திருமணங்களில் வித்தியாசமான மணப்பெண் என்ட்ரி பற்றிய வீடியோக்கள் அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் வைரலாவது உண்டு. அப்படி, உங்கள் வெட்டிங்கிலும் மணப்பெண் என்ட்ரி மாஸாக இருக்க சில ஐடியாக்கள்..!
டிரெண்டிங் Wedding
திருமணம் குறித்த மதிப்பீடுகளும் அவை நடத்தப்படும் முறைகளும் சமீபகாலமாக மாறிக்கொண்டே இருக்கின்றன. டெஸ்டினேஷன் வெட்டிங், இன்டிமேட் வெட்டிங் என திருமணங்கள் நடைபெறும் இடங்கள், அழைக்கப்படும் விருந்தினர்களை அடிப்படையாக வைத்து வெட்டிங் பிளான்களும் டிரெண்டுக்கு ஏற்றவாறு மாறி வருகின்றன. இந்த வரிசையில் முக்கியமானதாக மணப்பெண்ணின் என்ட்ரி பார்க்கப்படுகிறது. அப்படி டிரெண்டிங்கான மணப்பெண் என்ட்ரி பற்றி தெரிஞ்சுக்கலாமா..?
பூக்குடை என்ட்ரி (Phoolon ki Chadar)

மனப்பெண் என்ட்ரியில் ரொம்பவே பேமஸானது Phoolon ki Chadar என்று அழைக்கப்படும் பூக்குடை என்ட்ரி. செவ்வகமான குடை போன்ற அமைப்பை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நிலையில், நடுவில் மணப்பெண் நடந்துவரவே, அந்தக் குடையை நான்குபுறமும் நான்கு பேர் சுமந்து வருவார்கள். பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் திருமணத்தில்கூட அவரின் இந்த முறையிலேயே என்ட்ரி கொடுத்தார். எத்தனையோ லட்சம் முறை இந்த என்ட்ரி கொடுக்கப்பட்டிருந்தாலும், இதற்கென தனி மாஸ் எப்போதுமே இருக்கும் என்பதுதான் உண்மை.
பல்லக்கு (Pretty Palki)

இதுவும் ஒரு லெஜன்டரி என்ட்ரிதான். மூடப்பட்ட பல்லக்கு அல்லது பல்லக்கு போன்ற அமைப்பில் மணப்பெண்ணைத் தூக்கிக் கொண்டு வருவதுதான் Pretty Palki என்றழைக்கப்படும் முறை. அந்த காலத்து மகாராணிகள் போன்று மணப்பெண்ணை உணரவைக்கும் இந்த முறையும் ரொம்பவே பேமஸானது.
பட்டாசு பட்டாசு (Sizzling Fireworks)

இரவு நேரங்களில் நடக்கும் திருமணங்களுக்கு ஏற்ற மாஸான என்ட்ரி இது. இரண்டு புறமும் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் பட்டாசுகள் தெறிக்க மணப்பெண் மாஸான என்ட்ரி கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த என்ட்ரி Ageless ஸ்டைலை அளிக்கும்.
டான்ஸிங்

இந்த என்ட்ரியை நீங்க அடிக்கடி சோசியல் மீடியாக்களில் பார்த்திருக்க முடியும். டிரெண்டிங்கில் இருக்கும் ஒரு பாடல் பின்னணியில் ஒலிக்க திருமண மேடைக்கு செம ஸ்டைலிஷாக டான்ஸ் ஸ்டெப்ஸைப் போட்டபடியே மணமகள் என்ட்ரி கொடுப்பார்.
படகு

உங்கள் வெட்டிங் டெஸ்டினேஷன் ஆற்றுப் பகுதிக்கு அருகில் இருந்தால் இந்த ஐடியாவை நீங்க யூஸ் பண்ணிக்கலாம். மணமகள், தனது படை, பரிவாரங்களோடு படகில் என்ட்ரி கொடுப்பது மேஜிக்கல் மொமண்டாக இருக்கும். படகில் பட்டாசுகள், அலங்காரங்கள் இருக்கும்படி உங்க வெட்டிங் பிளானர்கிட்ட மறக்காம சொல்லிடுங்க..
விர்ரூம்ம்ம்…விர்ரூம்ம்ம்..!

மணப்பெண் ஒரு மாஸான கிளாசிக் பைக்ல திருமண மண்டபத்துக்குள்ள என்ட்ரி கொடுத்தா எப்படி இருக்கும். அப்படியான ஐடியாதான் இது. மணப்பெண்ணின் உடையலங்காரத்துக்கு ஏற்றபடியான கலரில் இருக்கும் ஒரு ரீமாடல் செய்யப்பட்ட புல்லட் போன்ற கிளாசிக் பைக்கில் மணப்பெண் என்ட்ரியை பிளான் பண்ணலாம். மணப்பெண்ணுக்கு பைக் ஓட்டத் தெரிந்திருப்பது அவசியம்.
க்யூட் கிட்ஸ்

அந்த காலம் தொட்டே பாரம்பரியமாகக் கடைபிடிக்கப்படும் என்ட்ரி இது. திருமணத்துக்கு வந்திருக்கும் க்யூட் கிட்ஸ் புடைசூழ மணப்பெண் மணமேடைக்கு வருவது உங்கள் திருமணத்துக்கு கிளாசிக் லுக் கொடுக்கும்.
இதுதவிர மணப்பெண் என்ட்ரிக்கு நீங்க வேற எதாவது ஐடியா வைச்சிருந்தா கமெண்ட்ல சொல்லுங்க..!