குக்கூ வித் கோமாளி… தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் தவிர்க்கமுடியாத ஒரு நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது. இதனை ரசிக்கிற பலருக்கும் இந்த நிகழ்ச்சி எப்படி உருவாச்சுக்கிற கதை தெரிஞ்சிருக்கிறதுக்கு வாய்ப்பு இல்லை.
விஜய் டிவியைப் பொறுத்தவரை அதன் வளர்ச்சிக்கு சில நிகழ்ச்சிகள் மிக முக்கிய பொறுப்பாற்றி இருக்கின்றன. நடனத்திற்கு ஜோடி நம்பர் ஒன், பாடலுக்கு சூப்பர் சிங்கர், காமெடிக்கு கலக்கப்போவது யாரு, டாக் ஷோவுக்கு நீயா நானா என இந்த வரிசையில் சமையலுக்காகவும் விஜய் டிவி பல நிகழ்ச்சிகளை செய்திருக்கிறது. அதெல்லாம் என்ன என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
சரியாக 10 வருடங்களுக்கு முன்பு கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ் என்கிற நிகழ்ச்சி மூலம்தான் ஆரம்பித்தது இந்தப் பயணம். 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நான்கு சீசன்களாக நடந்தது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நடிகர் சுரேஷும் நடுவர்களாக செஃப் தாமு மற்று செஃப் வெங்கடேஷ் பட் இருந்தனர். இது ஒரு சீரியஸான சமையல் நிகழ்ச்சியாகவே இருந்தது. ஒவ்வொரு சீசனுக்கும் 10 ஜோடி போட்டியாளர்கள் இருப்பார்கள். 2016 ஆம் ஆண்டு வரை ஒளிப்பரப்பான இந்த நிகழ்ச்சியின் ஃபார்மெட்டை அதன் பிறகு மாற்றினார்கள்.
சமையல் சமையல் வித் வெங்கடேஷ் பட் என செஃப் வெங்கடேஷ் பட்டை மட்டும் மையமாக வைத்து அடுத்த நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள். வெங்கடேஷ் பட்டை வைத்து இரண்டு சீசன் அவர் இல்லாமல் ஒரு சீசன் என மொத்தம் 3 சீசன்கள் நடந்தது. 2014 ஆம் ஆண்டு 143 எபிசோடுகள், 2017-ல் 32 எபிசோடுகள், 2018-ல் 14 எபிசோடுகள் என குறைந்து கொண்டே வந்ததை வைத்தே இந்த நிகழ்ச்சியின் ரீச்சை நாமே தெரிந்துகொள்ள முடியும். ஆனால், இந்த நிகழ்ச்சி கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியைப் போல் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் என்ன என்ன சமைக்கிறார்கள்; அதில் என்ன என்ன உணவுப்பொருட்களை எந்த அளவு பயன்படுத்துகிறார்கள் என அனைத்தையும் மக்களுக்குக் காட்டுவார்கள். அதைப் பார்க்கும் பார்வையாளர்களும் அதை பின்பற்றி சமைக்க முடியும்.
2018 ஆம் ஆண்டு குக்கூ வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அடித்தளம் போடப்பட்டது. அதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது சாய் சக்திதான். அவர் பங்கேற்ற 2016 ஆம் ஆண்டின் கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் அவர் சீரியஸான செய்த காமெடிகளை எல்லாம் நல்ல, நல்ல காமெடி பன்சுகள் போட்டு ஒரு ப்ளூப்பராக போட்டார்கள். அது கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து 2018 ஆம் ஆண்டு ஃபேஸ்புக்கில் வைரலானது. அதை கவனித்த விஜய் டிவி, அதில் இருந்து உருவாக்கிய புது ஐடியாதான் குக்கூ வித் கோமாளி.
2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குக்கூ வித் கோமாளி நிகழ்ச்சி முதல் சீசனில் 27 எபிசோடுகள், இரண்டாவது சீசனில் 41 எபிசோடுகள் தற்போது நடந்து வரும் மூன்றாவது சீசனில் இன்னும் 7 போட்டியாளர் நிகழ்ச்சியில் இருக்கிற நிலையிலேயே 38 எபிசோடுகள் எடுத்திருக்கிறார்கள். எப்படியும் இந்த சீசனிம் 60 எபிசோடுகளை தாண்டுவார்கள் என்றே தோன்றுகிறது. இப்படி ஒவ்வொரு சீசனுக்கும் எபிசோடுகள் அதிகரிப்பதை வைத்தே இந்த நிகழ்ச்சியின் வெற்றியை நம்மால் பார்க்க முடியும்.
இதில் கூடுதல் சிறப்பு என்ன என்றால் ஆரம்பத்தில் இருந்தே இந்த சமையல் நிகழ்ச்சிகளை எல்லாம் விஜய் டிவிக்காக எடுத்துக் கொடுப்பவர்கள் மீடியா மேசன் நிறுவனம்தான். விஜய் டி.வியின் ஸ்டார் ஷோவான சூப்பர் சிங்கரை உருவாக்கும் டீம்தான் இவர்கள். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் இயக்கியவர் பார்த்திபன் என்ற ஒரே இயக்குநர்தான்.
[zombify_post]
Fabulous, wwhat a blo itt is! This blog gives usefuul facts tto us, kedp it up.
Prstty nice post. I simoly stumbled upoin your blog andd wished to say that I
haave really ennoyed browsing your weblog posts.
After all I’ll be subscribinng onn your feed andd I’m hopinbg youu write omce
mlre soon!