உலகமே ஒரு அரசியல் களம்னு நினைக்கிற ‘நட்சத்திரம் நகர்கிறது’ ரெனே. உலகமே அழகானது எல்லாரும் நல்லவங்கனு நினைக்கிற ‘பரியேறும் பெருமாள்’ ஜோ. உலகமே ஜாலியானதுனு ரசிச்சு வாழ்ற ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ ஹாசினி. இப்படி விநோதமான பெண் கதாபாத்திரங்கள் நம்மளைச் சுத்தியும் இருப்பாங்க. இதுல எந்த கேரக்டரை ஆண்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு தெரிஞ்சுக்க ஆசை. அலசி ஆராய்ந்து பார்த்துடுவோமா?
ரெனே
சமூகத்தில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களைக் கூட அரசியலாகப் பார்க்கும் எக்ஸ்ட்ரீம் புரட்சிக்காரி ரெனே. அதுக்காக செவனேன்னு தூங்கிட்டு இருந்தவன் காதுல கத்துறது. அவன் பாடாதனு சொன்னா உனக்கு இளையராஜாவைப் பிடிக்காததுனாலதான் பாட வேணாம்னு சொல்றனு அதையும் பஞ்சாயத்தாக்குறதுனு மெண்டல் டார்ச்சர் பண்றதுலாம் அநியாய புரட்சியா இருக்கும். ஆசையாக காதலித்தவன் சாதிப் புத்தி என்று திட்டியதற்காக பிரேக்கப் பண்ணிய ரெனேவை புரிஞ்சுக்க முடியுது. ஆனால் தவறாக நடந்துகொள்ள முயன்றவனை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் ரெனேவை புரிஞ்சுக்கவே முடியல. ஆடையில் தொடங்கி உணவு வரை ஆண்களின் பொதுப்புத்தியை ஒரண்டை இழுத்துக்கொண்டே இருக்கும் ரெனேவுக்கு ‘சிங்கப் பெண்ணே’ பாட்டு வேணா பாடலாம். ‘ஓமனப் பெண்ணே’ பாடுறதுக்குலாம் பெரிய லெவல்ல அரசியல் புரிதலும் மன தைரியமும் வேணும்.
ஜோ
கண்ணை மூடிக்கொண்டு காதலைச் சொல்லும் ஜோவின் உலகமே தனி. அந்த உலகத்தில் கெட்டவர்களே கிடையாது. ஜோவுக்கு கேட்டதெல்லாம் செய்து கொடுத்துச் சிரிக்கும் அப்பாவைத்தான் தெரியும். கல்யாணத்துக்கு வந்த மகளோட ஃப்ரெண்டை அடிச்சுத் துவைச்சு அவமானப்படுத்திய அப்பாவை அவள் பார்த்ததேயில்லை. முதல்நாள் காதலியின் வீட்டில் அடி வாங்கி மிதி வாங்கி வந்துவிட்டு மறுநாள் என்ன ஏதுனுகூட கேட்காம ‘என்னைவிட உனக்கு கபடி மேட்ச் முக்கியமா போச்சுல’ என்று திட்டும் வாங்கிக்கொண்டிருக்கும் பரியனின் நிலைதான் பரிதாபம். நாம யாரு, நாம யாரை லவ் பண்றோம்னு ஜாதி பேதம் பார்க்காம பழகுற ஜோ நல்ல பொண்ணுதான். ஆனா சுத்தி என்ன நடக்குதுனு சமூகத்தைப் பத்தின எந்தப் புரிதலும் தன்னை மாதிரியே எல்லாரும் இருப்பாங்கனு நினைச்சு அடுத்தவனையும் பாதிப்புக்கு உள்ளாக்குற ஜோவோட வெகுளித்தனத்தை நினைச்சாதான் கெதக்குனு இருக்கு.
Also Read – நடிகை அமலா ஏன் கிளாசிக்?
ஹாசினி
பஸ் ஏறிப்போய் ஸ்பெஷல் டீ குடிப்பது, நள்ளிரவில் ஐஸ்கீரீம் தேடிப்போவது என ஒவ்வொரு நொடியும் வாழ்க்கையை ரசித்து வாழும் ஹாசினியை யாருக்குத்தான் பிடிக்காது. எவரையும் சிரிக்க வைத்துவிடுற, எந்த சூழ்நிலையையும் இளகுவாக்கிவிடுகிற ஹாசினி டார்லிங் ஏஞ்சல்தான். ஆனா பாருங்க.. கூட இருக்குறவங்களுக்கு என்ன பிரச்னையை உண்டு பண்ணும்னு எதைப் பத்தியும் யோசிக்காமல் எல்லா உண்மையையும் எல்லாரிடமும் சொல்கிற ஹாசினி கொஞ்சம் இல்லல்ல ரொம்பவே டேஞ்சர். வீட்டுல சீரியஸான பிரச்னை ஓடிட்டு இருக்கும்போது ஒரு வாண்டு சம்பந்தமே இல்லாம குறுக்க மறுக்க ஓடிட்டு ஜாலியா இருக்கும். அந்த குழந்தைத்தனத்த பார்த்தா ரசிக்குற மாதிரி இருக்கும். ஆனா அதையே ஓயாம திரும்ப திரும்ப பண்ணிட்டு இருக்கும்போது குழந்தையா இருந்தாலும் மண்டை மேலயே போட்டு போய் ஓரமா உட்காருனு சொல்லத் தோணும்ல அப்படி ஒரு குழந்தைதான் ஹாசினி.
ஆக மொத்தத்துல யாரைதான்யா புடிக்கும்னு கேட்டா.. தெரியலைங்க.. ஒரே கொழப்பமா இருக்கு. இதுல எந்த வகை பெண்ணை நீங்க தேர்ந்தெடுப்பீங்க? நீங்களே இந்த பஞ்சாயத்துக்கு நல்ல ஒரு தீர்ப்பா கமெண்ட்ல சொல்லுங்க.
I visited multiple web pages except the audio feature for audio
songs present at this web site is genuinely fabulous.!