தாயின் தாலாட்டைப் போல ஒரு சில ஓசைகள் நமது மனதை இதமாக வருடிவிடும். அதேபோல், சில ஓசைகள் நமக்குத் தூக்கத்தைத் தூண்டும். அப்படியான ஆறுவிதமான ஓசைகள் பற்றிதான் நாம் இந்தக் கட்டுரையில் தெரிஞ்சுக்கப்போறோம்.
தூக்கம்
தண்ணீர், உணவைப் போலவே ஒரு மனிதனின் இன்றிமையாத விஷயங்களில் ஒன்று தூக்கம். நாள் முழுக்க நமக்கு ஏற்படும் மன அழுத்தம் போக்கி, அடுத்த நாளுக்கான முழு உற்சாகத்துடன் உங்களை ஓட வைப்பது தூக்கம்தான். மூளைக்கு உரிய ரெஸ்ட் கொடுத்து, அதன் சோர்வைப் போக்குவதும் தூக்கமே. இதனாலேயே உங்கள் வயத்துக்கேற்றபடி, நிறைவான தூக்கம் முக்கியம் என்கிறார்கள் மருத்துவர்கள்…
இயல்பாகவே சில பேர் சீக்கிரமே தூங்கி விடுவார்கள். ஆனால், இன்னும் பலரோ என்ன செஞ்சாலும் தூக்கமே வர மாட்டேங்குது என்று குறைபட்டுக் கொள்வார்கள். அப்படி, தூக்கம் வராமல் இருப்பவர்கள் சில ஓசைகளைக் கேட்கும்போது தங்களை மறந்து அப்படியே தூக்கத்தில் ஆழ்ந்துவிடுவார்கள் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
தூக்கத்துக்கு உதவும் ஓசைகள் என்னென்ன?
White noise

சத்தம் மிகுந்த சுற்றுப்புறத்தில் தூங்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் White noise, அதற்கு ஏற்றது என்கிறார்கள். White noise என்பது மனிதர்கள் கேட்கக் கூடிய ஓசைகள் அனைத்தையும் சரிசமமாகக் கலந்து, ஒரே டோனில் ஒலிப்பது. பேனில் இருந்து வரும் ரிதமிக்கான ஒலி, உங்கள் அறையில் இருக்கும் ஏசியின் ஹம்மிங் போன்றவை இந்த லிஸ்டில் வரும். இந்த ஒலியைக் கேட்டுக் கொண்டே இருக்கையில், நம்மையும் அறியாமல் தூங்கிவிடுவோமாம். அதேநேரம், தொடர்ச்சியாக அதிக நேரம் White noise-ஐக் கேட்டுக் கொண்டே இருப்பது பல்வேறு பின்விளைவுகளையும் ஏற்படுத்தும் என்கிறார்கள்.
கடல் அலைகள்
ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளின் ஒலியை வேறெந்த சத்தமும் இல்லாத நிலையில், அமைதியாகக் கேட்டு மகிழ்ந்த அனுபவம் இருக்கிறதா? கரைகளை சீரிய இடைவெளியில் தொட்டுச் செல்லும் தண்ணீரின் சீரான ஒலி ஒருவித சுகானுபவத்தை உங்களுக்குக் கொடுக்கும். கடல் அலைகளின் ஓசைகளையும் தொடர்ச்சியாக நாம் கேட்டுக்கொண்டிருந்தால், அவை நம்மை நித்திரையில் ஆழ்த்தும் என்று சொல்கிறார்கள்.
தண்ணீரின் ஓசை

மழை பெய்யும்போது கூரையில் இருந்து தண்ணீர் சொட்டும் சீரான ஒலியைக் கேட்டதுண்டா… அதேபோல், ஆற்று நீரின் சலசலப்பு ஓசை, அருவியின் ஓசை போன்ற தண்ணீரின் மற்ற ஒலிகளில் நாம் ஒன்றினால், அவை மூளையை ரிலாக்ஸாக்கி தூக்கத்தை வரவழைக்கும் திறன் படைத்தவையாம்.
Binaural beats

இரண்டு விதமான ஒலிகளை சின்ன அலைவரிசை மாறுபாட்டில் ஒன்றாக நீங்கள் கேட்கும்போது, மூளையில் ஒருவிதமான மாய பிம்பம் தோன்றும். இதைத்தான் மருத்துவ உலகில் Binaural beats என்கிறார்கள். Sound-Wave therapy-இல் இதைப் பயன்படுத்துகிறார்கள். மன அழுத்தம், கவலைகளை மறக்கடிக்கச் செய்வதற்கான ஓசை என பலவிதமான Binaural beats ஓசைகள் இருக்கின்றன. அந்த வரிசையில் தூக்கத்தைத் தூண்டுவதற்காகவும் பிரத்யேக ஒலிக்கலவை இருக்கிறதாம்.
இயற்கை ஒலி

அடர்ந்த காட்டுக்குள் எங்கோ தூரத்தில் ஒலிக்கும் பறவையின் ஒலி, இலையை அசைக்கும் காற்று, சிறகுகள் அசையும் சத்தம் என இயற்கை எனும் சவுண்ட் என்ஜினீயர் நமக்குக் கொடுக்கும் ஒலிக் கலவைகளின் அனுபவம் அலாதியானது. அப்படியான இயற்கை ஒலி உங்களின் மனதை வருடிவிடும். இதற்காக நீங்கள் காட்டுக்குள்தான் போக வேண்டும் என்றில்லை, இதற்காக தனி ஆப்களும், யூடியூபிலும் சில வீடியோக்களும் இருக்கின்றன.
கிளாசிக்கல் மியூசிக் (60-80 BPM)
ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு வேகத்தைக் குறைத்து, மன அழுத்தத்தைப் போக்கி, இதயத்தை வருடிவிடும் இயல்புகொண்டது இசை. தூக்கத்தைப் பொறுத்தவரை உங்களின் கற்பனையைத் தூண்டிவிடாத மெல்லிசைதான் உங்களுக்குக் கைகொடுக்கும். ஹங்கேரியின் Semmelweis University நடத்திய ஆய்வில் கிளாச்சிக்கல் மியூசிக், இளம் தலைமுறையினர் இடையே தூக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கியப் பங்காற்றுவதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
Also Read –