Don lee

பாத்ரூம் கிளீனர் டு ஹாலிவுட் ஆக்டர்… யார் இந்த டான் லீ?

பிரபாஸ் படத்துல நடிக்க கமிட் ஆகியிருக்குற சவுத் கொரியன் நடிகரான் டான் லீ பார்த்ரூம் கழுவுறது, டேபிள் கிளீன் பண்றதுல தொடங்கி பார்ல பாடி கார்ட் வேலை வரைக்கும் பார்த்துருக்காரு. அவரோட டிராவலே செம இன்ஸ்பிரேஷன். அவரோட டிராவலைப் பார்ப்போமா?

மார்ஷியல் ஆர்ட்ஸ் மேல சின்ன வயசுல இருந்தே அவருக்கு ரொம்ப ஆர்வம் அதிகம். அதைத் தொடர்ந்து பிராக்டிஸ் பண்ணிட்டு இருந்துருக்காரு. ராக்கினு பாக்ஸர் படம் ஒண்ணு இருக்கு. டான் லீ 15 வயசா இருக்கும்போது அந்தப் படத்தைப் பார்த்ததும் உடனே இன்ஃப்ளூயன்ஸ் ஆகுறாரு. இந்தப் படம் ஏற்படுத்துன தாக்கத்துல பாக்ஸர் பயிற்சியை ஆரம்பிக்கிறாரு. ஆனால் அவர் குடும்பம் பொருளாதார ரீதியில் ரொம்ப மோசமான சூழ்நிலைல இருந்துருக்கு. எந்த ஒரு மோசமான சூழ்நிலைலயும் குத்துச்சண்டை, மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி எடுக்குறதை அவர் விடவே இல்லை. அதுதான் அவருக்கு ரொம்ப உதவி பண்ணியிருக்கு.

சவுத் கொரியால வளர்ந்த டான்லீ தன்னோட டீனேஜ் பருவத்துல சூழ்நிலைக் காரணமாக அமெரிக்கா போறாரு. உறவினர்கள்கூட தங்குறாரு. அங்க அவரோட வாழ்க்கை அவ்வளவு சிறப்பா இல்லை. ரொம்பவே கஷ்டப்படுறாரு. பல வேலைகளை அமெரிக்கால பார்க்குறாரு. எக்ஸாம்பிள் சொல்லணும்னா… ஒரு கட்டடத்துல காவலாளியாவும் அங்க சுத்தம் பண்ற வேலையும் செய்துருக்காரு. சைனீஸ் ரெஸ்டாரண்டல டேபிள் துடைக்கிறது, மளிகைக் கடைல கணக்கு பார்க்குறது, பார் டெண்டர், துணிகளைப் போய் விக்கிறது, பால் பவுடர் வியாபரம் பண்றது, கிளப்ல பவுன்ஸர்னு ஏகப்பட்ட வேலைகளை செய்றாரு. இந்த வேலைகள் எல்லாம் அவர் பின்னாட்கள்ல கதாபாத்திரங்களை உள்வாங்க, கதைகளை புரிஞ்சுக்க உதவி பண்ணிருக்கு.

அமெரிக்காவுல அவரோட நாள்கள் போய்ட்டு இருக்கும்போது நடிக்கணும்ன்ற ஆசை வருது. அதுனால சரி, திரும்ப சவுத் கொரியாவுக்கே போய்டலாம்னு முடிவு பண்ணி வர்றாரு. இங்க வந்ததும் அவர் நினைச்ச மாதிரி எதுவும் அமையல. அவரோட உடம்பே அவருக்கு எதிரியா இருந்துருக்கு. பவுன்சர் மாதிரி உடம்பு இருக்குறதால அவர் போன ஆடிஷன் எல்லாத்துலயும் அவருக்கு நிராகரிப்பு மட்டும்தான் நடந்துச்சு. கடைசி ஒரு வழியா ஒரு படத்துல சின்ன ரோல் கிடைக்குது. அதுக்கும் கிரெடிட்லாம் இல்லை. நாடகங்கள்ல சின்ன சின்ன கதாபாத்திரங்கள்ல நடிக்கிறாரு. இப்படியே போகும்போதுதான் ஒரு பெரிய பிரேக் கிடைக்குது.

கொரியன் படங்கள்ல சின்ன ரோல்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமா பெரிய ரோல்கள் கிடைச்சு, முக்கிய கதாபாத்திரங்கள்ல நடிக்கத் தொடங்கினாரு. அப்பவுமே நிறைய போராட்டங்களை சந்திச்சுட்டு இருந்தாரு. நெய்பர் படம் அவர் கரியர்ல முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்திச்சு. சீரியல் கில்லர் கதை. அதன் பிறகு திரும்பவுன் கொஞ்சம் அவர் கரியர் டல்லாக மாறிச்சு. அந்த நேரத்துல அவரை உலகம் முழுக்க கொண்டு போய் சேர்த்தப் படம் ட்ரெயின் டு பூஸான். நம்மள்ல நிறைய பேருக்கு இவர் இந்தப் படம் வழியாகத்தான் அறிமுகமாகியிருப்பாரு. 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்ற முதல் கொரியன் படம்னு கொண்டாடுனாங்க. அதுமட்டுமில்ல, அந்தப் படத்துல உங்க ஃபேவரைட் யாருனு கேட்டா டான்லீயை தான் சொன்னாங்க. அவ்வளவு பெரிய ஹிட்டாச்சு.

ட்ரெயின் டு பூசான் இவருக்கு ஏகப்பட்ட கதைகளைக் கொண்டு வந்துச்சு. அதுல முக்கியமான இன்னொரு படம் எடர்னல். மார்வலோட மிகப்பெரிய டான் லீ. ட்ரெயின் படத்துக்கு அப்புறம் ஹாலிவு வாய்ப்புகளும் இவர தேடி வந்துச்சுன்னுதான் சொல்லணும். ஒருதடவை மார்வெல்லோட காஸ்டிங் டைரக்டர் சாரா ஃபின்னு சொல்ற ஒருத்தரை மீட் பண்ண வாய்ப்பு கிடைச்சுருக்கு. அவர்கிட்ட பேசும்போது இந்தப் படம் பத்தி இவர்ட சொல்லியிருக்காங்க. அப்படியே ஷும் ஃபோன்ல இவங்கலாம் பேசி அந்தப் படத்துல கமிட் ஆனாரு. அந்தப் படம் ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டும் ஆச்சு. அது இன்னொரு உயரத்துக்கு இவரைக் கூட்டிட்டுப் போச்சுன்னுதான் சொல்லணும். இன்னைக்கு சவுத் கொடியால சூப்பர் ஸ்டார். கரெக்ட்டா சொல்லணும்னா அவரோட ஃபேன் ஃபாலோயிங் பார்த்தோம்னா அஜித் குமார் லெவல். அவரோட கரியர் வளர்ச்சியைப் பார்த்தா விஜய் சேதுபதி மாதிரி.

வெல்கம் டு இந்தியன் சினிமா டான் லீ!

Also Read – ராஜமெளலி சார் நீங்களுமா… ஓல்டு ரெக்கார்டெல்லாம் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top