சினிமானாலதான் இந்த சமூகமே கெட்டுப்போகுதுன்ற பேச்சு, சினிமா வந்த காலத்துல இருந்தே இருக்கு. இதைப் பத்தி அயலி வெப் சீரீஸ் டைரக்டர் முத்துக்குமார் நீயா நானால பேசும்போது, “சினிமானால 50 வருஷமா அரசியல் கெட்டுப்போச்சுனு சொல்றாங்க. அப்போ, அதுக்கு முன்னாடி யாரு அரசியலை கெடுத்தா? இல்லை, உலகம் ரொம்ப பெர்ஃபெக்டா இருந்துச்சா? இல்லவே இல்லை. ரொம்ப ஈஸியா கார்னல் பண்ண சினிமா இருக்குறதுக்கு காரணம், நிறைய பேருக்கு சினிமா புடிக்காது. ஏன்னா, சினிமா எல்லாரையும் ரொம்ப ஈக்குவலா ட்ரீட் பண்ணுது. ஈக்குவாலிட்டி புடிக்காதவங்களுக்கு சினிமா புடிக்காது”னு சொல்லுவாரு. ஏன் இதை சொல்றேன்னா.. சாதிய பாகுபாடுகள் அதிகமாக இருந்த காலத்துல தொடங்கி இப்போ சாதி, மதம் பிரச்னைகள் இருக்குற ஊர்கள் வரைக்கும் எல்லாரையும் சமமா ட்ரீட் பண்ற ஒரே இடம் தியேட்டர்தான். அந்த இடத்துலயும் இப்போ பிரச்னை வந்துருக்கு. அதைவிட ஷாக்கான விஷயம் தியேட்டர் அதுக்கு கொடுத்த விளக்கம். என்ன பிரச்னை? என்ன பேசிக்கிறாங்க? ரோகிணி தியேட்டர் ஃபேன்ஸ் கொண்டாடுற தியேட்டரா எப்ப மாறிச்சு? எல்லாத்தையும் இந்த வீடியோல பார்ப்போம்.
ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித்னு எந்த ஸ்டாரோட ஃபஸ்ட் டே ஃபஸ்ட் ஷோவை செலிபிரேட் பண்ணி திருவிழா மாதிரி பார்க்கணும்னாலும் ரோகிணி தியேட்டருக்குதான் போணும். ஆனால், டிக்கெட் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. சினிமால இருக்குற பெரிய ஸ்டார்ஸே ஃபேன்ஸ் எப்படி எஞ்சாய் பண்றாங்க, எந்த சீன் எஞ்சாய் பண்றாங்கனு தெரிஞ்சுக்கணும்னா ரோகிணி தியேட்டருக்குதான் வருவாங்க. அவ்வளவு ஸ்பெஷல். பன்னீர் செல்வம்தான் அந்த தியேட்டரோட முதல் முதலாளி. திருநெல்வேலிதான் அவரோட சொந்த ஊர். தன்னோட பிறந்த நட்சத்திரம் ரோகிணின்றதால அதையே தியேட்டர் பெயரா வைச்சிருக்காருனு சொல்றாங்க. 1980-கள்ல அவர் ரோகிணி தியேட்டர் இடத்தை வாங்கும்போது சுத்தி காடாதான் இருந்துருக்கு. இங்கயெல்லாம் யாரு வந்து படம் பார்ப்பா? எல்லாரும் மவுண்ட் ரோடுக்குதான் போவாங்கனு சொல்லியிருக்காங்க. இருந்தாலும் ரிஸ்க் எடுத்து இந்த தியேட்டரை ஆரம்பிப்போம்னு முடிவு பண்ணி தொடங்கியிருக்காரு. அந்த இடங்களை சென்னை லிஸ்ட்லகூட கன்சிடர் பண்ண மாட்டாங்களாம். ஆரம்பத்துல ரசிகர்கள் பெருசா படம் பார்க்க வரலை. போக போக சிட்டி வளர ஆரம்பிச்சதும், இந்த தியேட்டரோட பிளஸ்லாம் பார்த்து கூட்டம் வந்துருக்கு.
ரோகினில முதல்ல மூணு ஸ்கிரீன்தான் இருந்துருக்கு. ஆனால், இன்னைக்கு 7 ஸ்கிரீன் இருக்கு. விஜயகாந்த் படம்னு சொன்னாலே ரோகினில வேறலெவல் மாஸா இருக்குமாம். அதேபோல, ரஜினி படமும் சும்மா தீயா செலிபிரேட் பண்ணுவாங்களாம். காதலுக்கு மரியாதை படம்தான் ரொம்ப ஹிட்டா அந்த தியேட்டர்ல ஓடுனதா சொல்லியிருக்காங்க. அதேமாதிரி அஜித் ஃபேன்ஸோட படமும் இங்க பட்டாஸாதான் இருக்கும். ரீசண்டா நடந்த கண்ணாடி உடைப்பு சம்பவங்கள்கூட அங்கதான். ஃபேன்ஸ் அதிகமா அங்க தங்களோட ஸ்டார் படங்களை கொண்டாட முதல் காரணமே, எந்தவிதமான பெரிய ரெஸ்ட்ரிக்ஷனும் ரோகினில இல்ல அப்டின்றதுனாலதான். மத்த தியேட்டர்களை கம்பேர் பண்ணும்போது ரொம்பவே கம்மியாதான் இருக்கு. அதுனாலயே, ஃபேன்ஸ்லாம் அங்க செலிபிரேட் பண்ண ஆரம்பிச்சாங்க. அப்போ, விஜய் – அஜித் படங்கள் வரும்போது முக்கியமான ரோகினி ஸ்கிரீனை யாருக்கு ஒதுக்குறாங்கனுலாம் அவங்க ஃபேன்ஸ் மத்தில சண்டை வரும். ரோகினி தன்னோட வரலாற்றுல ஏகப்பட்ட சண்டைகளை பார்த்துருக்கு. அதுக்கப்புறம் ஒரு கட்டத்துல ரொம்ப டேமேஜஸ் ஆகுதுனு சில ரூல்ஸ் கொண்டு வந்துட்டாங்க. இருந்தாலும் அந்த முதல் நாள் முதல் காட்சின்ற ஃபேன்ஸோட செலிபிரேஷன் அந்த தியேட்டர்ல குறையவே இல்லை.
எல்லா ஃபேன்ஸும் இவ்வளவு செலிபிரேஷன் மோட்ல ரோகினியை வைச்சிருக்காங்க. ரோகினியும் அவங்க தான் எங்களுக்கு எல்லாமே.. ஃபேன்ஸ் கொண்டாடதான் நாங்க எல்லாம் பண்றோம். அவங்க எதையும் உடைக்காமல், டேமேஜ்லாம் பண்ணாமல் இருந்தாங்கனா இன்னும் லிபரலா, ரூல்ஸ் எதுவும் போடாமல் செம ஃப்ரீயா செலிபிரேட் பண்ண விடுவோம்னி சொல்றாங்க. ஆனால், சமீபத்துல நடந்த விஷயம் அவங்களோட மொத்த ஸ்டேட்மெண்டையும் சல்லி சல்லியா நொறுக்குற மாதிரிதான் இருக்கு. இந்த மாதிரி நேரத்துலதான், இவங்க ஃபேன்ஸ்னு யாரை கன்சிடர் பண்றாங்கன்ற கேள்வி வருது. பழங்குடியின மக்கள் அவங்களோட உடைல தியேட்டர்குள்ள போய் படம் ஒண்ணு பார்க்கணும்னு நினைச்சா முடியாது. ஏன்னா, அவங்களை சக மனுஷனா இவங்களால பார்க்க முடியல. இன்னொரு கேள்வியும் இந்த இடத்துல நாம கேட்கணும். எனக்கு அந்த இடத்துல கேள்வி கேட்ட விவேக்குன்ற ஒரு இளம் பத்திரிக்கையாளரைவிட, கேள்வி கேட்காமல் கடந்து போன ஆயிரம் மக்களோட மனநிலை என்னவா இருக்கும்? அப்டின்ற கேள்விதான் ஓடிகிட்டே இருக்கு. அங்க வெளில டிக்கெட் பார்த்துட்டு இருந்தவங்க அடிக்கவும் போய்ருக்காங்க. அப்போ, அவங்களைப் பொறுத்த வரைக்கும் மனசுக்குள்ள எவ்வளவு பெரிய தீண்டாமை உணர்வை தூக்கி சுமந்துட்டு இருக்காங்கன்றதும், இப்போலாம் யாரு சார் சாதி, மதம்லாம் பார்க்குறான்றதும், குடி பெருமை பேசுவோம் சுத்துற கேங்கும் தான் டக்ணு நியாபகம் வருது.
சோஷியல் மீடியால தீயா இந்த விஷயம் பரவின பிறகு, அவங்களை உள்ள அனுமதிக்கிறாங்க. ரோகிணி தியேட்டர் நிர்வாகத்துக்கிட்ட இருந்து அறிக்கை ஒண்ணு வருது. அதை படிக்கும்போது இன்னும் ஷாக்குதான் ஆச்சு. யு/ஏ சான்றிதழ் அந்தப் படத்துக்கு கொடுத்துருக்காங்க. அவங்க குழந்தைகளோட உள்ள வந்தாங்க. அதுனால நாங்க உள்ள விடலைனு விளக்கம் கொடுத்துருக்காங்க. சரி, தியேட்டர்ல சாதாரண டிக்கெட் கிழிக்கிற வேலை செய்றவரோட மனநிலைதான் இப்படி இருக்குனு நினைச்சா, அதுக்கு ஈக்குவலாதான் அந்த தியேட்டர் ஓனர்ஸ் மனநிலையும் இருக்கு. இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு மன்னிப்பு கேட்ருந்தா அந்த நிமிஷமே இந்த விஷயம் முடிஞ்சுருக்கும். ரோகினி மேல கொஞ்சம் பார்வை மாறியிருக்கும். ஆனால், செய்த தப்பை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிடுறது மாதிரி விஷயம் வேற எதாவது இருக்கா? இதுல ஃபேன்ஸ்தான் எல்லாமேனு அறிக்கை வேற. அவங்கள உள்ளைவிட்டா காசு கேப்பாங்கனுலாம் ரீசன் சொல்லியிருக்காங்க. அதுக்கு ஜெய்பீம்ல வந்த டயலாக்கை போட்ருந்தாங்க, முதல்ல ஒரு சாதி பெயரை சொல்லி இவங்க இப்படிதான்னு பிராண்ட் பண்றதை நிப்பாட்டுங்கனு.. எக்ஸாக்டா அந்த டயலாக் அப்படியே பொருந்திச்சு. இதுக்கு முன்னாடியும் நிறைய படங்களுக்கு அவங்களை உள்ள விடலைனு சொல்லிருந்தாங்க. எல்லாம் பார்க்கும்போது.. பெருமை பேசுறதை தவிர இவனுங்களுக்கு வேற என்ன கிடைக்கப்போகுதுன்ற விஷயம்தான் திரும்ப திரும்ப தோணுது.
Also Read – இந்தப் பாட்டுலாம் இவங்க பாடுனதா.. பவதாரிணி-யின் பெஸ்ட் பாடல்கள்!
ட்விட்டர் பாய்காட் ரோகிணி தியேட்டர்னு பயங்கரமா டிரெண்ட் பண்ணிட்டு இருக்காங்க. ஜி.வி.பிரகாஷ்ல தொடங்கி கமல் வரைக்கும் இதுக்கு தங்களோட கண்டனங்களை தெரிவிச்சுட்டு இருக்காங்க. தெரிவிச்சுட்டு இருக்காங்க. யு/ஏ படங்களை குடும்பமா வந்து யாருமே இதுவரை பார்த்ததில்லையா? ரூல்ஸே அவங்களை தனியா பார்க்க விடக்கூடாது. கைடன்ஸோட பார்க்க அனுமதிக்கலாம்ன்றதுதான். இதுத்தெரியாமல் ரூல்ஸ் பேச வந்துட்டியானு போட்டு பொளந்துட்டு இருக்காங்க. அதுக்கும் இவங்க வந்து 12 வயசுக்கு கீழ இருந்தா கண்டிப்பா அனுமதிக்கக்கூடாதுனுதான் சொல்லியிருக்காங்கனு சொல்ல, அதையே கோட் பண்ணி, CBFC வெப்சைட்லயே unrestricted public exhibition subject to parental guidance for children below the age of twelve அப்டினுதான் போட்ருக்குனு தெளிய வைச்சு தெளிய வைச்சு அடிக்கிறாங்க. ஆனால், இவ்வளவு நடந்தும் தப்பை அக்சப்ட் பண்ணிக்க மாட்றாங்க பார்த்தீங்களா? முட்டுக்கொடுத்துட்டுதான் இருக்காணுங்க! திரும்பவும் ஆரம்பிச்ச இடத்துலயேதான் வந்து நின்னு சொல்ல வேண்டியதா இருக்கு. பல வருஷமா எல்லாரையும் சமமா பார்த்த தியேட்டர்லயே, இன்னைக்கு சாதி, மதம் இன கொடுமைகள் நடக்குது.. சோ கால்ட் படிச்சவங்க ஊர்ல.. அப்ப இன்னும் கிராமங்கள்ல.. குறிப்பா சாதியம் தலை தூக்கி நிற்கும் ஊர்கள்லயெல்லாம் சொல்லவா வேணும்?