எல்லா கட்சி விளம்பரங்கள்லயும் ஒரே பாட்டியை நடிக்க வைச்சது, முட்டியளவுகூட இல்லாத தண்ணில போட் எடுத்துட்டுப் போய் ஃபோட்டோ ஷூட் நடத்துனது, ஓசி டிக்கெட் வேணாம்னு பாட்டியை செட் பண்ணி பேச வைச்சது, ஆளே இல்லாத இடத்துல கைகாட்டுனது, கரும்புக் காட்டுல கருப்பா ரோடு போட்டதுனு அரசியல் கட்சிகளோட ஐ.டி விங் பண்ண சொதப்பல்கள் எக்கச்சக்கமா இருக்கு. எல்லாத்தையும் பண்ணிட்டு மண்டை மேல இருக்குற கொண்டைய மறந்துட்டீங்களேனு நம்மள யோசிக்க வைச்ச அந்த சம்பவங்கள்தான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.
ஓசி டிக்கெட் வேணாம்
அரசு பேருந்துகள்ல பெண்கள் இலவசமா பயணம் செய்யலாம்னு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு திட்டத்தை கொண்டு வந்தாரு. லோயர் மிடில் கிளாஸ்ல அன்றாடம் சம்பளம் வாங்குற பெண்கள், வறுமைலயும் பல மைல் தூரத்துல இருக்குற பள்ளி, கல்லூரிகளுக்கு போற மாணவவிகள் உட்பட பலபேருக்கு இந்த திட்டம் பயனுள்ளதா இருந்துச்சுனு நிறைய ரைட்டப்களை நம்மளால பார்க்க முடிஞ்சுது. நம்ம மீம்ஸ் கிரியேட்டர்ஸ் அதை கொஞ்சம் ஜாலியா கலாய்க்கவும் செய்தாங்க. ஆனால், இந்தத் திட்டம் மக்கள் மத்தில செம ரீச். இதை டேமேஜ் பண்றதுக்கு அதிமுக ஐடி விங் சூப்பர் ஐடியாவை பிளான் பண்ணி சொதப்புன மொமண்ட் இருக்கே, என்னத்த சொல்ல. நம்ம கோவை அதிமுக கேங்க் பண்ண வேலைதான். என்னத்தையாவது பண்ணி உறவுகள்ட அடி வாங்குறதே வேலையா போச்சு. சரி, சம்பவம் என்னனா…
கோவைல மதுரக்கரைல இருந்து பாலத்துறை போகுற பஸ்ல மூதாட்டி ஒருத்தங்க ஏறியிருக்காங்க. அந்த பஸ்ல பெண்களுக்கு டிக்கெட் கிடையாதுனு தெரிஞ்சும் கன்டெக்டர்கிட்ட டிக்கெட் எடுக்க காசை அந்தப் பாட்டி கொடுத்துருக்காங்க. கன்டெக்டர் டிக்கெட்க்கு காசு வாங்க மறுத்ததும் கோவப்பட்டு அங்கயே கத்த ஆரம்பிச்சிருக்காங்க. “நான் பஸ்ல ஓசில வரமாட்டேன்”னு சொல்றதுவும் பஸ்ல கன்டெக்டர்கூட சண்டை போடுறதும் வீடியோவா சோஷியல் மீடியால சுத்த ஆரம்பிச்சுது. இந்த வீடியோல பேசுற பாட்டு அதிமுகவை சேர்ந்தவங்கனும் அந்தக் கட்சில உள்ளவங்கதான் அவங்களை இப்படி பேச சொல்லி வீடியோ எடுத்து கிளப்பி விட்ருக்காங்கனும் செய்திகள் வெளியாச்சு. இதுக்கப்புறம் குற்றம் சாட்டப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாச்சு. ஆனால், அந்தப் பாட்டி மீது வழக்கு எதுவும் பதிவு செய்யலைனும் காவல்துறையினர் விளக்கம் கொடுத்துருக்காங்க. இதுக்குப் பேருதான் வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்குறது.
கரும்புக்காட்டில் தார் சாலை
மு.க.ஸ்டாலின் நடத்திய நமக்கு நாமே சம்பவத்தை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. ஏன்னா, மனுஷன் அதுல அவ்வளவு சம்பவங்கள் பண்ணாரு. சாலைல நடந்து போய், பஸ்ல போய், டீக்கடை உட்கார்ந்துனு பல வழிகள்ல மக்கள்கிட்ட பேசுனாரு. அப்போ, கரூர்ல கரும்பு விவசாயிகள் வாழுற பகுதிகள்ல அவங்கக்கிட்ட பேசுறதுக்காக ஒருநாள் போனாரு. அங்க உள்ள கரும்பு தோட்டத்துல திமுககாரங்க ஸ்டாலின் வராருனு சிமெண்ட் ரோடு போட்டு வைச்சிருந்தாங்க. இதை ஃபோட்டோ எடுத்தும் போட்ருந்தாங்க. விவசாயிகள் உட்பட பலரும் இதை வைச்சு செய்தாங்க. அதேமாதிரி, தன்னைவிட வயசுல பெரியவங்கள கால்ல விழ வைச்சாருனு சொல்றது, மெட்ரோ ட்ரெயின்ல இளைஞரை கண்ணத்துல அடிச்சது, நீலகிரில ஆட்டோ டிரைவரை அடிச்சது, வீட்டுல இருந்து சாப்பாடு கொண்டு வந்து ஹோட்டல்ல சாப்பிட்டாருனு சொல்றதுனு ஏகப்பட்ட சம்பவங்களை நம்ம ஸ்டாலின் பண்ணிருக்காப்புல. இது எல்லாத்துக்கும் யார் காரணம்? அவர்கூடவே சுத்துவாங்கல்ல அவங்கதான்.
கஸ்தூரி பாட்டியின் சம்பவம்
திமுக, அதிமுக தனித்தனியா பண்ண சம்பவங்கள், இப்போ நான் சொன்னதும். ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு சம்பவம் பண்ணாங்க. பஸ்ல பாட்டி பண்ண சேட்டைகளை பார்த்ததும் தேர்தல் அப்போ டிரெண்டான கஸ்தூரி பாட்டியும் நியாபகம் வந்தாங்க. ஐ.டி விங்தான் இதுக்கும் காரணம். தேர்தல் டைம்ல டிவி பார்க்குறதே செம ஜாலியான விஷயமா இருக்கும். அதுலயும் அவங்க கொடுக்குற விளம்பரங்கள்லாம் சான்ஸே இல்லை. “பெத்த புள்ள சோறு போடல, எனக்கு சோறு போட்ட தெய்வம், புரட்சித் தலைவி அம்மா தான்”னு சேனல்ல விளம்பரம் போகும், அதே சேனல்ல அடுத்து “வானத்துல பறக்குறவங்களுக்கு நம்மளுடைய பிரச்னை எப்படி தெரியும்? மக்களைப் பற்றியே கவலைப்படாத ஆட்சி இனி எதுக்குங்க?”னு இன்னொரு விளம்பரம் போகும். முதல்ல சொன்னது அதிமுக விளம்பரம், ரெண்டாவது சொன்னது திமுக விளம்பரம். ரெண்டுலயும் பேசுறது கஸ்தூரி பாட்டிதான். இதக்கூடவா பார்க்கமாட்டீங்க? இந்த விளம்பரங்கள்ல நடிச்சதை நினைச்சு அந்தப் பாட்டியவே கடைசில ஃபீல் பண்ண வைச்சிட்டாங்க. போதும்மா.. போதும்பா..!
அண்ணாமலை மழை ஃபோட்டோ ஷூட்
ப்ரீ வெட்டிங், அஃப்டர் வெட்டிங் ஃபோட்டோ ஷூட்லாம்கூட இவ்வளவு பிளான் பண்ணி பண்ண மாட்டாங்க. ஆனால், நம்ம அண்ணாமலை இருக்காரே, வேறலெவல். மோடிக்கு சிஷ்யன்னு ஒரேயொரு ஃபோட்டோஷூட்ல நிரூபிச்சிட்டாரு. சென்னைல கொஞ்சம் மழை வந்தாலே போதும் எங்கயாவது ஒரு இடத்துல தண்ணி தேங்கிரும். அப்படி, போன வருஷம் பெய்த மழைல ஒரு இடத்துல தண்ணி தேங்கிடுச்சு. அங்க முழங்கால் அளவுக்குக்கூட தண்ணி இல்லை. ஆனால், நம்ம அண்ணன் ஃபோட்டோ டீமோட போய் ஃபோட்டோ ஷூட் பண்ணாரு. பின்னாடி யாரும் நிக்காதீங்க, பக்கத்துல வர்ராதீங்க, வைடா வைங்க ஃப்ரேம, இந்த ஆங்கிள்ல ஒரு ஃபோட்டோ எடுங்கனு ஃபுல்லா சம்பவம் பண்ணிட்டாரு. அதை கூடவே இருந்தவங்க வீடியோவா எடுத்து வெளிய விட்டாங்க. எவனோ, நம்ம பயதான் அவன்னு நெட்டிசன்கள்லாம் மீம் போட்டு தாளிச்சு எடுத்துட்டாங்க. அண்ணாமலை வீரசாகச வாழ்க்கை வரலாற்று புத்தகத்துல இதெல்லாம் பொறிக்கப்படும்.
மோடி டெலிபிராம்ப்டர்
ஒரு வி.ஐ.பி வாழ்க்கைல டெலிபிராம்ப்டர் எவ்வளவு முக்கியம்? கூட இருக்குறவங்க. அதைக்கூடவா பார்க்க மாட்டாங்க. உள்ளூரா இருந்தாக்கூட பரவால்ல. வெளியூர் ஆட்டக்காரங்கக்கிட்ட போய் தலைவன் சம்பவம் பண்ணிட்டு வந்துருக்காரு. உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர மாநாடு சுவிட்சர்லாந்துல இந்த வருஷம் தொடக்கத்துல நடந்துச்சு. அப்போ, தொழில்நுட்பகோளாறு காரணமா டெலிபிராம்ப்டர் டக்னு வேலை செய்யலை. எவ்வளவோ விஷயங்களை சமாளிக்கிற பிரதமர் மோடி திணறி அப்போதான் பார்க்குறேன். என்ன செய்யணும்னு தெரியுமா, “கேக்குதா கேக்குதா”னு அவர் கேட்ட சத்தம் எல்லார் காதுகள்லயும் ஒலிச்சுது. ஆனால், மனுஷன் ஏமாத்துறாருனு ஏமாந்து போய் நின்னாரு. இதை நம்ம நெட்டிசன்கள் பார்த்துட்டு சும்மா இருப்பாங்களா? வைச்சு செய்துவிட்டாங்க. பா.ஜ.க ஐ.டி விங் என்னடா பண்ணி வைச்சிருக்கீங்க? அதேமாதிரி மோடி ஃபோட்டோ எடுக்கும்போதுலாம் இந்த ஐ.டி விங் காரங்க எதாவது சம்பவம் பண்ணி விட்டுறாங்க. முதல்ல அவங்க பா.ஜ.க பாசறையானு பார்த்து வேலைக்கு வைங்க மோடிஜி.
அண்ணாமலை கால்ல பிளான் பண்ணி விழ வைச்சது, ஆளே இல்லாத இடத்துல கை காட்டி எடப்பாடி ஓட்டு போட்டது, கல் தோசையை திருப்பிபோடாமல் மடிச்சுக்கொடுத்த குஷ்பூ வீடியோ இப்படி கூட இருந்தே ஐ.டி விங்கள் நிறைய சம்பவங்களை பண்ணியிருக்காங்க. இந்த சம்பவங்கள்ல நான் எதையாவது கண்டிப்பா மிஸ் பண்ணியிருப்பேன். அது என்ன சம்பவம்னு கமெண்ட்ல சொல்லுங்க.