ல மிரட்டின விதம்தான் அந்த படத்தை தனிச்சு காட்டிச்சுன்னே சொல்லலாம். பொதுவா பேய்ப்படம்னா ஏதாவது அகோரமான உருவம் இருக்கும். ஆனா, இந்த படத்துல தண்ணீர் மூலமாவே பேயைக் காட்டி த்ரில் கூட்டப்பட்டிருந்த விதமும், திரைக்கதையில இருந்த அழுத்தமும் படத்தை தூக்கி நிறுத்தினது. அதிலும் அடுத்த கொலை நடக்க இருப்பதை குறிப்பால் உணர்த்தச சிவப்பு நிறத்துடன் தண்ணீர் கலந்த காம்பினேசன் ஐடியா மிகப்பெரிய ப்ளஸ்.
டெக்னீசியன்கள்!
மனோஜ் பரமஹம்சாவோட ஒளிப்பதிவுல விரியும் காட்சிகள்தான் படத்த்தோட முதல் ஹீரோ. படம் முழுவதும் இருக்கிற தண்ணீர்தான் இரண்டாவது ஹீரோ. தமிழ் சினிமாவில் இரண்டாவது படம் என்றாலும் தமனின் பின்னணி இசை படத்துக்கு எக்ஸ்ட்ரா டெரர் ஏற்றுகிறது. அதிலும் மின்சாரம் பாய்ந்து கொல்லும் இடத்திலும், தியேட்டர் பாத்ரூம் காட்சியில் நடக்கும் கொலையிலும் பின்னணி இசையில் அதிரவைக்கிற இசையைக் கொடுத்திருப்பார், தமன். இதுபோக படம் முழுவதும் ப்ளூடோன் மெயிண்டைன் பண்ணப்பட்டிருக்கும். அது ஈரமான சூழலை காட்டுற மாதிரி அமைக்கப்பட்டிருக்கும். சொல்லப்போனா படத்தோட பெயருக்கும், கதைக்கும் ரொம்பவே ஆப்ட்டா பொருந்திப்போனதுனுகூட சொல்லலாம். படத்தோட இயக்குநர் அறிவழகனோட கனக்கச்சிதமான திரைக்கதை முக்கியமான பலம். இது எங்க நல்லா தெரியும்னா, முதல் பாதியில காலேஜ் ப்ளாஸஷ்பேக், நடப்பு காலம்னு ரெண்டுமே அடிக்கடி காட்டப்படும். அந்த காட்சிகள் கொஞ்சம் சொதப்பினாலும், கதை புரியாம போயிடும். அதை ஸ்ட்ராங்கா பண்ணதுலதான் அறிவழகனோட சாமர்த்தியமே இருந்தது.
ஆதி-சிந்துமேனன் நடிப்பு!
காதல் மயக்கம், போலீஸ் புன்னகையுமாக ஆதி அட்டகாசப்படுத்தியிருந்தார், ஆதி. காலேஜ் பாய், விறைப்பான போலீஸ் அதிகாரினு கேரெக்டருக்கு ஏற்ற வித்தியாசமான உடல்மொழியால் நடிப்பைக் கூட்டியிருந்தார். சிந்துமேனன் ஆவி அவர் தங்கைக்குள் வந்தததை உணரும் இடம் ஆதி தன்னோட ரியாக்ஷன் மூலம் தன் உட்சபட்ச நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். நான் மட்டும் என்ன கொறைச்சலாங்குற ரேஞ்சுல நடிகை சிந்துமேனன் பின்னி பெடலெடுத்திருந்தார். 2001-ல சமுத்திரம் படத்துல பார்த்ததைவிட 2009-ம் ஆண்டு வெளியான ஈரம் படத்துல வந்த சிந்துமேனன் ஸ்கிரீன்ல ப்ரெஷ்ஷா இருந்தார்.
Also Read – ‘பேய் படத்துக்கு இன்னொரு டிரெண்ட் செட்டர்..’ – `டிமான்ட்டி காலனி!
அதேமாதிரி சின்ன சின்ன இடங்கள்ல இவங்க கொடுத்த நடிப்பு இத்தனை நாள் ஏங்க படம் நடிக்காம இருந்தீங்கனு கேட்க வைச்சது. அதுலயும் காலேஜ் ஸ்டூடண்ட், மணமான பொண்ணுனு ரெண்டு வெரைட்டியிலயும் வித்தியாசம் காட்டி ரசிகர்கள் ரசிக்கும்படியான கவிதை மாதிரி நடிப்பை வெளிக்காட்டியிருந்தார். அதிலும் கணவன் விஷம் கொடுத்தது தெரிஞ்சதும், கொஞ்சம் கொஞ்சமாக இறந்துபோற இடத்துல ஏக்கம், விரக்தினு எல்லாத்தையும் கண்லயே காட்டியிருப்பார், இதுதான் சிந்துமேனனோட பலம்னு கூட சொல்லலாம்.
உடைக்கப்பட்ட பர்னிச்சர்கள்!
டிமாண்டி காலனி படத்துலகூட ஒரு மாஸ் டான்ஸ் பாடல் இருக்கும். ஆனா, ஹீரோவுக்கான எந்த என்ட்ரி பாட்டும் இதுல இருக்காது. அதேபோல முகம் சுளிக்கும் காட்சிகள் இல்லை, ஆ ஊன்னு கத்துற சத்தம், கோரமான முகம், சண்டை இல்லை என பல சமரசங்கள் இந்தப்படத்துல பண்ணினார், இயக்குநர் அற்வழகன். இயக்குனர் ஷங்கரின் தரமான தயாரிப்புகள்ல ஒண்ணு இந்த ஈரம்னுகூட சொல்லலாம். என்னடா இந்தப்படத்தைப் பத்தி இவ்ளோ சொல்றியேனு நீங்க நினைக்கலாம். சுருக்கமா சொல்லணும்னா, மிகச்சிறந்த த்ரில்லர் படம்னு சொல்ல முடியாம போனாலும், ஏமாற்றமளிக்காத த்ரில்லர் படம்னு சொல்லலாம்.
ஈரம் படத்தைப் பத்தின உங்க கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க.