Boeing 737 விபத்து… இந்தியாவில் எத்தனை நிறுவனங்கள் இதே மாடல் போயிங் விமானங்களை இயக்குகின்றன தெரியுமா?

சீனாவின் China Eastern Airlines-க்குச் சொந்தமான Boeing 737 – 800 விமான விபத்து மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Boeing 737 விபத்து

Boeing 737 - 800
Boeing 737 – 800

சீனாவின் Kunming நகரில் இருந்து Guangzhou நகருக்கு மார்ச் 21-ம் தேதி நண்பகல் 1.11-க்குப் புறப்பட்ட China Eastern Airlines-ன் Boeing 737 – 800 ரக விமானம், 132 பேருடன் பயணித்தது. இதில், 123 பேர் பயணிகள், மற்ற 9 பேரும் விமானிகள் உள்ளிட்ட பணியாளர்கள். இந்த விமானம் Wuzhou நகருக்கு அருகில் இருக்கும் காட்டுப் பகுதியில் 2.22 மணியளவில் விழுந்து நொறுங்கியது. காட்டுப்பகுதியில் விழுந்து நொறுங்கிய நிலையில், அப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட இந்த விபத்து காரணமாகியிருக்கிறது. விபத்துக்கான காரணங்கள் பற்றி விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த விமானத்தில் இருந்த 132 பேரில் ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை. இந்த சம்பவத்தை அடுத்து China Eastern Airlines இயக்கி வந்த அனைத்து Boeing 737 – 800 ரக விமானங்களையும் நிறுத்தியிருக்கிறது.

இந்தியாவில் Boeing 737 – 800 விமானங்கள்

இந்த விபத்தை அடுத்து உலக அளவில் பல்வேறு விமான நிறுவனங்களும் Boeing 737 – 800 விமானங்களில் இருக்கும் பாதுகாப்பு குறித்து ஆய்வுகளை முடுக்கிவிட்டிருக்கின்றன. இந்தியாவில், விமான சேவை பாதுகாப்புக்கென இயங்கி வரும் DGCA, இந்திய விமான நிறுவனங்கள் இயக்கி வரும் Boeing 737 விமானங்களைக் கண்காணித்து வருவதாக மார்ச் 21-ல் அறிவித்திருக்கிறது. இதுகுறித்து பேசிய அந்த அமைப்பின் தலைவர் அருண்குமார், SpiceJet, Vistara, மற்றும் Air India Express நிறுவனங்கள் இயக்கி வரும் போயிங் 737 விமானங்களைக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார். சர்ச்சையில் சிக்கிய Boeing 737 Max முந்தைய மாடலான Boeing 737-ஐ இந்தியாவில் இந்த மூன்று நிறுவனங்களே வைத்திருக்கின்றன.

பொதுவாக விமானங்களில் narrow body planes எனப்படும் அகலம் குறைவான விமானங்களும், wide body planes என்கிற அகலம் அதிகமான விமானங்களும் பயணிகள் சேவைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. விபத்தில் சிக்கிய Boeing 737 அகலம் குறைவான விமானம். உலக அளவில் அதிகம் விற்பனையான விமானம் என்றால் இதுதான். குறிப்பாக, சீனாவில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேலான இந்த மாடல் விமானங்கள் பயணிகள் சேவையில் பயன்படுத்தப்படுகின்றன.

Boeing 737 மாடலில் மட்டுமே 737-800, 737-800, 737 MAX உள்ளிட்ட நிறைய மாடல்கள் உள்ளன. விபத்துக்குப் பிறகு குறிப்பிட்ட 737-800 மாடல் விமானங்களின் கண்காணிப்பு மட்டுமா அல்லது 737 மாடல்கள் அனைத்துக்குமான கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்து தகவல் இல்லை.

இந்திய நிறுவனங்களும் Boeing 737 மாடல் விமானங்களும்!

இந்திய நிறுவனங்கள்
இந்திய நிறுவனங்கள்

Boeing 737 மாடலின் அடுத்த வெர்ஷன்தான் Boeing 737 Max விமானம். இந்த விமானம் கடந்த 2018 அக்டோபர் – 2019 மார்ச் இடைப்பட்ட காலத்தில் மட்டுமே இரண்டு விபத்துகளில் சிக்கியது. இதில், 346 பேர் உயிரிழந்தனர். இதனால், உலக அளவில் இந்த மாடல் சர்ச்சையில் சிக்கியது. இந்தியாவில் Boeing 737 Max மாடலுக்குக் கடந்த 2019 மார்ச்சில் தடை விதிக்கப்பட்டது. போயிங் நிறுவனம் அந்த மாடல் விமானங்களில் சாப்ட்வேர் பிரச்னையை சரி செய்த பிறகு, அந்தத் தடை 2021 ஆகஸ்டில் விலக்கிக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read – Khalid Payenda: வாஷிங்டனில் Uber கார் ஓட்டும் ஆப்கானிஸ்தான் முன்னாள் நிதியமைச்சர்!

1 thought on “Boeing 737 விபத்து… இந்தியாவில் எத்தனை நிறுவனங்கள் இதே மாடல் போயிங் விமானங்களை இயக்குகின்றன தெரியுமா?”

  1. Картинки с добрым утром https://utra-dobrogo.ru/ – это несложный, но чрезвычайно результативный способ улучшить настроение себе и близким с начала дня.

    Красочные и положительные фотографии
    с добрыми пожеланиями помогают начать утро с
    улыбкой и положительными мыслями.
    Они могут вмещать прекрасные виды,
    веселые иллюстрации, мотивирующие
    цитаты или милые животные, которые вносят
    в утро больше радости. Такие картинки просто можно послать товарищам и родственникам через мессенджеры или социальные медиа, делая их
    день лучше. Начав день с хорошего послания, весь день пройдет более успешно и позитивно.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top