எனக்கு என்ன கேரக்டர் வேணும்னாலும் கொடுங்க, நான் அதுல நடிச்சு ஸ்கோர் பண்ணிட்டு போய்கிட்டே இருப்பேன்றது செம கான்ஃபிடன்ஸ்ல? அப்படியான நடிகர்கள்ல ஒருத்தர்தான் ரமேஷ் திலக். கபாலி ஷூட்டிங் அப்போ “ஏய், காக்கா முட்டை”னு ரஜினி கூப்பிட்டு பாராட்டியிருக்காரு. “கும்பளாங்கி நைட்ஸ்ல செமயான பெர்ஃபாமென்ஸ்பா”னு மாஸ்டர் ஷூட்டிங் அப்போ விஜய் கூப்பிட்டு பாராட்டியிருக்காரு. ஆனால், “என்னடா நடிக்கிற? இன்னும் நல்லா பண்ணனும்டா!”னு விஜய் சேதுபது எப்பவும் ரமேஷ் திலக்கிட்ட சொல்லுவாராம். இவரோட சினிமாப் பயணம் கொஞ்சம் இண்ட்ரஸ்டிங்கா இருக்கும். அதைத்தான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.
விஜய் சேதுபதியும் ரமேஷ் திலக்கும் செம க்ளோஸ்னு எல்லாருக்கும் தெரியும். மோதல்ல ஆரம்பிச்ச காதல் நல்லாருக்கும்னு சொல்லுவாங்கள்ல. அப்படிதான் இவங்க நட்பும். விஜய் சேதுபதிக்கு ‘சூது கவ்வும்’ ஹீரோவா மூணாவது படம். ரமேஷ் திலக், விஜய் சேதுபதி ரெண்டு பேருமே ஒரே மாதிரி சினிமாக்குள்ள டிராவல் பண்ண ஆரம்பிச்ச டைம். சூது கவ்வும் ஷூட்டிங் அப்போ, ரமேஷ் திலக் நடிக்கும்போது விஜய் சேதுபதி அவரைக் கூப்பிட்டு “நடிக்கும்போது இப்படி நடிங்க, இதை கொஞ்சம் கரெக்ட் பண்ணிக்கோங்க”னு அட்வைஸ் பண்ணிருக்காரு. ரமேஷ் திலக் கடுப்பாகி, ஒண்ணாதான் நடிக்க வந்தோம் எனக்கு என்ன அட்வைஸ் பண்றீங்கனு நினைச்சுட்டு “நீங்க நடிக்கிறதைப் பத்திலாம் எனக்கு சொல்லாதீங்க. டைரக்டர் அதை சொல்லட்டும்”னு சொல்லியிருக்காரு. உடனே, விஜய் சேதுபதி, “ஏன்டா, என்னை புடிக்கலையா?”னு கேட்ருக்காரு. ஆனால், ஷூட்டிங் போகப்போக அவர் நடிப்பைப் பார்த்து வியந்துருக்காரு. அப்புறம், ஏதோ ஒரு மேஜிக் நடந்து அவங்க ரிலேஷன்ஷிப்பை க்ளோஸ் ஆக்கிடுச்சுனு ரமேஷ் சொல்லுவாரு.
ரமேஷ் திலக் ஒரு போஸ்ட்ல “என்னை எப்போதும் உயரத்தில் உட்கார வைத்து சந்தோஷப்படுற மனுஷன்”னு விஜய் சேதுபதிகூட எடுத்த ஃபோட்டோவோட ஒரு போஸ்ட் போட்ருப்பாரு. ஆரம்பத்துல இவரை அண்ணனு கூப்பிடணுமா?னு யோசிச்ச ரமேஷ், இன்னைக்கு சேதுனா, சேதுனானு சுத்துறாரு. காக்கா முட்டை உட்பட நிறைய படங்களுக்கு வாய்ப்பை வாங்கிக்கொடுத்தது இவர்தான். அதேமாதிரி அஸ்தமனம்னு ஒரு படம் வந்துச்சு. அதுலயும் இவர் நடிச்சாரு. அந்தப் படத்துக்கும் விஜய் சேதுபதிதான் இவரை அனுப்பி விட்ருக்காரு. சரி, இன்னைக்கு நிறைய படங்கள் ரமேஷ் பண்ணிட்டு இருக்காரு. அதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தாரு?
ரமேஷ் திலக் பி.எஸ்.சி மேக்ஸ் முடிச்சிருக்காரு. ஆரம்பத்துல இருந்தே ஒரு இன்ஃபீரியாரிட்டி காம்பெளக்ஸ் உள்ள ஒரு ஆளு. யு.ஜி முடிஞ்சதும் மாஸ் கம்யூனிகேஷன் படிக்க பி.ஜி ஜாயின் பண்னியிருக்காரு. ஏற்கனவே சொன்ன மாதிரி, அழகில்லனுலாம் நினைச்சதால, கேமராவுக்குப் பின்னாடி உட்கார்ந்து எதாவது வேலை பார்க்கலாம்னு நினைச்சு ஆர்.ஜே ஆக ட்ரை பண்ணியிருக்காரு. ஆரம்பத்துல நிறைய ரிஜெக்ஷன்ஸ்லாம் இருந்துருக்கு. அப்புறம் ஒரு வழியா ஒரு எஃப்.எம்-ல ஆர்.ஜே-வா ஜாயின் பண்ணியிருக்காரு. ஜாயின் பண்ணதும், தனக்குனு எந்தவொரு ஸ்டைலும் இல்லாமல், நார்மலா இந்தப் பாட்டு வரப்போகுது, கேட்டு மழுகிழுங்க-ன்ற ரேஞ்ச்லதான் ஷோ முழுக்கவே பேசிட்டு இருந்துருக்காரு. அப்போ அவரோட், புரோகிராம் ஹெட்டா இருந்தவரு ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படம்லாம் எடுத்த டைரக்டர் நெல்சன். ரமேஷ் திலக்கை நெல்சன் கூப்பிட்டு “இதெல்லாம் பண்ண சிஸ்டமே போதும். நீ எதுக்கு பண்ற?”னு கேட்ருக்காரு. அப்புறம் நிகழ்ச்சிலலாம் கொஞ்சம் கொஞ்சமா இன்ட்ரஸ்டிங்கா பேச ஆரம்பிச்சிருக்காரு. நிறைய சினிமா பிரபலங்களை பேட்டி எடுக்கவும் ஸ்டார் பண்றாரு. சினிமா துறைக்குள்ள இவருக்கு கொஞ்சம் கான்டாக்ட் கிடைக்க ஆரம்பிக்குது.
ஆர்.ஜே-வா இருந்தவரு, எப்படி நடிகரா மாறுனாரு? அவரோட பேஷனா நடிகனாகனும்னு இருந்துதா?னு ஒரு கேள்வி வருதுல! விஜய் கூட நடிக்க மறுத்த படங்கள் எத்தனை தெரியுமா? வெயிட் சொல்றேன்.
சூரியன் எஃப்.எம்ல ஆர்.ஜே-வா இருக்கும்போது அவரோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சினிமால வாய்ப்புகள் தேடி அலைய ஆரம்பிச்சிருக்காங்க. அப்போ, இவரும் சும்மா கூட போக ஸ்டார்ட் பண்ணியிருக்காரு. ஒரு தடவை இவரோட ஃப்ரண்ட் ஃபோட்டோ கொடுக்கும்போது, இவர்கிட்டயும் ஃபோட்டோ கேட்ருக்காங்க. இவரும் சும்மா கொடுத்துட்டு வந்துருக்காரு. பார்த்தா, அந்தப் படத்துல நடிக்க இவர் செலக்ட் ஆயிட்டாரு. வருத்தமான விஷயம் என்னனா, அந்தப் படம் டேக் ஆஃப் ஆகல. அப்புறம், சரி நம்மளும் நடிக்க ட்ரை பண்ணலாம் போலயேனு வாய்ப்புகளை தேட ஆரம்பிச்சிருக்காரு. பேட்டி எடுக்குற இயக்குநர்கள்கிட்டலாம் ஆடிஷன் இருந்தா சொல்லுங்க வர்றேன்னு ஒரு ஹிண்ட் கொடுத்துட்டும் இருந்துருக்காரு. அப்படி இவருக்கு மாப்பிள்ளை படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சுது. ஆனால், ஃப்ரேம்ல ஃப்ராக்ஷன் ஆஃப் செகண்ட் வந்துட்டு போற சீன். அதுக்கப்புறம் நிறைய ரிஜெக்ஷன்ஸ் ஃபேஸ் பண்ணியிருக்காரு. நீயெல்லாம் நடிக்க வந்துட்டியான்ற ரேஞ்ச்ல நிறைய பேர் இவரை டீல் பண்ணியிருக்காங்க.
வெங்கட் பிரபுவை ஒருநாள் மீட் பண்ணும்போது, “டேய், சான்ஸ் உடனேலாம் கிடைக்காது. கொஞ்ச, வெயிட் பண்ணனும். சினிமா ஷூட்டிங்லாம் எப்படி நடக்குதுனு பாரு”னு சொல்லியிருக்காரு. அப்படி மங்காத்தா படத்துல ஒரு 15 நாள் வொர்க் பண்ணியிருக்காரு. முதல் தடவை ரமேஷ் டயலாக் பேசுன படம்னா அது மெரினா படம்தான். அந்த டைம்லதான் ஷார்ட் ஃபிலிம் எடுக்குறது மிகப்பெரிய ட்ரெண்டா இருந்துச்சு. நலன் குமாரசாமியையும் அப்போ இவரு மீட் பண்றாரு. அவர் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்காக சைக்கோ த்ரில்லர் ஷார்ட் ஃபிலிம் ஒண்ணு எடுக்க ஆள் தேடிட்டு இருந்துருக்காரு. ரமேஷ் அதுக்கு கரெக்டா செட் ஆவார்னு நடிக்க வைச்சிருக்காரு. டி.வில வந்ததும் அந்த ஷார்ட் ஃபிலிம் செம ஹிட்டு. இன்டஸ்ட்ரீல இருக்குற நிறைய இயக்குநர்கள் இவருக்கு ஃபோன் பண்ணி பாராட்டியிருக்காங்ல. அப்புறம் சூது கவ்வும் படம் கிடைக்குது. மிகப்பெரிய பிரேக்.
சூது கவ்வும் ஷூட்ல இருக்கும்போதுதான் விஜய் சேதுபதி காக்கா முட்டை படத்துக்கு இவரை ரிஃபர் பண்றாரு. ஆடிஷன் போய் கலந்துக்கிட்டு ‘நைனா’ கேரக்டரோட திரும்ப வந்துருக்காரு. இதுக்கு இடைல நேரம், வாயை மூடி பேசவும், டிமான்டி காலனி-னு செமயான ஸ்கிரிப்ல குறிப்பிட்டு சொல்லும்படியான கேரக்டர்களை நடிச்சிட்டாரு. டிமாண்டி காலனில வந்த “என்னோட வாழ்க்கை எப்படி இருக்குங்கயா?, அப்போ என் திருமண வாழ்க்கை?”னு கேக்குற சீன்லாம் அல்டிமேட். இன்னைக்கும் நிறைய பேரோட வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இதுதான். அதுக்கப்புறம் ஆரஞ்சு மிட்டாய், ரொம்ப எமோஷனால கேரக்டர். ஒரு நாள் கூத்து, வேதாளம், காதலும் கடந்து போகும், கபாலி, ஆண்டவன் கட்டளை, காலா, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், டிக் டிக் டிக், இமைக்கா நொடிகள், விஸ்வாசம், ஓ மை கடவுளே, மாஸ்டர், நெஞ்சுக்கு நீதி – இப்படி இவர் நடிச்ச படங்கள்ல இவரோட கேரக்டர் எல்லாமே அட்டகாசமா இருக்கும். என்னோட ஃபேவரைட் கும்பளாங்கி நைட்ஸ். ஒரு வலியான வாழ்க்கையை அவ்வளவு அழகா நடிச்சிருப்பாரு. தெறில தொடங்கி பிகில் வரைக்கும் விஜய்கூட 5 படங்கள்ல நடிக்க வாய்ப்பு கிடைச்சும் பண்ண முடியாம போச்சாம்.
நவலட்சுமி – ரமேஷ் திலக்கோட காதல் கதையும் செம ஃபேமஸ். ரெண்டு பேருமே ஒரே ஆஃபிஸ்லதான் வேலை பார்த்துட்டு இருக்காங்க. முதல்நாள் நவலட்சுமியை மீட் பண்ணும்போது செமயா கலாய்ச்சு விட்டுட்டாராம். அப்புறம் நவலட்சுமி ரமேஷை பார்த்தாலே பயந்து ஒதுங்கி போய்டுவாங்களாம். அப்புறம், ரமேஷ் அவங்களைக்கூப்பிட்டு சகஜமா பேச ஆரம்பிச்சிருக்காங்க. ஒரு கட்டத்துல பெஸ்ட் ஃப்ரெண்டா மாறியிருக்காங்க. கடைசி வரை ஐ லவ் யூ சொல்லிக்கவே இல்லையாம். கல்யாணம் பண்ணிக்கலாம் வீட்டுல பேசலாம்னு சொல்லி, வீட்டுல அக்சப்ட் பண்ணதும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ஆஃபிஸ்லயும் ஒருநாள் எல்லாரையும் கூப்பிட்டு “நவாவும் நானும் கல்யாணம் பண்ணிக்கப்போறோம்”னு அனௌன்ஸ் பண்ணிருக்காங்க. முதல்ல இவங்க காதலை சொன்னதும் விஜய் சேதுபதிகிட்டதான்.
ஆரம்பத்துல தன்னோட ஃபிஸிக் நினைச்சு கூச்சப்பட்டவர், ரமேஷ் திலக். ஆனால், அந்த ஃபிஸிக், ஆட்டிட்டியூட்தான் ஆரஞ்சு மிட்டாய் படத்துல அவர ஹீரோ ஆக்க ஹெல்ப் பண்ணிச்சு. இன்னைக்கு, அவர் பாடி ஷேமிங் எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு ஒரு கேரக்டர் ஆர்டிஸ்டா தமிழ் சினிமால கலக்கிட்டு இருக்காரு. ஆர்.ஜே டு ஆக்டர்-னு ஈஸியா சொல்லிடலாம். அதுக்குள்ள அவ்வளவு வலிகள், தடுமாற்றங்கள் எல்லாமே அவருக்கு இருக்கு. ஆனால், எப்பவுமே ரமேஷ் திலக் ஹேப்பி.
Also Read – `தக் லைஃப் கிங்’ மிர்ச்சி சிவாவின் தரமான சம்பவங்கள்!