என்னது… தமிழ் சினிமாவில் அறிவாளிகளுக்கு பஞ்சமா? நிச்சயம் கிடையாது. இதை நிரூபிக்க ஏகப்பட்ட படங்கள் வந்திருக்கு. கோலிவுட் இயக்குநர்கள் அவ்வளவு கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்காங்க. குறிப்பா, சயின்டிஸ்ட் கதாபாத்திரங்கள். சின்ன பையனா இருக்குற ஹீரோவ ஒரே நைட்ல பெரியவனா ஆக்குறதுல இருந்து ஹியூமன் ரோபோவ உருவாக்குறது வரை நம்ம இயக்குநர்கள் பண்ணாத வேலையே கிடையாது. அப்படி கோலிவுட் இயக்குநர்கள் உருவாக்கிய சயின்டிஸ்ட்கள் கதாபாத்திரங்களைப் பற்றிதான் இந்த வீடியோல நாம தெரிஞ்சுக்கப்போறோம்.
ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு தமிழ் படம்… அதாங்க, எந்திரன். இன்னைக்கு வரைக்கும் இந்தப் படத்தை அடிச்சுக்க தமிழ் சினிமால ஆள் வரலை. ஏன், ஷங்கராலயே இந்த மாதிரி இன்னொருப் படத்தை எடுக்க முடியல இதுவரை. இந்தப் படத்துல வர்ற சயிண்டிஸ்ட்தான் வசீகரன். ஹியூமன் ரோபோக்களை உருவாக்கணும்னு உலக அளவுல பேச்சுகள் இன்னைக்கு வரைக்கும் இருந்துட்டு இருக்கு. இதை, ஹாலிவுட் சினிமாக்களில் பலரும் சாத்தியப்படுத்தியிருக்காங்க. ஆனால், அந்த ரோபோவுக்கு காதல், கோபம், நட்பு மற்றும் உறவு சார்ந்த எல்லா உணர்ச்சிகளையும் கொடுக்கணும்னு நினைச்சது நம்ம வசீகரன்தான். அதுக்காகவே, வசீக்கு பல கிளாப்ஸ்களை கொடுக்கலாம். இந்த மாதிரி சயிண்டிஸ்ட் கிடைச்சதுலாம் தமிழ்நாட்டுக்கு பெருமை தானுங்க.
எல்லாக்கூட்டத்துலயும் ஒரு படிக்கிற புள்ள இருக்கும்ல. அந்தப் புள்ள ரொம்பப்படிச்சா சயின்டிஸ்ட் ஆயிடும். அப்படியான கேரக்டர்தான் 24 படத்துல வர்ற டாக்டர்.சேதுராமன். பொதுவா தமிழ் சினிமா ஹீரோக்கள் என்ன புரொஃபஷன்ல இருந்தாலும் குங்பூ, கராத்தே எல்லாம் கத்து வைச்சிட்டு அடியாள்களல எதிர்பார்த்து அடிச்சு பொளக்க காத்திருப்பாங்க. ஆனால், சேதுராமன் அப்படி இல்லை. ரொம்பவே அமைதியான ஆளு. தான் உண்டு, தன் வேலை உண்டுனு இருக்குற ஆளு. அதனாலதான், டைம் மிஷன பெருசு பெருசா டப்பா சைஸில் சினிமாக்களில் சயிண்டிஸ்ட் கண்டுபுடிச்சிட்டு இருந்த சமயத்தில் சின்னதா வாட்ச் சைஸ்ல ஒரு டைம் மெஷின கண்டுபிடிச்சாரு. அதுக்காகவே மனுஷனுக்கு ஆஸ்கரே கொடுக்கலாம்.
எல்லாப் படத்துலயும் ஹீரோதான சயிண்டிஸ்டா வருவாங்க. ஆனால், இன்று நேற்று நாளை படத்துல ஹீரோ சயிண்டிஸ்ட் கிடையாது. கொஞ்சம் நேரம் வந்துட்டுப் போற ஆர்யாவும் பொன்புதிர்கூட்டம் கிரிதர பார்த்தசாரதியும்தான் இந்தப் படத்துல சயிண்டிஸ்ட். அதாங்க, பழம். ஆர்யாவைப் பத்தி இந்தப் படத்துல பேச அவ்வளவு விஷயங்கள் இல்லை. ஆனால், பழத்தைப் பற்றி பேச கொஞ்சம் விஷயங்கள் இருக்கு. பொதுவா சயிண்டிஸ்ட்னாலே மிகப்பெரிய பளபளக்கும் கண்ணாடிகள் நிறைஞ்ச கட்டடங்கள்ல இருந்து கம்ப்யூட்டரை நோண்டிக்கிட்டு ஃபார்முலாக்களையெல்லாம் ட்ரை பண்ணிட்டு இருப்பாங்க. ஆனால், நம்ம ஆளு மிக்ஸி, கிரைண்டர்லாம் ரிப்பேர் பண்ணிக்கிட்டு… புதுசா கண்டுபுடிச்ச கார்ல போய் போலீஸ்ட்ட மாட்டிக்கிட்டு அதகளம் பண்ணிக்கிட்டு இருப்பாரு. இப்படி ஒரு காமெடியான சயிண்டிஸ்ட தமிழ் சினிமா இப்போதான் முதன்முறையா பார்க்குதுனே சொல்லலாம். இந்த லிஸ்டில் என்னோட ஃபேவரைட் சயிண்டிஸ்ட் நம்ம பார்த்தசாரதி என்கிற பழம்தான்.
கூடுவிட்டு கூடு பாயுறதுலாம் பேய் படங்கள்லயும் சாமி படங்கள்லயும்தான நடக்கும். ஆனால், அதை சயின்ஸா மாத்தி எடுக்கப்பட்ட படம்தான் சின்ன வாத்தியார். பிரபு இரட்டை வேடங்களில் நடிச்சு அசத்தியிருப்பார். வாத்தியாரா வர்ற சந்திரமௌலி கேரக்டர பிரபுவைத் தவிர வேற யாராலையும் நடிச்சிருக்க முடியாது. ஆனால், என்ன ரொம்பவே கிளீஷேவான சயிண்டிஸ்டாதான் சந்திரமௌலி இதுல இருப்பாரு. ஃபேமிலியை அவாய்ட் பண்ணிக்கிட்டு, அந்த கூடுவிட்டு கூடு பாய்வதற்கான மருந்தை பாட்டிலில் மாத்தி மாத்தி ஊத்தி டெஸ்ட் பண்ணிக்கிட்டு இருப்பாரு. இருந்தாலும், இந்த சினிமா வந்த புதிதில் ரொம்பவ்ற் ஃப்ரெஷான் கான்செப்ட் (அட நம்புங்க) என்பதாலும் நகைச்சுவைக் காட்சிகள் நிறைந்து இருந்ததாலும் இதனை மக்கள் ஏத்துக்கிட்டாங்க. படத்தைக் குறை சொல்லல… ஆனால், சயின்ஸ் படம்னு சொல்லிட்டு கூடுவிட்டு கூடு பாயுற கான்செப்ட்லாம் கொஞ்சம் ஓவர்ல!
இந்தக் காதாபாத்திரத்தைப் பற்றி பார்க்குறதுக்கு முன்னாடி, உங்கக்கிட்ட ஒரு கேள்வி, உங்களுக்கு டைம் மெஷின் கிடைச்சா என்ன பண்ணுவீங்க?
Also Read: Comedy Villains: `இப்படியும் வில்லத்தனம் பண்ணலாம்’ – தமிழ் சினிமாவைக் கலக்கிய காமெடி வில்லன்கள்!
குளோனிங் பண்றதை முதல்முதல்ல அறிமுகப்படுத்துனது வியாபாரி திரைப்படம்னே சொல்லலாம். எஸ்.ஜே.சூர்யா இந்த இரண்டு கதாபாத்திரங்களையும் ரொம்பவே அழகா கையாண்டிருப்பார். நாஸர்தான் இதுல சயிண்டிஸ்டா நடிச்சிருப்பாரு. தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக கையாள்றதுல நாஸர் கில்லி. அந்த வகையில், இந்தக் கதாபாத்திரத்தையும் ரொம்பவே சிறப்பா பண்ணியிருப்பார்.
சூர்யா நடிப்பில் வெளியான இன்னொரு திரைப்படம், 7ஆம் அறிவு. இதுவரைக்கும் நாம ஆண் சயிண்டிஸ்ட்தான பார்த்தோம். இப்போ பார்க்கப்போறது பெண் சயிண்டிஸ்ட். அந்த பெண் சயிண்டிஸ்ட் வேற யாரும் இல்ல… நம்ம ஸ்ருதி ஹாசன்தான். இளம் விஞ்ஞானியாக இந்தப் படத்தில் நடிச்சிருப்பாங்க. சூர்யாவுக்கு டி.என்.ஏ-வைத் தூண்டிவிட முயற்சி எடுப்பது, டாங்லியிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றும் சூர்யாவுக்கு உதவி செய்வது, தமிழ் பண்பாட்டுக்காக விஞ்ஞானிகள் கூட்டத்தில் குரல் கொடுப்பது என பல வேலைகளையும் கச்சிதமாக செய்திருப்பாங்க. ஸ்ருதி ஹாசனப் பார்க்கும்போதுலாம் தோணும், இன்னும் நிறைய அழகான பெண் சயிண்டிஸ்ட்களை தமிழ் சினிமா உருவாக்கலாம்ல.
எப்படி இந்த மனுஷனுக்கு மட்டும் நடக்குறதுலாம் முன்னாடியே தெரியுதுனு இன்னும் தெரியல. வேற யாரு… உலக நாயகன் கமல்ஹாசன்தான். கோவிந்த் ராமசாமி எனும் உயிரிதொழில்நுட்ப அறிவியலாளராகவும் இப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பத்து வேடங்களில் கலக்கிய உலக நாயகனுக்கு விஞ்ஞானியாக நடிப்பதுலாம் பக்கோடா சாப்பிடும் விஷயம்தான்.
எஸ்.பாலசந்தர் இயக்கத்தில் 1954-ல் வெளியான படம், அந்தநாள். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் நடக்கும் திரைப்படம். சிவாஜி கணேசன் இந்தப் படத்தில் ரேடியோ இன்ஜினீயராக நடித்திருப்பார். சிவாஜி கணேசனின் மரணத்தைச் சுற்றிதான் இந்தப் படத்தின் கதை நகரும். சிறந்த க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லராகவும் இந்தப்படம் இருக்கும். ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் ரேடியோவை விற்க முயற்சி செய்வார். அதற்கு அரசாங்கம் உதவி செய்யாது என்பதால் இந்தியா தொடர்பான ரகசியங்களை ஜப்பானுக்கு விற்க முயற்சி செய்யும் கேரக்டரில் சிவாஜி பின்னி பெடலெடுத்திருப்பார்.
நாளை மனிதன் படத்துல ஜெய்சங்கர்தான் சயின்டிஸ்டா நடிச்சிருப்பாரு. அந்தக் காலத்துலயே இந்தப் படத்துக்கு சீக்குவல்லாம் எடுத்தாங்க. சோ கால்ட் சயின்டிஸ்ட் என்ன பண்ணுவாங்களோ அதைத்தான் ஜெய்சங்கர் பண்ணிட்டு இருப்பாரு. கொஞ்சம் பில்டப்லாம் ஓவராவே இருக்கும். ஏன், நோபல் பரிசுலாம் வாங்குவாருனா பார்த்துக்கோங்களே. பிணத்துக்கு உயிர் கொடுக்குற மருந்தைக் கண்டுபிடிக்கிற ஜெய்சங்கர், கற்பனைக்கே எட்டாத மகத்தான ஆராய்ச்சில ஈடுப்பட்டுருக்குறதா தனக்குத்தானே புகழாரம் சூட்டிக்கொள்வாருனா பார்த்துக்கோங்க. இந்தப் படம் வரலைனா இப்படி ஒரு சயின்டிஸ்ட தமிழ் சினிமா நிச்சயம் மிஸ் பண்ணியிருக்கும். அண்ட் தி நோபல் பரிசு கோஸ் டு `நாளை மனிதன்’ ஜெய்சங்கர்.
நியூ திரைப்படத்தில் மணிவண்ணன் சயிண்டிஸ்டா நடிச்சிருப்பாரு. உண்மையிலேயே கொஞ்சம் வித்தியாசமான கிளுகிளுப்பான கண்டுபிடிப்புனா இவர் கண்டுபிடிப்புதான். எட்டு வயசு சிறுவன் 28 வயசு இளைஞரா மாறுற மருந்தைக் கண்டுபிடிப்பாரு மணிவண்ணன். அப்புறம் அந்த சிறுவனோட வாழ்க்கையில் என்னலாம் மாற்றங்கள் வரும், எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும்னு படமாவே எடுத்துட்டாங்கனா பார்த்துக்கோங்க.
இந்த லிஸ்டில் நாங்க மிஸ் பண்ண சயின்டிஸ்ட்களை மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க.
Also Read: `டார்லிங்’ பானுப்ரியா- தமிழ் சினிமாவின் ஆல்ரவுண்டர் ஹீரோயினா ஏன் கொண்டாடப்படுறாங்க… 4 காரணங்கள்!
Hello there! Do you know if they make any plugins to assist with SEO?
I’m trying to get my blog to rank for some targeted keywords but
I’m not seeing very good success. If you know of any please share.
Many thanks! I saw similar text here: Eco wool