கல்கியோட பொன்னியின் செல்வன் நாவல்ல இருக்க கேரக்டர்களை அறிமுகப்படுத்துற இந்த முயற்சியில வந்தியத்தேவனுக்கு அப்புறமா நாம பார்க்கப்போற கேரக்டர் நாவலோட பெயரைத் தாங்கியிருக்க பொன்னியின் செல்வன் என்கிற அருள்மொழிவர்மரைப் பத்திதான். தஞ்சை பெரியகோயிலைக் கட்டி சோழர் குலம் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் புகழ்பெற்று விளங்க முக்கியமான காரணமாக இருக்கும் ராஜராஜ சோழன்தான் அருள்மொழிவர்மர். இவர் அரியணை ஏறுறதுக்கு முன்னாடி நடந்த சம்பவங்களை அடிப்படையா வைச்சு கொஞ்சம் கற்பனை கலந்து எழுதப்பட்ட கதைதான் பொன்னியின் செல்வன்.

டிஸ்கிளைமர் – நண்பர்களே இது கல்கியோட பொன்னியின் செல்வன் நாவலை விமர்சிக்குற அல்லது எடைபோடுற முயற்சி கிடையாது. அந்த நாவலைப் படிக்கிறப்போ நான் உணர்ந்த அல்லது என்னால் புரிந்துகொண்ட அளவில் அதிலிருக்கும் ஒவ்வொரு கேரக்டர்களைப் பத்தியான ஒரு சின்ன உரையாடல்தான். அதேமாதிரி, மணிரத்னம் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் படம் இந்த நாவலை அடிப்படையாக வைச்சுதான் உருவாக்கப்பட்டிருக்கு. அதனால, இந்த ஸ்டோரில அந்தப் படத்தோட சில ஸ்பாய்லர்கள் இருக்கவும் வாய்ப்பிருக்கு. சோ, படத்துல பார்த்துத் தெரிஞ்சுக்கிறேன்னு சொல்றவங்க Skip பண்ணிடுங்க.
பொன்னியின் செல்வன் நாவல் தொடர்கதையா வந்து முடிஞ்சபிறகு ரைட்டர் கல்கிக்கு பாராட்டுகளும் அதே நேரத்துல ஏன் இவ்வளவு சீக்கிரம் கதையை முடிச்சிட்டீங்கன்னும் லெட்டர்ஸ் குவிஞ்சிருக்கு. கதையோட முடிவு ஏன் அப்படி இருந்துச்சுங்குற கேள்விக்கு கல்கியே ஒரு பதிலும் சொல்லிருப்பார். வீடியோவை முழுசா பாருங்க… அதைப்பத்தியும் சொல்றேன்.
பொன்னியின் செல்வன்
கதையோட பெயரைத் தாங்கியிருக்க கேரக்டர்தான் அருள்மொழிவர்மர் Alias பொன்னியின் செல்வன். ஆனாலும், ஐந்து பாகங்கள் கொண்ட நாவலின் சில, பல அத்தியாயங்களுக்குப் பிறகுதான் இவரோட அறிமுகம் இருக்கும். அப்பவும், அவருக்கு பெருசா டயலாக்குகள் இருக்காது. இரண்டாவது பாகத்தில்தான் பொன்னியின் செல்வனையே வாசகர்களுக்கு முழுமையாக அறிமுகப்படுத்துவார் கல்கி. பொதுவா, மாஸ் ஹீரோ படங்கள்ல ஹீரோவோட இன்ட்ரோ மாஸா இருக்கும்ல… அப்படியான ஒரு இன்ட்ரோதான் இரண்டாவது பாகத்தில் இவருக்கும் கொடுத்திருப்பார். வலிமையான போர் வீரரான வந்தியத்தேவனை துவந்த யுத்தத்தில் தனியாளாக வீழ்த்தி, ஒரு வீர வரவேற்பு அவருக்குக் கொடுத்திருப்பார் அருள்மொழிவர்மர். வந்தியத்தேவன் திகைச்சு நிக்குற சீன்ல, ஓலை கிடைக்க வேண்டிய ஆள்கிட்டதான் கிடைச்சிருக்கு. கவலைப்படாதேனு ஆழ்வார்க்கடியான் சொன்னபிறகு, வந்தியத்தேவனுக்கு ஏற்படுற ஆச்சர்யமும் வியப்பும் நமக்கும் ஏற்படும்…

சோழ மக்களோட மனம் கவர்ந்த வீரன் அருள்மொழிவர்மர். நாட்டு மக்கள் எல்லாரும் இவர்தான் சுந்தர சோழருக்குப் பிறகு அரியணை ஏறணும்னு மனசாற விரும்புவாங்க… பார்க்குற எல்லாருக்கும் இவர் மேல ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்படுற அளவுக்கு வசீகரம் மிக்கவர். அக்கா குந்தவை மேல தனி மரியாதை வைச்சு, சின்ன வயசுல இருந்தே அவர் பேச்சை மீறாமல் வளர்ந்து வந்தவர். அண்ணன் ஆதித்த கரிகாலம் மேலயும் மதிப்பு வைச்சிருக்கவர். சோழ நாட்டு மக்கள் மட்டுமில்லீங்க… சிற்றரசர்கள் தொடங்கி, ஏன் எதிர்க்கூட்டத்தினர்கிட்டயும் மதிப்பும் மரியாதையும் பெற்றவர். அருள்மொழிவர்மரை எதிர்த்துப் பேசுறவங்க கூட, அவரை நேர்ல பார்த்துட்டா அப்படியே அவர் சொல்றதுதான் சரினு மனசை மாத்திக்குவாங்க.. அந்த மேஜிக் அருள்மொழிவர்மரால மட்டும்தான் சாத்தியம். வீரத்தோட புத்திசாலித்தனமும் கொண்டவர். இலங்கை சிம்மாசனத்தைக் கைப்பற்ற நினைக்குறதா பொய்யான குற்றச்சாட்டு சுமத்தி இவரை அரெஸ்ட் பண்ண சோழப் படைகள் இலங்கைக்கு வரும். ஆனா, உண்மையிலேயே அப்படியான ஒரு ஆஃபரும் இவருக்கு வரும். புத்த பிஷூக்கள் பழமையான இலங்கை சிம்மாசனத்தை இவருக்குக் கொடுக்க முன்வருவாங்க. அந்த இடத்துல யார் மனசும் புண்படாம, மென்மையா அதை மறுத்து, புத்த பிஷூக்கள் மனசுல இன்னும் பெரிய இடத்தைப் பிடிச்சுடுவார்.
பாகுபலி ஹீரோ கேரக்டர்கிட்டயே அருள்மொழிவர்மரோட ரெஃபரென்ஸை ஹெவியா நீங்க பார்க்க முடியும். அந்தப் படத்துல மதம்பிடிச்ச யானை இவரோட சொல்லுக்குக் கட்டுப்பட்டு நிக்குற மாதிரி ஒரு சீன் வரும். அந்த சீன்களை எல்லாம் 1950கள்லயே கல்கி பொன்னியின் செல்வன்ல எழுதியிருப்பாரு. அபீஷியலா இவர் அறிமுகமாகுறதுக்கு முன்னாடி, இலங்கைல சோழப் படைகளுக்குப் பயந்து மலையில ஒளிஞ்சிட்டு இருக்க மகிந்தனைப் பார்க்க சீன யாத்திரீகர்கள் வருவாங்க. அவங்களுக்கு யானைப் பாகனா நம்ம பொன்னியின் செல்வன்தான் இருப்பாரு. அதேமாதிரி, இலங்கையில யானை மேல வேகமாப் பயணிக்குற சீனாகட்டும், பின்னாட்களில் திருவாரூர் அரண்மனைல இருந்து மக்கள் கூட்டத்துல இருந்து தப்பிக்க யானையைத் தான் பயன்படுத்துவார். யானை பாஷையே தெரிஞ்சவர் அருள்மொழிவர்மர்னு கல்கி வர்ணிச்சிருப்பார்.

இலங்கை மன்னனுக்கும் சோழ நாட்டுக்கும் நடக்குற போர்ல அந்த நாட்டு மக்கள் பாதிக்கப்படக் கூடாதுனு நினைக்குற ஈர மனசுக்காரர். மாற்று மதங்களையும் அரவணைச்சவர்னு பல இடங்கள்ல அவரை சுட்டிக் காட்டியிருப்பாரு கல்கி. அதுக்கேத்தபடியே, சிவாலயங்களின் கோபுரங்களும் புத்த விஹாரங்களும் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக் கொண்டு உயரமாக இருக்கணும். அப்படியான வேலைகளைச் செய்யப்போறேன்னு நாகப்பட்டினத்துல புத்த பிஷூகிட்ட அருள்மொழிவர்மர் சொல்வாரு. எல்லாத்தையும் விட பொன்னியின் செல்வன் நாவலே, அருள்மொழிவர்மரோட தியாகத்தை நோக்கிதான் நகரும். அதுதான் கதையோட மெயின் பிளாட்டே. அதனாலயே, கதையின் ஐந்தாவது பாகத்துக்கும், கடைசி அத்தியாயத்துக்கும் தியாக சிகரம்னு கல்கி பெயர் வைச்சிருப்பாரு.
புகழ்பெற்ற சோழ சிங்காதனமே தன்னைத் தேடி வருகையில், அதைத் தனது சித்தப்பா உத்தமச் சோழனுக்காக விட்டுக்கொடுத்தது வரலாற்றின் மிகப்பெரிய தியாகம்னும் கல்கி புகழ்ந்திருப்பார்.
இந்தக் கதை மூன்றரை வருடங்களாகத் தொடர் கதையா வந்தபோதும், ஏன் கதையை சீக்கிரம் முடிச்சிட்டீங்கனு பல வாசகர்கள் கடிதம் மூலம் கல்கிகிட்ட குறைபட்டுக்கிட்டாங்களாம். மேலும் சிலர் உரிமையா கண்டனக் கடிதங்களும் எழுதியிருக்காங்க. அதுக்கெல்லாம், முடிவுரைல கல்கி விளக்கம் கொடுத்திருப்பாரு. சோழ சிம்மாசனத்தை அருள்மொழிவர்மர் விட்டுக்கொடுத்ததை கலிங்கப் போருக்குப் பின் போரே வேண்டாம் என்று சொன்ன அசோகருடன் ஒப்பிட்டு அதில் சிலாகித்திருப்பார். அதேபோல், அருள்மொழிவர்மர் அரியணை ஏறுவதைத் தவிர்த்துவிட்ட இடத்திலேயே கதை முடிந்துவிட்டது. அதன்பிறகும் தொடருவது கிளைமேக்ஸைத் தாண்டிய ஆன்டி- கிளைமேக்ஸ் என்றும் கல்கி பதில் சொல்லியிருப்பார்.