தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் – வாக்குப்பதிவுக்குப் பிந்தைய தேர்தல் கணிப்புகளை பல்வேறு ஊடகங்களும் வெளியிட்டன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகக் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. ஆளும் அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட 10 கட்சிகளும், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட 9 கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்க்கொண்டன. நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடவே, கமலின் மக்கள் நீதிமய்யம் தலைமையிலான கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகளும், டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க, ஏ.ஐ.எம்.ஐ.எம் உள்ளிட்ட கட்சிகள் என ஐந்து முனைப் போட்டியாகத் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் இருந்தது.
தமிழகத்தைப் போலவே, புதுச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்ற நிலையில், அசாமில் 3 கட்டங்களாகவும் மேற்குவங்கத்தில் எட்டு கட்டங்களாகவும் தேர்தல் நடந்தது. மேற்குவங்கத் தேர்தலில் 35 தொகுதிகளுக்காக கடைசிகட்ட வாக்குப் பதிவு இன்று முடிந்தநிலையில், தேர்தல் நடைமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. அதையடுத்து, ஐந்து மாநிலத் தேர்தல்களின் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய தேர்தல் கணிப்புகளை பல்வேறு ஊடகங்களும் வெளியிட்டன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் – Exit Poll கருத்துக்கணிப்பு முடிவுகள் – எந்த மீடியா என்ன சொல்கிறது?
ஏபிபி – சி வோட்டர்
- அ.தி.மு.க கூட்டணி – 58 முதல் 70 இடங்கள்
- தி.மு.க கூட்டணி – 160 முதல் 172 இடங்கள்
- அ.ம.மு.க கூட்டணி – 0 முதல் 4 இடங்கள்
- மக்கள் நீதி மய்யம் கூட்டணி – 0
- நாம் தமிழர் கட்சி – 0
ரிபப்ளிக் – சி.என்.எக்ஸ்
- அ.தி.மு.க கூட்டணி – 58 முதல் 68 இடங்கள்
- தி.மு.க கூட்டணி – 160 முதல் 170 இடங்கள்
- அ.ம.மு.க கூட்டணி – 4 முதல் 6 இடங்கள்
- மக்கள் நீதி மய்யம் கூட்டணி – 0 – 2 இடங்கள்
- நாம் தமிழர் கட்சி – 0
இந்தியா அஹெட்
- அ.தி.மு.க கூட்டணி – 40 முதல் 65 இடங்கள்
- தி.மு.க கூட்டணி – 165 முதல் 190 இடங்கள்
- அ.ம.மு.க கூட்டணி – 1 முதல் 3 இடங்கள்
- மக்கள் நீதி மய்யம் கூட்டணி – 0 முதல் 2 இடங்கள்
- மற்றவை – 0 முதல் 3 இடங்கள்
இந்தியா டுடே
- அ.தி.மு.க கூட்டணி – 38 முதல் 54 இடங்கள்
- தி.மு.க கூட்டணி – 175 முதல் 195 இடங்கள்
- அ.ம.மு.க கூட்டணி – 1 முதல் 2 இடங்கள்
- மக்கள் நீதி மய்யம் கூட்டணி – 0 முதல் 2 இடங்கள்
- மற்றவை – 0
டுடேஸ் சாணக்கியா
- அ.தி.மு.க கூட்டணி – 46 முதல் 68 இடங்கள்
- தி.மு.க கூட்டணி – 164 முதல் 186 இடங்கள்
- அ.ம.மு.க கூட்டணி – 0
- மக்கள் நீதி மய்யம் கூட்டணி – 0
- மற்றவை – 0