திருக்கணித பஞ்சாங்கப்படி 2023 ஜனவரி 17-ல சனி பகவான் கும்ப ராசிக்குக் குடிபெயர இருக்கிறார். ஒவ்வொரு ராசிக்காரர்களும் சனிப்பெயர்ச்சி பலன்களைத் தன்னோட ராசிக்கு சனி பகவான் என்னென்ன பலன்களைத் தரப்போறாரோனு தேடித்தேடி படிச்சிட்டு இருப்போம். அந்த சனிப்பெயர்ச்சி பலனை நம்ம தலைவன் வடிவேலுவே சொன்னா எப்படி இருக்கும்ங்குற சின்ன கற்பனையோட விளைவுதான் இந்த வீடியோ… ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தலைவன் வடிவேலு தன்னோட ஃபேமஸ் டயலாக்குகள் வழியாக பலன்கள் சொன்னா எப்படி இருக்கும்… வாங்க பார்க்கலாம்.
மேஷம்
அன்பான மேஷ ராசி நேயர்களே… உங்களுக்கான சனிப் பெயர்ச்சி பலனா தலைவன் என்ன சொல்றாருன்னா…
`பில்டிங் ஸ்ட்ராங்… பேஸ்மெண்ட் வீக்’ – தலைநகரம் டயலாக்.
ரிஷபம்
அன்பான ரிஷப ராசி நேயர்களே… உங்களுக்கான சனிப் பெயர்ச்சி பலனா தலைவன் என்ன சொல்றாருன்னா…
`நான் அடிச்ச மணி கடவுளுக்குக் கேட்டுச்சோ இல்லியோ… கவர்மெண்டுக்குக் கேட்டுடுச்சு… அடிச்சன் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர். துணி என்கிட்ட இருக்கு மணியை நீ வைச்சுக்கடா…’ – அரசு டயலாக்.
மிதுனம்
அன்பான மிதுன ராசி நேயர்களே… உங்களுக்கான சனிப் பெயர்ச்சி பலனா தலைவன் என்ன சொல்றாருன்னா…
`நாங்க போவோம்… இல்லைன்னா இங்கேயே மல்லாக்க விரிச்சுப் படுப்போம்’ – தவம் டயலாக்
கடகம்
அன்பான கடக ராசி நேயர்களே… உங்களுக்கான சனிப் பெயர்ச்சி பலனா தலைவன் என்ன சொல்றாருன்னா…
`என்னை வைச்சி காமெடி கீமெடி பண்ணலியே’ – தலைநகரம் டயலாக்.
சிம்மம்
அன்பான சிம்ம ராசி நேயர்களே… உங்களுக்கான சனிப் பெயர்ச்சி பலனா தலைவன் என்ன சொல்றாருன்னா…
`எங்களுக்கு ரிஸ்க் எடுக்குறதுலாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி…’ மருதமலை டயலாக்.
கன்னி
கடல்போல் கருணையுள்ளம் கொண்ட கன்னி ராசி நேயர்களே… உங்களுக்கான சனிப் பெயர்ச்சி பலனா தலைவன் என்ன சொல்றாருன்னா…
`இந்த ரணகளத்துலயும் உனக்கு கிளுகிளுப்பு கேக்குதுல்ல’
துலாம்
சூழ்நிலை அறிந்து அதற்கேற்றார்போல் செயல்படும் துலாம் ராசி நேயர்களே… உங்களுக்கான சனிப் பெயர்ச்சி பலனா தலைவன் என்ன சொல்றாருன்னா…
`அது போன மாசம்… இது இந்த மாசம்…!’ – வின்னர் டயலாக்
விருச்சிகம்
விடாப்பிடி, விழிப்புணர்வோடு செயல்படும் விருச்சிக ராசி நேயர்களே… உங்களுக்கான சனிப் பெயர்ச்சி பலனா தலைவன் என்ன சொல்றாருன்னா…
`பில்டப் பண்றோமோ… பீலா விடுறோமோ.. அது முக்கியம் இல்லை. நாம எது பண்ணாலும் இந்த உலகம் நம்மை உத்துப் பாக்கணும். நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணணும்’
தனுசு
சுயநலன் பார்க்காமல் பொதுநலனோடு செயல்படும் தனுசு ராசி நேயர்களே… உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும்னு தலைவன் சொல்றாருன்னா…
`எந்தவொரு விஷயமும் பிளான் பண்ணி பண்ணனும்… பிளான் பண்ணாமப் பண்ணா இப்படித்தான்’
மகரம்
மனம்போல் வாழவிரும்பும் மகர ராசி அன்பர்களே… உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும்னு தலைவன் சொல்றாருன்னா…
`மறுபடியும் தூபாய்க்கே போலாமா… இல்ல இந்த ஊர்லயே இருந்து ஓரஞ்சாரமா தொழில் பண்ணலாமா… மொத்தத்துல இந்த ஊர்ல இருக்கலாமா… வேணாமானு ஒரு வழியைக் காட்டித் தொலை… ஏன்னா எப்ப பார்த்தாலும் நம்மகிட்டயே வந்து ஒரு ராகுகாலம் வம்பிழுத்துட்டு இருக்கு. அப்படியே இந்த ஊர்ல இருந்தாலும் அந்த ராகுகாலத்தை சமாளிக்க முடியுமான்னு கேட்டுச் சொல்லு’ – வெற்றிக்கொடி கட்டு காமெடி டயலாக்.
Also Read – Rasi Temples: மீன ராசிக்காரர்கள் கட்டாயம் வழிபட வேண்டிய வைத்தியநாதர் ஆலயம்!
கும்பம்
நிதானமாகச் செயல்பட்டு நினைத்ததை முடிக்கும் கும்ப ராசி அன்பர்களே… உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும்னு தலைவன் சொல்றாருன்னா…
`நான் எதுக்குடா சரிப்பட்டு வரமாட்டேன்… தயவு செஞ்சு சொல்லுங்கடா…’
மீனம்
எந்த வலையிலிருந்தும் தன்னம்பிக்கையோடு மீண்டு வரும் மீன ராசி அன்பர்களே… உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும்னு தலைவன் சொல்றாருன்னா…
`இன்னுமா இந்த ஊர் நம்மளை நம்பிக்கிட்டு இருக்கு’
சனிப்பெயர்ச்சி பலன்கள் தலைவன் வடிவேலு ராசிபலன் பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க… அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!