இயக்குநர், நடிகர் மாரிமுத்துவோட மரணம் எல்லாருக்குமே என்னை மாதிரியே உங்களுக்கும் ஷாக்கிங்காதான் இருந்திருக்கும். நினைச்சே பார்த்திருக்க மாட்டோம் மீம்ஸ்ல வந்த ஒருத்தர் திடீர்னு நியூஸ்ல வருவார்னு. பரியேறும் பெருமாள்ல கவனிக்க வச்சவர், எதிர்நீச்சல்ல டிரெண்டிங் ஸ்டாரா ஆனவர். ‘ஏம்மா ஏய்’ங்குற ஒரு வசனத்துல மாரிமுத்துவோட சினிமா ஜர்னியை சுருக்கிட முடியாது. அது 30 வருட பயணம்னு சொல்லலாம். யார் இந்த மாரிமுத்து? ஏன் அவர் ரொம்ப யுனிக்கான ஒரு ஆள்? மாரிமுத்துவோட லைஃப் நமக்கு சொல்ற செய்தி என்ன?
தேனில வருசநாடு பக்கத்துல சரியா ரோடு வசதிகூட இல்லாத ஒரு கிராமத்துல பிறந்தவர் மாரிமுத்து. 10 கி.மீ தள்ளிதான் ஸ்கூலே இருக்கும். ஊர்லயே அதிகமா படிச்சது மாரிமுத்துதான். அந்த ஊருல யாருக்காச்சும் லெட்டர் வந்துச்சுனா மாரிமுத்துகிட்டதான் குடுத்து படிக்கச் சொல்வாங்க. அப்படிப்பட்ட ஊர்ல இருந்து வந்து இன்ஜினியரிங் வரை படிச்சவர். ஆனால் சினிமால சேர்ந்து டைரக்டராகணும்ங்குற ஆசைல வீட்டுல எல்லாரையும் எதிர்த்து சென்னைக்கு கிளம்பிவர்றாரு. வைரமுத்து, ராஜ்கிரண், சீமான், வசந்த், எஸ்.ஜே.சூர்யா, சிம்பு வரைக்கும் பலர்கிட்ட அசிஸ்டெண்டாவும் கோ-டைரக்டராவும் இருந்தவர். கண்ணும் கண்ணும், புலிவால்னு இரண்டு படங்கள் டைரக்ட் பண்ணவர். கடைசியா குணசித்திர கதாபாத்திரங்கள்ல நடிக்க ஆரம்பிச்சாரு. வாலி படத்துல ஆரம்பிச்சு கடைசியா ஜெயிலர் படம் வரைக்கும் இவர் நடிப்புக்கு தனி ஃபேன்ஸ் வந்தாங்க. ஆனா நிறைய இளைஞர்கள் மத்தில பிரபலமாக்கினது எதிர்நீச்சல் சீரியல்தான்.
சினிமா தெரிஞ்ச நடிகர்கள் எப்போதுமே தமிழ் சினிமால கொடிகட்டிப் பறந்திருக்காங்க. அப்படி ஒருத்தர்தான் மாரிமுத்து. டயலாக் அசிஸ்டெண்ட்ல ஆரம்பிச்சு இயக்குநர் வரைக்கும் 30 வருடமா தமிழ் சினிமால ஒர்க் பண்ண ஒருத்தர். அந்த முதிர்ச்சி அவரோட நடிப்புல எப்பவுமே இருக்கும். பரியேறும் பெருமாள் கடைசி சீன்ல ‘எப்போ வேணாலும் எது வேணாலும் மாறிடலாம் இல்லைங்களா?’னு இயல்பான மொழில அவர் பேசுற வசனத்துல ஜாதியையும் விட்டுக்கொடுக்க முடியாம, பொண்ணையும் விட்டுக்கொடுக்க முடியாம தவிக்குற ஒரு அப்பாவோட குரலை அப்படியே ஃபீல் பண்ணலாம். கிடைக்கிற சின்ன வசனமா இருந்தாலும் அந்த கேரக்டர் எவ்வளவு ரக்கர்டா பேசும்னு தெரிஞ்சு அந்த மீட்டர்ல பேசுறதாலதான் இவர் கேரக்டர்ங்குறதைவிட மாரிமுத்துவே இப்படித்தான் பேசுவாருனு நினைக்க வச்சிடுவாரு. அப்படித்தான் எதிர்நீச்சல்ல ட்ரோன் வசனத்துக்கு எதிர்ப்புகள் வந்ததும், ஏம்மா ஏய்ங்குற வசனம் பிரபலம் ஆனதுக்கும் காரணம்னு சொல்லலாம். அதான் ஒரு கலைஞனா இவரோட வெற்றி. ஆனா இது மட்டுமே மாரிமுத்துனு நினைச்சுடக்கூடாது. தன் மனைவியை ‘பக்கத்துல வாடி’னு ஆசையா கூப்பிட்டு தோள்ல கையைப் போட்டு ஜாலியா பேசுற ‘ரியல்’ மாரிமுத்துவோட பேட்டியும் யூ-டியூப்ல இருக்கு. அதையும் பார்த்திடுங்க. மாரிமுத்து தீவிரமான வடிவேலு ரசிகர். அவரு ஒருத்தருக்குதாங்க நான் ஃபேன் அப்படினு சொல்வாராம். வடிவேலுவோட ஃபேமஸான கிணத்தைக் காணோம் காமெடி இவர் படத்தில் வந்ததுதான்.
Also Read – என்னடா கண்ணு கலங்குது.. இந்த சீன்ஸ்லாம் பார்த்தா அழுகை வராமல் இருக்குமா?!
நிஜத்துலயும் பல அதிரடியான கருத்துகளை சொல்லி விமர்சனத்துக்குள்ளாவாரு. கொஞ்சம் வயசாகிட்டாலே சின்ன பசங்க பண்ற எல்லா விசயத்துக்கும் எரிச்சல் ஆவாங்கள்ல. அப்படித்தான் 2கே கிட்ஸோட ஹேர் ஸ்டைல், டிரெஸ்ஸிங் சென்ஸ் பத்திலாம் அவர் பேசுனது. அதே சமயத்துல முற்போக்காவும் நிறைய கருத்துகள் சொல்வாரு. சமீபத்துல ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சில ஜோசியம், ஜாதகம் பத்திலாம் சொன்னதும் வைரல் ஆனது.
முதல் மரியாதை படத்தோட டைட்டில் கார்டுல சினிமா ஷூட்டிங் சம்பந்தமான விஷூவல்ஸ்லாம் வரும். அதைப் பார்த்து இம்ப்ரஸ் ஆகி சினிமாவுக்கு வேலைக்கு போகணும்னு தீர்மானிச்சவர் மாரிமுத்து. பாரதிராஜாகிட்ட அசிஸ்டெண்ட் ஆகணும்னு கிளம்பி சென்னைக்கு வர்றாரு நடக்கல. ராவான சினிமாக்கள் வந்துட்டு இருந்த 80’s ல மாடர்ன் சினிமா எடுக்கணும்னு நினைக்கிறாரு நடக்கல. சினிமாவுக்கு வந்து 15 வருசம் கிட்ட கஷ்டப்பட்ட பிறகுதான் முதல் படம் வாய்ப்பு கிடைக்குது. அதுவும் அவருக்கு பெரிய புகழ் வெளிச்சத்தைத் தரல. கொஞ்சம் கொஞ்சமா குணசித்திர வேடங்கள் கிடைச்சு முகம் தெரிய ஆரம்பிக்குறதுக்கே 25 வருசம் கிட்ட ஆகிடுது. ஆனாலும் பெரிய ரீச் ஆகல. கடைசியா குடும்பங்கள்கிட்ட ரீச் ஆகலாம்னு சீரியலை தேர்ந்தெடுப்பாரு. ஆனா ஆச்சர்யமா அந்த சீரியல்ல அவரைக் கொண்டாடுனது எல்லாமே 2கே கிட்ஸ். அவர் பேசுற ஒவ்வொரு வசனங்களும் இன்ஸ்டாகிராம்ல வைரல் ஆகிட்டு இருந்தது. இந்தாம்மா ஏய்னு ஒரு வசனத்துல மொத்த காலேஜ் ஸ்டூடன்ஸையும் பிடிச்சிட்டாரு. 80s ல ஆரம்பிச்ச ஜர்னி 30 வருசம் கழிச்சு 2K கிட்ஸ்கிட்டதான் அவருக்கான ரீச் கிடைச்சது. கடந்த ஒரு ஆறேழு மாசமாதான் இந்த புகழ் வெளிச்சம். அதுக்குள்ள இந்த மாதிரியான ஒரு முடிவு. நேத்து வரைக்கும் தமிழ்நாடு நவ் டீம்கிட்ட பேசிக்கிட்டு இருந்த ஒகொண்ட், காலைல 8 மணி வரைக்கும் டப்பிங் வேலைகள் பார்த்திட்டு இருந்திட்டு திடீர்னு அவரோட மரணம் நிகழுதுங்குறது தாங்க முடியாத ஷாக். யாருக்கு வேணாலும் எந்த நேரத்துல வேணும்னாலும் எது வேணாலும் நடக்கலாம்ங்குறதுக்கு அவரோட வாழ்க்கை ஒரு பாசிட்டிவ் உதாரணம்னா அவரோட மரணம் ஒரு நெகட்டிவ் உதாரணம்.