தமிழ் சினிமாவில் ஸ்டார் கிட்ஸுக்கு பஞ்சமேயில்லைனு சொல்லலாம். இரண்டாம் தலைமுறை நடிகர்கள், மூன்றாம் தலைமுறை நடிகர்கள்னு தொடர்ந்து நடிச்சிட்டு வர நடிகர்களும் இருக்காங்க. அப்படி ஸ்டார் கிட்ஸா பெரிய ஓப்பனிங் கிடைத்தவர்களில் சிலர் அதை சரியா பயன்படுத்த முடியாமல் அவங்க கெரியரில் தடுமாறியிருக்காங்க. அந்த நடிகர்கள் யார், யார்; அவங்க கெரியர் எப்படி ஆரம்பமாச்சு; எதுனால மிஸ்ஸாச்சுனு இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
-
1 மனோஜ் பாரதிராஜா:
மணிரத்னத்தின் கதை, பாரதிராஜாவின் இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை என மனோஜ் பாரதிராஜா அறிமுகமான தாஜ்மஹால் படத்திற்கு தமிழ் சினிமாவின் பல முக்கியமான பிரபலங்கள் ஒன்றிணைந்தார்கள். ஆனால், இந்தப் படத்தின் பாடல்கள் ஹிட்டான அளவிற்கு படம் வெற்றியடையவில்லை. அதற்கு பிறகு சமுத்திரம் படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்தார்; அல்லி அர்ஜூனா படத்தின் ஹீரோவாக நடித்தார். அடுத்தடுத்து படங்களில் நடித்தாலும் கதை தேர்வில் ஒரு குறை தொடர்ச்சியாக இருந்தது. அதனால், பட வாய்ப்புகள் குறைந்து இப்போது சில படங்களில் நட்புக்காக சின்ன, சின்ன கேரக்டரில் நடித்து வருகிறார்.
-
2 சக்தி வாசு:
இயக்குநர் பி.வாசுவுக்கு அவரது மகன் சக்தியை ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டும் என்கிற ஆசை முன்பிருந்தே இருந்ததால், அவர் இயக்கிய சின்னதம்பி, ரிக்ஷா மாமா போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார். தொட்டால் பூ மலரும் படம் மூலம் சக்தியை தனது இயக்கத்திலேயே ஹீரோவாக்கினார். அதில் வடிவேலு, நாசர், சுகன்யா என பல முன்னணி நடிகர்களை நடிக்க வைத்து யுவன் சங்கர் ராஜாவை இசையமைக்க வைத்திருந்தார். படமும் ஓரளவுக்கு பேசப்பட்டது. அடுத்தடுத்து மகேஷ் சரண்யா மற்றும் பலர், நினைத்தாலே இனிக்கும் என இயல்பான கேரக்டரில் நடித்தவர் திடீரென ஆக்ஷனின் இறங்கியதால் அவரது படங்கள் எதிர்பார்த்த அளவு போகவில்லை. பட வாய்ப்புகள் குறைந்தது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்குப் பிறகு சில நெகட்டிங் விமர்சனங்கள் வந்தது. அதனால் ஏற்பட்ட டிப்ரஷனால் சில சர்ச்சைகளிலும் சிக்கினார். இப்போது மீண்டும் நடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் கதைகள் கேட்டு வருகிறாராம்.
-
3 சாந்தனு பாக்யராஜ்:
இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜ் தான் நடித்த வேட்டியை மடிச்சுக்கட்டு படத்திலேயே தனது மகன் சாந்தனுவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு ஹீரோவான அறிமுகப்படுத்த வேண்டும் என பெரிய படத்திற்காக காத்திருந்தார். அதனால் சுப்ரமணியபுரம், களவாணி போன்ற புதுமுகங்கள் எடுத்த சின்ன பட்ஜெட் படங்களில் நடிக்க சாந்தனுவுக்கு வாய்ப்பு வந்தப்போதெல்லாம் அதில் கமிட்டாகவில்லை. கலைப்புலி தாணு தயாரிப்பில் அவரது மகன் கலா பிரபு இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான சக்கரக்கட்டி படத்தில் சாந்தனு அறிமுகமானார். பெரிய ஓப்பனிங் என்றாலும் படம் ஹிட்டாகவில்லை. அதன்பிறகு சாந்தனு நடித்த சித்து ப்ளஸ் டூ படத்தை பாக்யராஜே இயக்கினார். பிறகு சிறிதும், பெரிதுமாக படங்களில் சாந்தனு நடித்து வந்தாலுல் ஒரு பெரிய வெற்றி என்பது இன்னும் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம்.
-
4 கெளதம் கார்த்திக்:
தாத்தா முத்துராமன், அப்பா கார்த்திக்கிற்கு பிறகு மூன்றாவது தலைமுறை நடிகராக மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானார், கெளதம் கார்த்திக். மணிரத்னம் இயக்கம், அர்ஜூன் வில்லன், அரவிந்த் சாமி ரீ என்ட்ரி, ஏ.ஆர்.ரஹ்மான் இசை என ஒரு பெரிய லான்ச் மட்டுமில்லாமல் தனது அப்பா கார்த்திக்கும் நடிகை ராதாவும் ஒரே படத்தில் அறிமுகமானது போல் கெளதம் கார்த்திக்கும் ராதாவின் இரண்டாவது மகளான துளசியுடன் அறிமுகமானார். இவையெல்லாம் சேர்ந்து கெளதம் கார்த்திக்கின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தாலும் இவரது கரியர் சற்றே குழப்பமாகவே இருக்கிறது. ரங்கூன், இவன் தந்திரம் மாதிரியான கன்ட்டென்ட் படங்களிலும் நடிக்கிறார்; அடல்ட் காமெடி படத்திலும் நடிக்கிறார்; சாதி பெருமை பேசுகிற படத்திலும் நடிக்கிறார் என்பதால் கெளதம் கார்த்திக் எந்த மாதிரியான ஜானருக்கு செட்டாவார் என்பதே தெரியாமல் இருக்கிறது.
-
5 விக்ரம் பிரபு
சிவாஜி, பிரபு வரிசையில் விக்ரம் பிரபுவும் மூன்றாம் தலைமுறை நடிகர். மைனா படத்திற்கு பிறகு இயக்குநர் பிரபு சாலமன் அதே கூட்டணியில் கும்கி படத்தை இயக்கியதால் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருந்தது. படமும் ஹிட்டாக அதற்கு பிறகு விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு போன்ற படங்கள் ஓரளவுக்கு பேசப்பட்டாலும் அதற்கு பிறகு நடித்தப் படங்கள் எதிர்பார்த்தப்படி போகவில்லை. ஒரே மாதிரியான
-
6 சிபி சத்யராஜ்
ஸ்டுடண்ட் நம்பர் ஒன் என்கிற படம் மூலம் அறிமுகமான கல்லூரி ஸ்டுடண்ட்ஸ் மத்தியில் சிபி ரீச்சானாலும் கிராமப்புற ஆடியன்ஸ் இவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், சிபியின் அடுத்தடுத்தப் படங்களான ஜோர், மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ் போன்ற படங்களில் சத்யராஜும் சேர்ந்து நடித்தார். அதில் ஒரளவுக்கு சிபி பட்டித்தொட்டியெக்கும் அறியப்பட்டார். ஆனால், அதன் பிறகு அவர் நடித்த சோலோ படங்கள் சரியாக போகததால் தனது பாணியில் நாணயம், போக்கிரிராஜா போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். அதுவும் பெரிய மாற்றத்தை கொடுக்காததால், தற்போது ரீமேக் படங்களை குறிவைத்திருக்கிறார். மற்ற மொழிகளில் பேசப்படும் சிறிய பட்ஜெட் படங்களை தமிழில் ரீமேக் செய்து வருகிறார்.
-
7 அக்ஷரா ஹாசன்
கமல்ஹாசனின் மூத்த மகளான ஷ்ருதி ஹாசன் சூர்யா நடித்த ஏழாம் அறிவு படம் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு விஜய்யுடன் புலி, அஜித்துடன் வேதாளம், தனுஷுடன் 3 என தமிழ் சினிமாவின் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தெலுங்கு, இந்தி என வேற்று மொழிப்படங்களிலும் நடித்துவிட்டார். ஷ்ருதி ஹாசனைப் போலவே அக்ஷரா ஹாசனும் அஜித் நடித்த விவேகம் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இந்தியில் அமிதாப் பச்சன், தனுஷ் நடித்த ஷமிதாப் படத்தில் நடித்தார். அறிமுகப்படங்கள் பெரிதாக இருந்தாலும் அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் எதுவும் அவருக்கு வரவில்லை.
0 Comments