சம்மரை ஹெல்தியா கடந்துபோக எக்ஸ்பர்ட்கள் கொடுக்குற டிப்ஸ்களைப் பத்திதான் இந்தக் கட்டுரைல நாம தெரிஞ்சுக்கப் போறோம்.
சம்மர்
சம்மர் என்பது இந்தியாவில் கடுமையானதாக இருக்கும். பல இடங்களில் மனிதர்களால் பொறுத்துக்கொள்ள முடியாத அளவில் வெயில் தகிக்கும். இதனாலேயே, கோடை காலங்களில் மதியம் 12 – 3 மணியளவில் வெளியில் செல்வதைத் தவிர்த்துவிடுமாறு அறிவுறுத்துவதுண்டு. இதுமாதிரி, நம்ம இந்த சம்மரை ஹெல்தியாக கடந்துபோக வல்லுநர்கள் சொல்ற 7 டிப்ஸ்கள் இதோ.
- சம்மருக்கு ஏற்றபடியாக உங்கள் உணவு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். நீர்ச்சத்து, ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகளை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளுங்கள்.
- போதுமான அளவு தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். சிலர் தினசரி மூன்றிலிருந்து நான்கு லிட்டர் அளவுக்குக் கூட நீர் அருந்துவார்கள். நீர்ச்சத்து உடலில் குறையாமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம். தர்பூசணி, ஆரஞ்சு, இளநீர், புதினா போன்ற உடலுக்குக் குளிர்ச்சி அளிப்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, எடுத்துக் கொள்ளுங்கள்.
- எலெக்ட்ரோலைட்ஸ் எனப்படும் பொட்டாசியம், சோடியம் உள்ளிட்டவைகளை உடலில் மெயிண்டெய்ன் செய்வது மூளையின் செயல்பாடு சீராக இருக்க அவசியம். சம்மரில் இவை உடலில் குறையும் வாய்ப்பு அதிகம் என்பதால், கவனம் தேவை.
- சம்மருக்கு ஏற்றபடி பருத்தி போன்ற மெல்லிய உடைகளை அணிந்து கொள்ளுங்கள்.
- வெயிலில் அதிக நேரம் வெளியில் சுற்றுவதைத் தவிர்த்துவிடுங்கள். அதிக நேரம் நேரடி சூரிய ஒளியில் இருந்தால், தோல் சம்மந்தமான நோய்கள் உங்களைத் தாக்கக் கூடும்.
- குறைந்த அளவு உணவை அடிக்கடி எடுத்துக் கொள்ளப் பழகுங்கள். ஒரே நேரத்தில் அதிகப்படியான உணவை எடுத்துக் கொள்வது, உடல் வெப்பநிலையை அதிகப்படுத்தும்.
- ஆரோக்கியமான தூக்கம் சம்மரில் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். அதேபோல், வெயில் அதிகமாக இருக்கும் இந்த சீசனில் ஆல்கஹால், காபின் போன்றவற்றை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.
Also Read –