சொன்னா கேளுங்க, இந்தப் பாடல்களை எல்லாம் கேக்காதீங்க… அழுதா நாங்க பொறுப்பில்ல! #SadVibeSongs 

சினிமா பாடல்கள் நம்மள டிப்ரஷன்ல இருந்து கை புடிச்சு வெளிய கூட்டிட்டு மட்டும் வராது, சில பாடல்கள் அந்த டிப்ரஷன் உலகத்துக்கும் நம்மளை கூட்டிட்டுப் போகும். அந்தப் பாட்டைக் கேட்டதும் ஏன்டா இந்தப் பாட்டை கேட்டது குத்தமா? இப்படி அழ வைக்கிறீங்கனு தோணும். அப்படியான பாடல்களைதான் இந்த வீடியோல பார்க்கப்போறோம். அதாவது #SadVibeSongs மக்களே!

#SadVibeSongs
#SadVibeSongs

ஆராரோ பாட இங்கு யாருமில்லை – பெரும்பாலும் சோகப்பாட்டுனா காதல் தோல்வி பாடல்கள்தான் நமக்கு நியாபகம் வரும். ஆனால், அதைக் கடந்தும் சில வலிகளைச் சொல்ற பாடல்கள் இருக்கு. அதுல முக்கியமான பாட்டுதான் இந்த ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்துல போனஸ் டிராக்கா வரக்கூடிய ஆராரோ பாட இங்கு யாருமில்லைப் பாட்டு. “வீடியோவோட இந்தப் பாட்டைக் கேட்டு சோகமாகவோ, அழவோ கூடாது”னு உங்க நண்பர்கள்கிட்ட பெட்டு கெட்டலாம் கண்டிப்பா தோத்துருவாங்க. குழந்தைகள் காப்பகம்ல இருக்குற ஒரு குழந்தையோட வாழ்க்கையை சொல்ற பாட்டுதான் இது. நா.முத்துக்குமார்தான் வரிகள் எழுதியிருப்பாரு. விதி கண்ணை மூடிவிட்டு தெருவில் எறிந்ததொரு வானவில்லைனு ஒரு வரி வரும். அப்படி அழத்தோணும்.  

போ உறவே – கணவன், மனைவிக்கு இடையில இருக்கக்கூடிய அந்த சின்ன நெருடலை இந்தப் பாட்டுல சொல்லியிருப்பாங்க. பாட்டோட ஓப்பனிங்ல ஒரு டயலாக் வரும் ‘கண்ணீர் விட்டு 18 வருஷம் ஆச்சு’னு. அப்படி நீங்களும் இருந்தா, இந்தப் பாட்டைக் கேளுங்க. கண்ணீர் தானாகவே வரும். காற்றின் மொழி படத்துல வர்ற இந்தப் பாட்டுக்கு காஷிஃப் மியூசிக் போட்ருப்பாரு. “போ உறவே எனை மறந்து உன் கனவுகள் துறத்தியே”னு பாட்டு ஆரம்பிக்கும்போதே அழுகை குரல்வளைய நெரிக்க ஆரம்பிக்கும். “நீ அற்ற இரவு, வீட்டுக்குள் துறவு” பாட்டுலாம் அந்த பிரிவின் வலியை அப்படியே நமக்குள்ள கடத்தும்.

போகும் பாதை – பிசாசு படத்துல வர்ற இந்தப் பாட்டோட பெரிய பிளஸ் உத்ராவோட வாய்ஸ்தான். அப்புறம் இடைல வர்ற வயலின் மியூசிக். அப்படி இருக்கும். எப்பவுமே வயலிக்கு வலியை ஆழமா கடத்தக்கூடிய சக்தி இருக்கு. அதுக்கு இந்தப் பாட்டும் சின்ன எக்ஸாம்பிள். வாழ்க்கைக்கு நம்பிக்கையை கொடுக்குற மாதிரியான பாட்டு தான் இது. ஆனாலும், நம்மள மீறி கண்ணீர் வரும். பாட்டு முடிஞ்சதும் சரி எதாவது போய் பண்ணலாம்னா அது முடியாது. திரும்பவும் கேக்கலாம்னு நம்மள கட்டி போட்ரும். சுரங்கப்பாதை நாம தினசரி யதார்த்தமா கடந்து போற ஒரு வழி அவ்வளவுதான். ஆனால், அதுக்குள்ள நிறைய பேரோட வாழ்க்கை இருக்குனு இந்தப் பாட்டு நம்மக்கிட்ட சொல்லும்.

எள்ளு வய பூக்கலயே / கண்ணழகு ரத்தினமே – அசுரன் படத்துல வர்ற இந்த ரெண்டு பாட்டுமே நம்மள ஏங்க வைக்கிற, அழ வைக்கிற பாடல்கள்தான். படம் வந்தப்போ நியாபகம் இருக்கு, கண்ணழகு ரத்தினமேனு தனுஷ் பாடுன ட்ராக்கை ரிலீஸ் பண்ணுங்கனு நிறைய பேர் கேட்டுட்டு இருந்தாங்க. இன்னைக்கும் பலரோட ஃபேவரைட் இந்த ரெண்டு பாட்டுமே. இழப்புக்கான அவ்வளவு வலிகள் இந்தப் பாட்டோட இசைலயும் வரிகள்லயும் இருக்கும். எள்ளுவய பூக்கலயே பாட்டு சைந்தவி பாடுனாங்கன்றது இன்னும் ஆச்சரியமான விஷயமா இருந்துச்சு. எப்பவுமே பாட்டோட நடுவுல வரும்போதுதான் நம்ம உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல் கண்ணீர் வரும். ஆனால், இந்த எள்ளுவய பூக்கலயே பாட்டுலாம் ஆரம்பிக்கும்போதே கண்ணீர் வந்துரும்.

கனவே கனவே – சோகப்பாட்டுனு வந்துட்டா அதுல காதலை தவிர்த்துட்டு ஒரு லிஸ்ட்டை ரெடி பண்ண முடியாதுல. நிறைய காதல் தோல்வி பாடல்கள் இருக்கு. ஆனால், கேட்டதும் நெஞ்சைப் புடிச்சு அப்படியே உட்கார வைக்கிற பாட்டுனா அது கனவே கனவேதான். காதல் தோல்வினா தலைவன் பியானோவ ஏர்ல வைச்சு வாசிப்பாருனு நெல்சன் கலாய்ப்பாருல. அது எவ்வளவு உண்மைனு இந்தப் பாட்டைக் கேட்டால் புரியும். “கண்கள் ரெண்டும் நீரிலே, மீனைப் போல வாழுதே, காற்றில் எங்கும் தேடினேன் பேசிப்போன வார்த்தையை” வரிகள்லாம் பியூர் டிப்ரஷன் வரிகள்.

கை வீசும் காற்றே – ஸ்ட்ராபெர்ரி படத்துல இந்தப் பாட்டு வரும். ரெண்டு வெர்ஷன் வரும். ரெண்டுமே நம்மள அழ வைக்கக்கூடியதா மட்டும்தான் இருக்கும். குறிப்பா, உத்ரா உன்னிக்கிருஷ்ணன் பாடுனது. இறந்து போய் ஆவியா வந்து சகஜமான வாழ்க்கையை மிஸ் பண்ற உணர்வை அப்படியே பிரதிபலிக்கும். சில நேரம் நம்ம பழைய வாழ்க்கைக்கு போணும்னு நினைப்போம்ல அப்போலாம் இந்தப் பாட்டுக் கேட்டா இன்னும் அதிக வலியை தரும். “பூமியிலே மீண்டும் வந்து புன்னகைக்க வாய்க்குமா? நான் தொலைத்த நாட்கள் எல்லாம் மறுபடியும் மலருமா? எந்த உள்ளம் ஏங்குதே, தந்தை – தாயை தேடுதே, வலிகள் கூடுதே” வரிகள் ரொம்ப உருக்கமா இருக்கும்.

ஆழி அலை நீரும் – நிறைய பேர் இந்தப் பாட்டைக் கேட்ருக்கமாட்டீங்கனு நினைக்கிறேன். விழித்திருனு ஒரு படம் வந்துச்சு. அதுல வைக்கம் விஜயலட்சுமி பாடுன பாட்டு ‘ஆழி அலை நீரும்’. வெங்கட் பிரபுவுக்கு இந்தப் படத்துல பார்வை இருக்காது. டப்பிங் கலைஞரா இருப்பாரு. மகளை ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வர்ற அந்த டைம்ல மகளை தொலைச்சிருவாரு. அப்போ, இந்தப் பாட்டு வரும். இந்த சீன் உங்களுக்கு தெரியலனாலும் இந்தப் பாட்டு கனெக்ட் ஆகும். பாட்டோட மேஜிக்கே அதுதான! “ஓடி அலைந்தோடி நேரங்கள் கடந்தோட மீறும் கண்களில் ஈரம்” வரிலாம் வரும்போது லிட்டரலா அழுதுருவோம். சத்யா மகாலிங்கம்தான் மியூசிக் போட்டு பாட்டும் எழுதியிருப்பாரு.

மண்ணிலே ஈரமுண்டு – கோர்ட்ல கேஸ் ஜெயிச்சதும் சந்துரு, செங்கேனியை தேடி அந்த அறைல இருந்து வெளிய வருவாரு. அதுவரைக்கும் பாட்டு பெருசா பாதிப்பை ஏற்படுத்தாது. மழைல செங்கேனி நிக்கிறதை சந்துரு தூரமா நின்னு பார்க்கும்போது அந்தப் பாட்டும் காட்சியும் நம்மள உடனே அழ வைச்சிரும். ஆனால், அதேசமயம் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்துற பாட்டாவும் இது நமக்கு இருக்கும்.

Also Read: பரத நாட்டியம் டான்ஸர் டு மாஸ் ஹீரோ… ஜெயம் ரவியின் பயணம்!

நான் மேல சொன்ன பாட்டுலாம் பெரும்பாலும் டிப்ரஷன்ல இருக்கும்போது கேக்காதீங்க. மத்தபடி நல்ல ஒரு மூட்ல இருக்கும்போது கேளுங்க. அப்போ, கொஞ்சம் டிப்ரஷன்ல தள்ளுனாலும் பிரச்னை இல்லை. ஏன்னா, இந்தப் பாட்டுலாம் கேக்குறதுக்கு அவ்வளவு வொர்த்து.  கடைசி 10 வருஷத்துக்குள்ள வந்த பாடல்களை தான் கணக்குல எடுத்துருக்கேன். அதுலயும் நிறைய மிஸ் ஆகியிருக்கும். அதை கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top