அரசு விரைவுப் பேருந்து மூலம் பார்சல் சர்வீஸ் குறைந்த கட்டணத்தில் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அனுப்பும் வசதியை அறிவித்திருக்கிறது. விவசாயிகள் மற்றும் சிறு, குறு வியாபாரிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வெளியூர்களுக்கு அனுப்புவதற்கு லாரி, ஆம்னி பேருந்துகள் போன்றவைகள் மூலம் அனுப்பி வைப்பது வழக்கம். அவர்களுக்குப் பயன்படும் வகையில், அரசு விரைவு பேருந்துகளில் குறைந்த கட்டணத்தில் அனுப்பும் திட்டத்தை அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்திருக்கிறது.
பார்சலை அனுப்புவதற்காகப் பேருந்துகளில் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளை வார, மாத அல்லது தினசரி வாடகையைக் கொடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு அனுப்பப்படும் பார்சல் ஒரே நாளில் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெற நினைப்பவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பித்து பயனடையலாம். மாதாந்திர பாஸ் வசதியும் இருக்கிறது. பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 80 கிலோ எடை வரையிலான பொருட்களை அனுப்புவதற்கான தினசரி மற்றும் மாத கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜி.எஸ்.டி வரியும் தனியாக 18% விதிக்கப்படுகிறது.
எவ்வளவு கட்டணம்?
திருச்சி டு சென்னை – தினசரி கட்டணம் ரூ.210, மாதம் ரூ.6,300
ஓசூர் டு சென்னை – தினசரி ரூ.210, மாதம் ரூ.6,300
மதுரை டு சென்னை – தினசரி ரூ.300, மாதம் ரூ.9,000
கோவை டு சென்னை – தினசரி ரூ.330, மாதம் ரூ.9,900
சேலம் டு சென்னை – தினசரி ரூ.210, மாதம் ரூ.6,300
நெல்லை டு சென்னை – தினசரி ரூ.390, மாதம் ரூ.11,700
செங்கோட்டை டு சென்னை – தினசரி ரூ.390, மாதம் ரூ.11,700
நாகர்கோவில் டு சென்னை – தினசரி ரூ.420, மாதம் ரூ.12,600
கன்னியாகுமரி டு சென்னை – தினசரி ரூ.450, மாதம் ரூ.13,500
திண்டுக்கல் டு சென்னை – தினசரி ரூ.270, மாதம் ரூ.8,100
காரைக்குடி – சென்னை – தினசரி ரூ.270, மாதம் ரூ.8,100
நாகப்பட்டினம் டு சென்னை – தினசரி ரூ.240, மாதம் ரூ.7,200
முதற்கட்டமாக இந்த நகரங்களில் இருந்து பார்சல் அனுப்பும் வசதி, விரைவில் பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்திருக்கிறது. இதைப் பயன்படுத்தி விவசாயிகள், சிறு, குறு வியாபாரிகள் பயனடையலாம் என்று அரசு போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டிருக்கிறது.