harassment

`ஆன்லைன் கிளாஸுக்கு டவலோடு வந்தார்!’ பாலியல் தொல்லை புகாரில் சென்னை பள்ளி ஆசிரியர்

சென்னை கே.கே.நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஆசிரியர் ஆன்லைன் கிளாஸில் பாலியல் தொல்லை கொடுக்கும் நோக்கில் செயல்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.

கே.கே.நகரில் இருக்கும் தனியார் பள்ளி வணிகவியல் ஆசிரியர் மீது இந்த அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை மாணவர்கள் முன்வைத்திருக்கிறார்கள். தற்போதைய மாணவர்கள் மட்டுமல்லாது, முன்னாள் மாணவர்கள் பலரும் சோஷியல் மீடியா மூலமாக புகார்களை அடுக்கியிருக்கிறார்கள். மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கும் நோக்கில் அவர் பேசுகிறார் என்பதே அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு.

Harassment

இதுதொடர்பாக அந்தப் பள்ளி முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து குறிப்பிட்ட ஆசிரியர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டீனுக்குக் கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார்கள். அந்தக் கடிதத்தில், `பள்ளியில் வகுப்பின்போது மாணவிகளை முறையற்ற வகையில் தொடுவதை அந்த ஆசிரியர் வழக்கமாக வைத்திருந்தார். அத்தோடு, மாணவிகளிடம் பொருத்தமற்ற கேள்விகளையும் கேட்டு தொல்லை கொடுக்கிறார். மாணவிகள் உடலமைப்பு குறித்து கமெண்ட் அடிப்பதும், அவர்களின் கேரக்டர் குறித்து மொத்த வகுப்பு முன்னிலையிலும் பேசுவதும் அவர் செய்யும் வழக்கமான தொல்லைகள்’’ என்று குற்றம்சாட்டியிருக்கிறார்கள். அதேபோல், ஆன்லைன் கிளாஸ் ஒன்றின்போது டவலை மட்டுமே அணிந்துகொண்டு அந்த ஆசிரியர் வந்ததாகவும் முன்னாள் மாணவர்கள் அந்தக் கடிதத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.

Teacher

மேலும், மாணவிகளின் வாட்ஸப் புரஃபைல் படங்களைக் குறிப்பிட்ட மாணவிகளுக்கே அனுப்பி அதுகுறித்து கமெண்ட் அடித்து வருவதாகவும் புகார்க் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து குறிப்பிட்ட ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தி.மு.க எம்.பி கனிமொழி வலியுறுத்தியிருக்கிறார்.

Also Read – இந்த அறிகுறிகள் இருந்தா பிரேக்கப் ஆகப்போதுனு அர்த்தம்… செக் பண்ணிக்கோங்க!

1 thought on “`ஆன்லைன் கிளாஸுக்கு டவலோடு வந்தார்!’ பாலியல் தொல்லை புகாரில் சென்னை பள்ளி ஆசிரியர்”

  1. Howdy, i read your blog from time to time and i own a similar one and i was just curious if you get a lot of spam feedback? If so how do you reduce it, any plugin or anything you can recommend? I get so much lately it’s driving me crazy so any assistance is very much appreciated.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top