சின்ன சின்ன வண்ணக்குயில்.. சூப்பர் சிங்கர் பிரியங்காவின் இசை ஜர்னி!

ஒருத்தர் ஒரு அளவுக்கு ஸ்வீட்டா பாடலாம் ஆனா ஏக்கர் கணக்குல ஸ்வீட்டா பாடுன எப்படி? 13 வருஷத்துக்கு முன்னாடி சூப்பர் சிங்கர் ஜூனியர்ல ஆரம்பமான பயணம் ஜப்பான் வரை இப்போ பிரியங்கா ஃபேமஸ். மன்னவன் பேரைச் சொல்லி அப்படின்னு பாட்டு எங்க கேட்டாலும் நமக்கு மௌன ராகம் படம் ஞாபகத்துக்கு வருதோ இல்லையோ இவங்க ஞாபகம் வந்திடும்.

தமிழச்சி தங்க பாண்டியன் லிரிக் எழுதின பாடலை பாடி இருக்காங்க, Times Of India-ல அவார்ட் வாங்கி இருக்காங்க. இதெல்லாம் பிரியங்காவுக்கு எப்படி சாத்தியமாச்சு? இவங்க இசைப்பயணத்தை பத்தி தான் இந்த வீடியோல பார்க்கப் போறோம்.

Priyanka
Priyanka

13 வருஷத்துக்கு முன்னாடி சூப்பர் சிங்கர் ஜூனியர் 2-ல SSJ 21 பிரியங்காவா விஜய் டிவி -க்கு அறிமுகம் ஆனாங்க. இப்போ ரஹ்மான் இசையில் 3 மொழியில் பாடும் ஒரு பாடகியாக மாறி இருக்காங்க. இதெல்லாம் இல்லாம பிரியங்கா ஒரு டென்டிஸ்ட், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், விளம்பர தூதரும் கூட. பிரியங்காவோட அம்மா காஞ்சனா ஒரு பாடகி, அவங்க அப்பா நல்ல தம்பி ஒரு மியூசிக் காம்போசர் அப்படிங்குறதால, Western Classical &  Hindustani classical மியூசிக்-ல பிரியங்கா ஒரு ப்ரோ.  எனக்கு இளையராஜா, ரஹ்மான் சார் மியூசிக்ல பாடனும்னு ஆசைனு அவங்க நினைச்சது இன்னைக்கு நடந்துருக்கு.

2017ல விஜய் டிவி அவார்ட்ஸ்ல Favorite Female singer அவார்ட்டை கையில வாங்கிட்டு, மன்னவன் பேரைச் சொல்லின்னு பாட ஆரம்பிச்சாவங்க இன்னைக்கு வரை எந்த மேடைக்கு போனாலும் அந்த பாட்டை பாடமா இறங்குறது இல்லை. அங்க தான் பிரியங்காவிற்கு ஒரு பிரேக் கிடைக்குது. டி .இமான் கையில அவார்ட் வாங்கிய உடனே அவர் மியூசிக்ல பாடவும் வாய்ப்பு கிடைக்குது. அதுக்கு பிறகு பிரியங்காவிற்கு எல்லாமே நல்ல நேரம் தான்.

அடுத்து அடுத்து தமிழ் படங்களில் பாடும் வாய்ப்பு பிரியங்காவிற்கு அமையுது. இளையராஜா மியூசிக்ல பாடனும்னு ஆசைப்பட்ட பிரியகாவிற்கு நாச்சியார் படத்தில் பாடும் சான்ஸ் கிடைச்சு போறாங்க. அங்க அதை விட அதிசயம் ஒன்னு நடக்குது. பாட போறது ராஜா மியூசிக்ல கூட பாடுறது மியூசிக் டைரக்டர் ஜி.பி பிரகாஷ், படத்தோட இயக்குநர் பாலா சார், அந்த பாடலை எழுதியவர் தமிழச்சி தங்க பாண்டியன் அவர்கள். ‘உன்னை விட்டா யாருமில்லை’ அப்படிங்குற பாட்டு தான் அது. அவங்க ஜர்னில இது முக்கியமான ஒரு பாடலாகவும் இருந்துச்சு.

Priyanka
Priyanka

ஏ.ஆர். ரஹ்மானுக்கு Background Vocals பாடிட்டு இருந்த பிரியங்காவுக்கு அடிச்ச பெரிய ஜாக்பாட் Mom படத்தில் வர பூங்காற்றே யார் அழைத்தார் பாடலை 3 மொழிகளில் பிரியங்கா தான் பாடி இருப்பாங்க.  யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பலூன் படத்தில் வர உயிரிலே உயிரிலே பாடலை விஜய் யேசுதாஸ் கூட பாடி கொடுத்து இருக்காங்க.

சூப்பர் சிங்கர்ல பாடும்போதே எஸ்.பி.பி, பி. சுசீலா, ஜானகி, எம்.எஸ்.வினு பல புகழ் பெற்ற பாடகர்களின் முன்னிலையில் பாடி பாராட்டும் வாங்கி இருக்காங்க. அதெல்லாம் தான் எனக்கு கிடைச்ச பெரிய பரிசுனு சொல்றாங்க. இப்படி முன்னணி இசையமைப்பாளர்கள் கூட ஒர்க் பண்ணிட்டு இருக்க பிரியங்காவிற்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூட படத்துல பாடனும்னு ரொம்ப ஆசையாம், அது நடக்கலனாலும் அவரோட மேடை நிகழ்ச்சியில் பாடியதே ரொம்ப பெருமையா இருக்குன்னு சொல்லி இருக்காங்க. பிரியங்காவிற்கு ஹிந்தி பாடகர் அர்ஜித் சிங் கூட பாடனும்னு இன்னொரு ஆசையும் இருக்காம். 

Also Read – இங்கிலீஷ் நியூஸ் ரீடர் டூ சீரியல் நடிகை – `பாக்கியலக்ஷ்மி’ ரேஷ்மா ஜர்னி!

இதெல்லாம் பண்ணிகிட்டே டென்டிஸ்ட்டாவும் இருக்காங்க. Intel கம்பெனியோட விளம்பர தூதகராகவும் ஒர்க் பண்ணிட்டு இருக்காங்க. எப்படி சமாளிக்கிறீங்கனு கேட்டா… பார்த்தாலே தெரியலையா பாருங்க எவ்ளோ ஒல்லியா இருக்கேன்னு காமெடி பண்றாங்க. ஏன்னா பிரியங்கா கிட்ட எல்லாரும் கேக்குற இன்னொரு கேள்வி இது தான் எப்படி எவ்ளோ ஒல்லியான உடம்புல இருந்து இப்படி ஒரு குரல் கேக்குதுன்னு கேள்வி கேட்டா…அட குரலுக்கு உருவத்துக்கும் என்ன சம்மந்தம். குரல் ஒலி தொண்டையில இருந்து வருது. அதுக்கும் இதுக்கும் ஒரு கனெக்டும் இல்லைனு ஜாலியா பதில் சொல்லிட்டு அசால்ட்டாக பேசுறாங்க. 

சரி இன்னும் என்ன இருக்கு அதன் எல்லா ஆசையும் நிறைவேறிடுச்சேனு கேட்டா. இன்னும் இசையில் சாதிக்க நிறைய இருக்குன்னு பதில் வருது.  ரிசெண்ட்டா நடந்த யுவன் ஷங்கர் ராஜா மியூசிக் கான்சர்ட்லயும் பாடியாச்சு. இதுல பாடிய பிறகு, ‘ஏதோ நேத்து தான் ஸ்கூல்ல இருந்து திரும்ப வந்தா மாதிரி இருக்கு, அதுக்குள்ள யுவன் சார் மியூசிக் கான்சர்ட்ல பாடும் வாய்ப்பெல்லாம் கிடைச்சு இருக்கு Blessed தான் நானு’ -னு அவங்க அனுபவத்தை ஷேர் பண்ணி இருக்காங்க. 

இன்னுமொரு தரமான சம்பவம் பண்ணி இருக்காங்க. விக்ரம் படத்தோட 50-வது நாள் வெற்றி விழாவில் கமல் சாரோட பாடல்களை ஒன்று சேர்த்து அவர் முன்னடி ஒரு Medly Performance கொடுத்து அசத்திட்டாங்க பிரியங்கா. 

சினிமா பாடல்கள் இல்லாம RMKV-யின் ஒரு புடவை விளம்பரத்திற்கு பாட்டு பாடியாச்சு. Times Of India-வில் Upcoming Female Vocalist of the Year Award 2021 அவார்டும் வாங்கிட்டாங்க. ஒரு நிகழ்ச்சிக்காக வெளி நாடு போன சமயத்துல அங்க இருந்த 2 ஜப்பான் ஜோடிகள் இவங்க பாடிய சின்ன சின்ன வண்ணக்குயில் பாடலை பார்த்து இருக்கோம், ரொம்ப நல்லா பாடுறீங்கன்னு வாழ்த்தி இருக்காங்க. பிரியங்காவுக்கு அது இப்போ வரை மறக்க முடியாத சம்பவம். 

ரிசெண்ட்டா அவங்க பாடிய வத்திக்குச்சி ஒரு நிமிட பாட்டு இன்ஸ்டாவில் வைரல் ஆச்சு. பிரியங்கா ஆசைப்பட்டது போலவே அவங்க இசைப்பயணத்தில் இன்னும் பல உச்சத்தை அடைவதற்கான எல்லா அம்சமும் அவங்ககிட்ட இருக்கு. உங்களுக்கு பிரியங்காவோட எந்த பாட்டு மனசுக்கு ரொம்ப நெருக்காமனதுன்னு கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top